February 11, 2011

Baan Thai

தாய் (Thai) உணவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. கமகமக்கும் உணவு. நாவில் நடனமாடும் சுவைகள். எனக்குத் தெரிந்து மலையாளிகளுக்குப் பிறகு தேங்காய் (தேங்காய்ப் பாலாக)அதிகம் பயன்படுத்துவது தாய்லாந்துகாரர்களாகத்தான் இருக்கும். சூப் முதற்கொண்டு ஸ்வீட் வரை எல்லாவற்றிலும் தேங்காய் பால். I just love the aroma of thai foods:)

நுங்கம்பாக்கத்தில் இருக்கும் Baan Thai உணவகத்திற்கு செல்ல முடிவெடுத்து கிளம்பும்போது நல்ல மழை. வெளில சாப்பிடறதுன்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன். மழை பெஞ்சா என்ன? ஆட்டோல போவோம்ன்னு போய் இறங்கிட்டோம். நல்லாருக்குன்னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு சொல்லி போராடி ரங்க்ஸை கூட்டிக்கிட்டு போனா மதிமுக கட்சி ஆஃபிஸ் மாதிரி கடை காத்தாடுது. எங்க மூணு பேரைத் தவிர வேற யாருமே இல்ல. எப்படியிருக்கும். சரி வந்ததது தான் வந்துட்டோம். என்ன ஆனாலும் சரி ஒரு வாய் பார்த்துடுவோம்ன்னு உட்கார்ந்துட்டோம்.

ஒரு ஐட்டம் பேரும் வாய்ல நுழையாத மாதிரி ஒரு மெனு கார்ட். நல்ல வேளையா அந்தந்த ஐட்டம் கீழே அதப் பத்தின எக்ஸ்ப்ளனேஷன் இருந்தது. டாம் யூம் சூப் ஆர்டர் செய்தோம். தாய் ஸ்டைல் க்ளியர் சூப். லெமன் க்ராஸ் ப்ளேவரோடு, நிறைய காய்கறிகளோடு அட்டகாசமாக இருந்தது. Fried vegetable patties மற்றும் fried tofu ஆகியவற்றை ஸ்டார்டர்ஸாக ஆர்டர் செய்தோம். முதல் ஐட்டம் நம்மூர் வடை போலிருந்தாலும் டேஸ்ட் நன்றாக இருந்தது. இரண்டாவது செமத்தியான விக்கெட். வாயில் வைக்க வழங்கல:( ஆனால் இரண்டிற்கும் பரிமாறப்பட்ட டிப்பிங் சாஸ் ரொம்ப நன்றாக இருந்தது.Veg patties ரொம்ப ஹெவியாக போய்விட்டது. அதனால் மெயின் கோர்ஸிற்கு ஒரு ரைஸும், க்ரேவியும் மட்டுமே ஆர்டர் செய்தோம். Huge portions:) Thai style yello curry with vegetables மற்றும் Thai style fried rice with basil leaves ஆகியவை ஆர்டர் செய்தோம். ரெண்டுமே நன்றாக இருந்தது. ரைஸில் பேசில் (நம்மூர் துளசி மாதிரி ஒரு வஸ்து), கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தது. மற்றபடி இரண்டு ஐட்டங்களுமே flawless:)மெயின் கோர்ஸை ஒன்றோடு நிறுத்தியதற்கு இன்னொரு காரணம் டெசர்ட்ஸ்:) Desserts section in the menu was much inviting. நான் கேட்ட ஐட்டம் சீசனில்லாததால் இல்லையென்றுவிட்டார்கள். ஆனால் அதற்குப் பதிலாக ஆர்டர் செய்த இரண்டு டெசர்ட்டுமே செம்ம்ம்ம சூப்பர். Must try sweets. நம்மூர் பால் கொழுக்கட்டையின் தூஊஊஊஊரத்து சொந்தம் மாதிரி ஒரு ஐட்டம். Sticky rice dumplings in warm coconut milk. இன்னொன்னு water chestnut in chilled n sweetened coconut milk. Slurpppp:))மேலதிக தகவல்கள்

உணவகம் - Baan Thai
உணவு - Thai Cuisine. Veg/Non-veg
இடம் - Khader Nawaz Khan Road, Nungambakkam.
டப்பு - Complete Veg Meal for 2 costs 1000 + taxes. Benjorang உணவகத்தை ஒப்பிடும்போது இது கொஞ்சம் விலை கம்மி. ஆனால் டேஸ்ட்டில் Benjorang முந்திக்கொள்கிறது:)

பரிந்துரை - Thai உணவுகள் பிடிக்குமெனில் கட்டாயம் செல்லலாம். குறிப்பாக அந்த இரண்டு டெசர்ட்டுகளுக்காகவே நான் இன்னொரு முறை போகலாமென்றிருக்கிறேன்:) Otherwise can try. Neither bad nor too too good.

20 comments:

எறும்பு said...

மூணாவது போட்டோல புழு மாதிரி ஏதோ இருக்கு. இது caterpillar soupa?

எல் கே said...

ஹ்ம்ம் பார்க்கலாம்

Chitra said...

Photos......mmmmm...... yummy looking ones!!!!!!!

I love Thai food too.....Same blood!

துளசி கோபால் said...

நியூஸியில் மகள் சொன்னாளேன்னு பெஞ்ஜோரங் போயிட்டு ஒன்னும் சரி இல்லைப்பா:( உள்ளே டெகரேஷந்தான் அட்டகாசமா இருந்துச்சு. எல்லாம் யானையோ யானை!

நம்ம வீட்டுலே கோபாலுக்குத்தான்'தாய்' ரொம்பப்பிடிக்கும்.

எனக்கு அந்த டிஸர்ட்ஸ். அதுலே குட்டிக்குட்டியா நுங்கு மாதிரி ஒன்னு இருக்கு பாருங்க (palm seeds?) அது
ரொம்பப்பிடிக்கும்.

பாங்காக் போனப்ப நல்லா வெளுத்துக்கட்டுனேன்.

சென்னையில் இந்த தாய் ரெஸ்டாரண்டை கவனிக்கலைப்பா.

பெஞ்ஜோரங்தான் கண்ணில் பட்டது:(

theja amma said...

வீட்ல சமைக்கறதே இல்ல போலிருக்கு. ஆனாலும் ஒவ்வொரு ஐடெம் பற்றி படங்களுடன் விளக்கம் அருமை.

Anonymous said...

சில தாய் ஃபுட்ல சேர்க்கிற லெமன் க்ராஸ் வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும்! :)

எறும்பு said...

//நம்ம வீட்டுலே கோபாலுக்குத்தான்'தாய்' ரொம்பப்பிடிக்கும்//

டீச்சர், உங்க கோபாலுக்கு மட்டும் இல்ல இந்த கோபாலுக்கும் தாய் என்றால் இஷ்டம். தாயிற்சிறந்த கோயில் இல்லை.

எறும்பு said...

@ வித்யா
என்ன பானுதாயோ, என்ன இருந்தாலும் பொன்னுத்தாய் மாதிரி வராது

CS. Mohan Kumar said...

With the kind of interest you have in food, can consider starting hotel business :))

R. Gopi said...

யம்மி:-)

Anisha Yunus said...

did u taste fried icecream vidyakkaa? if not,let me tell u,u will never ever get such a dessert from anywhere else. i had tasted it in a thai restaurant near besant bus stand. it is top. cold vanilla ice cream stuffed inside hot coconut balls. must try and update this post. i havent seen any thai restaurant in us though..!!

Raghu said...

Next one...Mainland China is a good choice. Good ambience. Satisfied with starters but not main course

Vidhya Chandrasekaran said...

நன்றி எறும்பு (எப்படிங்க இப்படியெல்லாம் தோனுது உங்களுக்கு).

நன்றி எல்கே.
நன்றி சித்ரா.

நன்றி துளசி மேடம் (Benjorang செம்ம காஸ்ட்லி. இது பரவாயில்லை. அந்த டெசர்ட்டில் இருப்பது water chestnuts).

நன்றி தேஜா அம்மா (வாரத்துக்கு ஓரிருமுறை மட்டுமே)

நன்றி பாலாஜி.

Vidhya Chandrasekaran said...

நன்றி மோகன் குமார் (ஹா ஹா. யார் கண்டா. நடந்தாலும் நடக்கும்).

நன்றி கோபி.

நன்றி அன்னு (நீங்க சொல்றது cascade ரெஸ்டாரெண்ட். சைனீஸ். அதப் பத்தியும் பதிவு போட்ருக்கேன். தேடிப் பாருங்க)

நன்றி ர‌கு (Felt mainland china was not worth for the money. too costly. Ambience alone cannot satisy ur apetite rite:)))

Raghu said...

Mainland China..If I'm right, it is Rs.485 per head. ஸ்டார்ட்ட‌ரில் கொடுத்த‌ அனைத்து ஐட்ட‌ங்க‌ளும் டெலிஷிய‌ஸ்! ஆனா மெய்ன் கோர்ஸ் கொஞ்ச‌ம் சொத‌ப்ப‌ல்..வெரி டிஸ‌ப்பாயின்ட‌ட் வித் வெஜ்...'நான் வெஜ்' சாப்பிட‌க்கூடாதுங்க‌ற‌ ச‌ப‌த‌ம் உடைந்த‌ நாள்..என்ன‌ ப‌ண்ற‌து? நான் புலிய‌ல்ல‌, ப‌சிச்சா புல்லை தின்னுதான் ஆக‌ணும் :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

yummy :))

'பரிவை' சே.குமார் said...

mmmm.... Good one.

Pranavam Ravikumar said...

Super!

Anonymous said...

இலங்கை தமிழர்களும் அதிகம் தேங்காய்ப்பால் பாவிப்பார்கள். வெளிநாட்டிற்குப் போனாலும், தே.பால் போட்டே சமைப்பார்கள். அவ்வளவு தேங்காப்பால் பிரியர்கள். தேங்காப் பூவில் சம்பல் என்று ஒன்று செய்வார்கள். சட்னி போன்றது, ஆனால் தண்ணீர் தன்மை இல்லாதது.

உங்கள் சாப்பாட்டு அனுபவப் பகிர்வுகளைப் படித்தேன். தாய்லாந்திலும், மலேசியாவிலும், ஜப்பானிலும், சீனாவிலும் சில காலங்கள் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன்; படங்களைப் பார்க்கும் போது எல்லா நாட்டு உணவுகளுமே இந்தியர்களுடைய நாவின் சுவைக்காக செய்தவை போலவே இருக்கிறது. உணவில் அதிகமாக மசாலாவும் எண்ணெயும் போடப்பட்டிருப்பது போலவும் தோன்றுகிறது.

Anonymous said...

தாய் உணவு எங்களவர்களுக்குப் பிடித்தமானதாக இருப்பதற்கு அதன் காரமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.