February 4, 2009

துணுக்ஸ் - 4/2/09

பிப்ரவரி மாதம் அலைச்சல் மாதமாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த மாதத்தின் அனைத்து வீக்கெண்டும் நான் ரொம்ப பிஸி. நண்பர்களின் திருமணத்திற்க்கு செல்லவேண்டியுள்ளது. அம்மா இப்போவே ஆர்டர் போட்டுட்டாங்க. 'நீ மட்டும்தான் போற. குழந்தைய அலைக்கழிக்காத". யோசிச்சு சொல்றேன்னு சொன்னதுக்கு முதுகுல ஒன்னு விழுந்தது.
***************************************


நேற்று திமுக பொதுக்குழு கூடி எடுத்த முடிவப் பற்றி ஒரு ஆங்கில சேனலில் நீயுஸ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். கனிமொழி அய்யய்யோ தப்பு தப்பு கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களிடம் நேரலையில் சில கேள்விகள் கேட்டாங்க. ஒரு கேள்விக்கு கனிமொழி சொன்ன பதில வைச்சு இன்னொரு கேள்வி கேட்ருக்கனும். ஏன் அவங்களுக்கு தோணலன்னு தெரியல.


கேள்வி : திமுக மத்திய அரசுக்கு கெடு விதித்திருக்கிறதே. நீங்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்குவீங்களா?


கனிமொழி : மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்குவதாலோ, மாநிலத்தில் ஆட்சியை துறப்பதாலோ ஏதாவது மாற்றம் வந்துவிடுமா சொல்லுங்கள்.


அடுத்து சேனலில் கேட்டிருக்க வேண்டிய கேள்வி : அப்புறம் என்னத்துக்கு முதல் ஆளா ராஜினாமா கடிதம் குடுத்தீங்க??
*************************************


மார்க்கெட் போக ஆட்டோகாரர் 30 ரூபாய் கேட்டார்(வழக்கமாக 20 தான்). "பெட்ரோல் விலை ஏறும்போது மட்டும் விலையை கன்னாபின்னான்னு ஏத்துறிங்களே. இப்போதான் பெட்ரோல் விலை குறைஞ்சிடுச்சே. நீங்களும் சார்ஜ் கம்மி பண்ணுங்களேன்" என்றேன். "பெட்ரோல் விலை தான் மேடம் குறைஞ்சிருக்கு. ஆயில் விலை ஏறிடுச்சு" என்றார். யப்பா ஆட்டோக்காரங்களை பேசி ஜெயிக்கவே முடியாது.
***************************


தூரத்து சொந்தம்(யாராவது எவ்வளவு தூரம்ன்னு கேட்டீங்க...) ஒருவரை அம்மா அறிமுகப்படுத்தினார். அவர் என் கல்யாணத்திற்க்கு வரமுடியாத சூழ்நிலையை நொந்துக் கொண்டார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவரைப் பார்த்து சொன்னேன் "நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க". அவர் சொன்னது "----------------- I'm young." அம்மாவிடம் சொன்னதுக்கு அவங்களுக்கு 17 வயசிலேயே கல்யாணம் பண்ணிட்டாங்க என்றார். போற இடத்துல எல்லாம் இதையே சொல்றதுனால ரொம்ப எரிச்சலா இருக்கும்போல என்றார். I really felt sorry for her:(
**************************


26/11 மும்பை தாக்குதல் ஜூரம் குறைந்து மீடியாக்களுக்கு மங்களூர் பீவர் பிடிச்சிருக்குப் போல. எந்த செய்தி சேனலை திருப்பினாலும் இதே தான். தமிழ் சேனல்கள் இன்னும் கொடுமை. ரியாலிட்டி ஷோங்கற பேர்ல இம்சையக் கூட்றாங்க. இப்போ கொஞ்ச நாளா மக்கள் டிவில வரும் ஈழம் பற்றிய வரலாற்றுத் தொடர் நல்லாருக்கு. ஒவ்வொரு தடவை பார்க்கும்போது பாதியில இருந்துதான் பார்க்கிறேன். கரெக்டா எத்தனை மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகுதுன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.
************************

14 comments:

நாகை சிவா said...

கனிமொழி கேள்வி சூப்பர்....

:)))

மீடியாவுக்கு என்ன? ஏதாவது ஒன்னு மாட்டிக்கிட்டு தான் இருக்கு... அவங்க பாடு கொண்டாட்டம் பாக்குற நம்ம பாடு திண்டாட்டம்

கார்க்கிபவா said...

சமூக அக்கறை அதிகம் போலிருக்கு உங்களுக்கு.

/'நீ மட்டும்தான் போற. குழந்தைய அலைக்கழிக்காத". யோசிச்சு சொல்றேன்னு சொன்னதுக்கு முதுகுல ஒன்னு விழுந்த//

பாவம் குழந்தை..

முரளிகண்ணன் said...

சூப்பர் துணுக்ஸ்.


\\அடுத்து சேனலில் கேட்டிருக்க வேண்டிய கேள்வி : அப்புறம் என்னத்துக்கு முதல் ஆளா ராஜினாமா கடிதம் குடுத்தீங்க??
\\

நல்ல ஞாபக சக்தி.



கல்யாணத்துக்கு போங்க. ஆனா கொட்டிகிட்டதைப் பத்தி பதிவு போட்டு எங்க சாபத்துக்கு ஆளாகாதீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

கலந்து கட்டி அடிக்கிறீங்க

ஜீனியர் எப்படி இருக்கிறார்.

உங்க அம்மா சொன்னது சரிதான், அடிச்சதும் சரிதான்

Vidhya Chandrasekaran said...

நன்றி சிவா.

கார்க்கி உன் கமெண்ட் எனக்குப் புரியல.

ஹி ஹி நன்றி முரளிக்கண்ணன்.

வாங்க அமித்து அம்மா. ஜூனியர் நலம்.

கார்க்கிபவா said...

//கார்க்கி உன் கமெண்ட் எனக்குப் புரியல//

அடி குழந்தைக்கு விழல கார்க்கி. எனக்குதான் விழுந்ததனு நீங்க சொல்லுவீங்க. நானும் உங்களதான் குழந்தைன்னு சொன்னேனு சொல்லலாம்னு பார்த்த இப்படி ட்யுப் லைட்டா இருக்கிங்களே

சிங்கை நாதன்/SingaiNathan said...

//அடுத்து சேனலில் கேட்டிருக்க வேண்டிய கேள்வி : அப்புறம் என்னத்துக்கு முதல் ஆளா ராஜினாமா கடிதம் குடுத்தீங்க??
*************************************//
ஆகக காகா :)
anputan
Singai Nathan

தமிழ் அமுதன் said...

///அடுத்து சேனலில் கேட்டிருக்க வேண்டிய கேள்வி : அப்புறம் என்னத்துக்கு முதல் ஆளா ராஜினாமா கடிதம் குடுத்தீங்க?? ////


பார்த்துங்க ஆட்டோ அனுப்பிட போறாங்க ;;;))))

Arun Kumar said...

புல் பார்ம்ல இருக்கீங்க போல ..

கனிமொழி ராஜினாமா கடிதம் கொடுத்தது அக்டோபர் மாதம்..
இந்த மாதம் இதுவரை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்பதை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

நட்புடன் ஜமால் said...

யோசிச்சு சொல்றேன்னு சொன்னதுக்கு முதுகுல ஒன்னு விழுந்தது\\

நல்ல அம்மா

Vidhya Chandrasekaran said...

இப்படி நீ கோக்குமாக்கா யோசிப்பன்னு எனக்குத் தெரியும் கார்க்கி:)

நன்றி சிங்கைநாதன்.

ஜீவன் பொது வாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் பார்க்கமுடியுமா(நான் எப்போ எந்த ஊர்ல இருப்பேன்னு எனக்கேத் தெரியாதே:))

நன்றி அருண். உங்கள் கமெண்ட் பார்த்து ரொம்ப நேரம் சிரிச்சேன்.

ஏன் ஜமால் அண்ணா இந்த கொலைவெறி?

சின்னப் பையன் said...

சூப்பர் துணுக்ஸ்.

தாரணி பிரியா said...

சூப்பர் துணுக்ஸ்.:)

உங்கம்மா சொன்னது சரிதான் வித்யா. ஜுனியரை இப்பதான் தேறிக்கிட்டு வர்றார் எதுக்கு அலைக்கழிக்கணும்,

narsim said...

அட்ரஸ் இன்னாம்மா? ஆட்டோ நுழையுமா வீட்டாண்ட..

க.தி.மு.க..(கனிமொழி தி மு க)