January 9, 2012

Scribblings 09-01-2012

சென்னையின் 35வது புத்தக கண்காட்சி சென்ற ஐந்தாம் தேதி தொடங்கியது. கண்டிப்பாக போகனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். சனிக்கிழமையன்று போய்ட்டு வந்துட்டேன். இந்த தடவை ரொம்பக் கம்மியான புத்தகங்கள் (பட்ஜெட் பிரச்சனை) தான் வாங்கனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். வழக்கம்போல லிஸ்ட்டைத்தாண்டி நிறைய வாங்கிட்டேன். நம்ம யுஎஸ் ரிட்டர்ன் ராஜியோட, பதினோரு மணிக்கு திறக்கற கண்காட்சிக்கு, பத்தரைக்கெல்லாம் போயிட்டோம். நாள் முழுசும் சுத்திகிட்டே இருந்தோம். பதிவுலக நண்பர்கள் சிலரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அரங்கின் பிரமாண்டமும், புத்தகங்களின் எண்ணிக்கையும் மூச்சடைக்க வைத்துவிட்டது. வழக்கம்போல சுஜாதாவோட கணக்கைத் தொடங்கினேன். இந்த முறையாவது வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கனும். பார்ப்போம்.
*********************

புத்தகத்திருவிழாவில் கவனித்த இன்னொரு விஷயம், மக்கள் காமிக்ஸ் புத்தகங்கள் மீது வெறிகொண்டு அலைகிறார்கள். 12 வருஷ கலெக்‌ஷனை 900 ரூபாய்க்கு தருகிறார்கள். என் அண்ணனிடம் 20 வருஷத்து கலெக்‌ஷன்கள் இருப்பதால் நான் வாங்கவில்லை. ஊரில் இவற்றை பத்திரமாக வைப்பதற்கென்றே மரப்பெட்டிகளின் உள்ளே வெல்வெட் துணி என பிரத்யோகமாக செய்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பால்யத்தில் விடுமுறைக்காக ஊருக்குப் போகும்போதெல்லாம், கயித்துக்கட்டிலில் படுத்துக்கொண்டு இரும்புக்கை மாயாவி, லக்கி லுக், டெக்ஸ் வில்லர், சிலந்தி மனிதன் என படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தப் பொங்கலோடு இரும்புக் கை மாயாவிக்கு 40 வயதாகிறதாம். ஹேப்பி பர்த்டே பாஸ்:)
*****************

2012 வாசிப்பு கணக்கை நேற்று தொடங்கியாச்சு. யுவகிருஷ்ணாவின் “அழிக்கப் பிறந்தவன்” நாவலை வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று. சுரேகா தன் விமர்சனப் பதிவில் கீழே வைக்கமுடியவில்லை என்று சொல்லியிருந்தார். உண்மைதான். அங்கங்கே வாத்தியார் எட்டிப் பார்க்கிறார் (பெர்ஃப்யூமை ஸ்ப்ரேவிக் கொண்டான்). அதுசரி சுஜாதா விருது வாங்கினவரிடம் அவர் சாயல் துளியும் இருக்காதா என்ன? ஒன்னும் மட்டும் புரியவில்லை. லக்கி எப்படி மனம்வந்து அணிலின் படம் ஹிட்டாகும் என எழுதியிருக்கிறார்? குட் வொர்க் லக்கி. வாழ்த்துகள்.
****************

நேற்று அதிகப்படியான வேலை சலிப்பில் “நான் ஒருத்தியே எத்தனை வேலை தான் பார்க்கிறது” என புலம்பிக் கொண்டிருந்தேன். இதைக் கேட்ட ஜூனியர், ”அம்மா பிங்கோ சாப்பிடும்மா” என்றான்.

”வீட்ல இல்லையே”

“நான் அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தர்றேன்.”

“வேண்டாண்டா அம்மாக்கு அதெல்லாம் பிடிக்காது.”

“பரவால்ல சாப்பிடும்மா. அது சாப்பிட்டா டூ ஆகிடுவாங்க. அப்ப நீ நிறைய வேல செய்யலாம். சரியா?”

அப்புறம்தான் புரிந்தது. சமீபத்திய பிங்கோ விளம்பரங்களில், அதை சாப்பிட்டால், ட்வின்ஸ் மாதிரி ஆகிடுவாங்க என வருகிறது. அவ்வ்வ்வ். எங்கேயெல்லாம் அப்ளை பண்றாங்க இந்த பசங்க.
***********************

சன் டிவியில் ஒளிப்பரப்பான நண்பன் பட இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் அடிச்ச ஜிங்ஜாங்கை தாண்டி அவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் வெற்றியடைந்ததுன்னா அதுக்கு ஒரே காரணம் ஹிந்தி படத்தின் கதாசிரியர்/டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி தான் என்றார். சீன் பை சீன், காஸ்ட்யூம் முதற்கொண்டு காப்பியடித்துவிட்டு சொந்தமா சிந்திச்சேன், தமிழுக்கு ஏத்த மாதிரி மாத்தினேன் பீலா விட்டுகிட்டு சுத்தும் டைரக்டர்கள் மத்தியில் இந்த ஒரு விஷயத்துக்காகவாவது ஷங்கர் பாராட்டப் படவேண்டியவர். போகியன்று புக் பண்ணியிருக்கேன். பார்த்துட்டு சொல்றேன்:) அந்நிகழ்ச்சியை ஓட்டிய எனது ட்விட்.

ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் - விஜய் #அப்ப அவதார் எடுத்ததுக்காக ஜேம்ஸ் கேமரூன ஹாலிவுட்டின் ராமநாராயணன்னு சொல்லலாமா?

6 comments:

CS. Mohan Kumar said...

நானும் சனிக்கிழமை மதியம் 2 முதல் எட்டரை அங்கிருந்தேன். உங்களை இதுவரை பார்த்ததில்லை. எனவே கண்டு பிடிக்க முடியாம இருக்கும்

லக்கி அணில் ரசிகர் என்பது தெரியாதா?

Bala said...

புது வருசத்தின் முதல் பதிவு.
நல்லா இருக்கு. இனிதே தொடருங்கள்.

Romeoboy said...

\\அப்ப அவதார் எடுத்ததுக்காக ஜேம்ஸ் கேமரூன ஹாலிவுட்டின் ராமநாராயணன்னு சொல்லலாமா?//

:))))

சந்திர வம்சம் said...

"இந்த முறையாவது வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கனும்."

இங்கேயும் வாங்கி அலமாரியில் அடுக்குவதோடு சரி!!!!

Raghu said...

//ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் - விஜய் #அப்ப அவதார் எடுத்ததுக்காக ஜேம்ஸ் கேமரூன ஹாலிவுட்டின் ராமநாராயணன்னு சொல்லலாமா?//

சமீபத்துலதான் இந்த மாதிரி, பொது நிகழ்ச்சிகள்ல ஓவர் பில்டப் குடுக்கறது அதிகமா இருக்கு. தீபாவளியின்போது ஏழாம் அறிவு, இப்போ நண்பன்!

என்னென்ன புக் வாங்கி இருக்கீங்கன்னு ஒரு லிஸ்ட் போட்டிருக்கலாம்

Vidhya Chandrasekaran said...

நன்றி மோகன் குமார்.
நன்றி முகில்.
நன்றி அருண்மொழித்தேவன்.
நன்றி சந்திர வம்சம்.

நன்றி ர‌கு (வாசிப்பனுபவமா பகிரும்போது பார்த்துக்கோங்க:))