February 17, 2011

நல்லா கத வுடறான்யா

ஜூனியர் இரண்டாவது டெர்மில் எல்லாவற்றிலும் Outstanding மற்றும் Very Good (A) க்ரேட் வாங்கியிருக்கிறார். ஸ்டோரி டெல்லிஙில் மட்டும் B. சாயந்திரமானாலே அவனுடைய புத்தகங்களை தூக்கிக்கொண்டு வந்து சொல்லித் தர சொல்லிக் கேட்பான். ஆல்ஃபபெட்ஸ், நம்பர்ஸ், பிக்சர் கான்வர்சேஷன், ரைம்ஸ் என டெர்ம் போர்ஷன்ஸ் ஒவ்வொன்றாக முடித்து ஸ்டோரிக்கு வரும்போது சார் எண்ட் கார்ட் போட்றுவார். அதென்னவோ புக்கிலிருந்து கதைப் படிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ராஜகுமாரி, நீதிக் கதைகள் என எதையாவது ஆரம்பித்தால் “இது வேணாம்மா. லயன் ஸ்டோரி சொல்லு” என்கிறான். அதுவும் எப்படியாப்பட்ட லயன் ஸ்டோரி? ஒரு முறை சொன்ன கதை இன்னொரு முறை ரிப்பீட் ஆகக் கூடாது. கண்டிப்பாக சிங்கம் யாரையாவது கடிக்கவோ/மிரட்டவோ செய்ய வேண்டும். இவர் வந்து சிங்கத்தை வீழ்த்தி அந்த யாரையோ காப்பாத்த வேண்டும். ஸப்ப்ப்பா..

சென்ற வருட துவக்கத்தில் அம்மாவிற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அந்த ஒன்றரை மாதங்களும் அம்மாவுடன் தான் இருந்தான். நிறைய ஸ்லோகங்கள், பாடல்கள் கதைகள் ஆகியவை கற்றுக்கொண்டான். கடித்து துப்பி அவன் சொல்லும் கதைகளில் ஒன்று


வீடியோவிலிருப்பது

ஒரு ஊர்ல மைக் இருந்துச்சாம் (அம்மாவின் ஸ்டிக் மைக்காக மாறி, நரியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது). தொப்பை பசிச்சுச்சாம். காஆஆஆட்டுக்குப் போச்சாம். மேல பழம் இந்துச்சாம் (திராட்சை கொடுக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருந்ததால திராட்சை ஜெனரலைஸ்ட்டாக்கப் பட்டது). எட்டி எட்டி பாத்துச்சாம். எட்டவே முல்லையாம். உட்னே சீசீ இந்தப் பழம் புள்ள்க்கும் அப்படி சொல்லிட்டு குடுகுடு ஓடிப்போச்சாம். அவ்ளோதா கதை.

அவரின் லயன் ஸ்டோரி சாம்பிள் ஒன்று

ஒரு ஊர்ல லயன் இந்துச்சாம். தொப்பை பசிச்சுச்சாம். ராபிட் வந்துச்சாம். லயன் நான் உன்னை சாப்பிடப் போறேன்னு சொல்லிச்சாம். உடனே ராபிட் ஊஊஊ அழுதுச்சாம். லயன் ஆஆஆஆ சொல்லுச்சாம். உடனே ராபிட் சஞ்சு காப்பாத்து கத்திச்சாம். சஞ்சு ஓடிப்போய் லயன டிஷ்யூம் குத்தினானாம். ஏய் லயன் ஓடிப்போ இல்லன்னா டிஷ்ஷூம் அட்சிருவேன். நான் ஸ்ட்ராஆஆஆங்க் பாய் சொன்னானாம். லயன் பயந்து ஒடியேப்போச்சாம். அவ்ளோதான் கதை.

ஸ்கூலிலிருந்து கத்துக் கொண்டு வந்த இங்லீஷ் வெர்ஷன் ஒன்று

ஒன் டே லயன் வாஸ் ஸ்லீப்பிங் இண்டனன். மவுஸ் கேம் அண்ட் ப்ளேண்ட் ஆன் த லயன். லயன் காட் ஆஆங்கிரி (லொள்ளு சபா மனோகர் மாதிரி படிக்கவும்). லயன் செட் ஐ வில் ஈட் யூ. மவுஸ் செட் டோண்ட் ஈட் மீ. போதும்மா போரடிக்குது.

ஒரிஜினல் வெர்ஷன்

One day lion was sleeping in the den. A mouse came and played on the lion. Lion got angry. It said i will eat you. Mouse said "please dont eat me". இன்னும் கொஞ்சம் கதை பாக்கியிருக்கு. இந்த ரெண்டு லைனே அவனுக்கு போரடிக்குதாம். ஏன்னா ஆக்‌ஷன் இல்லைப் பாருங்க:)

வெரி இண்டலிஜண்ட் பாய். ஸ்டோரி தான் சொல்லவே மாட்டேங்கறான். நாங்க ”சொல்லிக்கொடுத்தாலும் நோன்னு சொல்றான். நீங்க கொஞ்சம் பாருங்க” என்றார் அவன் க்ளாஸ் டீச்சர். நீங்க ஏன் மேடம் மொக்கை கதையெல்லாம் போர்ஷன்ல சேத்தீங்க. ஆக்‌ஷன் ஓரியண்டட் கதைகளை சேர்த்துப் பாருங்க. எங்காளு கலக்குவாராக்கும் என சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை:)

17 comments:

RVS said...

மழலை மொழிக்கு ஈடு எது? ஜூனியர் சீனியர் ஆனதும் இதைப் பார்த்து ரசிப்பார்!! ;-)

Chitra said...

cho chweet! I enjoyed watching the video! so cute!

CS. Mohan Kumar said...

செம. முதல் லயன் கதை தான் ரொம்ப சிரிக்க வைத்தது. சொன்னதும் சூப்பர். நீங்களும் அருமையா எழுதிருக்கீங்க

வீடியோ பாக்க முடியலை (அப்புறம் பாக்குறேன்)

இன்று மதியம் அல்லது நாளை குழந்தைகள் பற்றிய ஒரு ஸ்பெஷல் பதிவு வெளியிடுகிறேன். படியுங்கள். ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.

CS. Mohan Kumar said...

பிரபல எழுத்தாளர் பையனுக்கு ஸ்டோரி டெல்லிங்கில் கம்மி மார்க் போடுவதா? அந்த ஸ்கூலுக்கு எதிரா பதிவர்கள் போர்க்கொடி தூக்க வேணாமா? ஸ்கூல் அட்ரஸ் குடுங்க :))

ஹுஸைனம்மா said...

ஏனோ, போன பதிவில் உங்கள் தோழி உங்கள் கதையைப் படித்துவிட்டு திட்டியது ஞாபகம் வருது!! ;-)))))))

அமுதா கிருஷ்ணா said...

ஆக்‌ஷன் கிங்கா வருவார்.

பா.ராஜாராம் said...

ஹா.ஹா..ஹா..அருமைங்க சஞ்சு!

நானும் மூணு நாலு முறை வீடியோவை பார்த்துட்டன்/ கேட்டுட்டன், விளக்க உரையை நூல் பிடிச்சும் போய் பார்த்துட்டன். அம்பி, ம்ஹும்..! :-)) ( சஞ்சுட்ட சொல்லிராதீங்க வித்யா)

sanju, great!.. love youdaa!

thanx 4 sharing vidhya!

ஈரோடு கதிர் said...

//நல்லா கத வுடறான்யா\\

நல்லா சவுண்டும் :-))))

ஆயிஷா said...

அருமையா எழுதிருக்கீங்க.சஞ்சு அருமை.

சாந்தி மாரியப்பன் said...

உங்க பையனுக்கு நல்ல கற்பனை வளம்ங்க :-)))

தெனமும் புதுப்புது கதைகள் :-))))

Raju said...

பின்னாளில்,உங்கள் வழியிலேயே சஞ்சு ஒரு பெரிய எழுத்தாளனாக வரப் போகும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறதே!

வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லுங்க.
:)

R. Gopi said...

\\புள்ள்க்கும்\\

நிறைய வாட்டி கேட்டேன்.

சுத்திப் போடுங்க வித்யா:-)

கவிதா | Kavitha said...

ஓய்.. டீச்சர் சரி இல்லப்பா..முதல்ல டீச்சரை மாத்துங்க.. புள்ள என்னமா கதை சொல்லுது.. அந்தம்மா க்கு கேக்க தெரியல.. !

சஞ்சு..சூப்பர்..... :) விஷ்ஷஸ் ..!! :)

Anisha Yunus said...

//நீங்க ஏன் மேடம் மொக்கை கதையெல்லாம் போர்ஷன்ல சேத்தீங்க. ஆக்‌ஷன் ஓரியண்டட் கதைகளை சேர்த்துப் பாருங்க. எங்காளு கலக்குவாராக்கும் என சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை:) //

ஹ ஹா... அதானே... :))

பெசொவி said...

குழல் இனிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹா.ஹா..ஹா..அருமை சஞ்சு

விக்னேஷ்வரி said...

ஜூனியருக்கு திருஷ்டி சுத்திப் போடுங்க.