February 18, 2009

ஆய்வகமும் ஆங்கிலமும்

பதிவுலகத்திற்க்கும் மொக்கைப் பதிவுகளுக்கும் (அதாவது நான் எழுதறது மாதிரியான பதிவுகளுக்கு) உள்ள உறவு போன்றது பொறியியல் படிப்புக்கும் ஆய்வகத்துக்கும் உள்ள ரிலேஷன்ஷிப். நான் படிச்சது நிகர்நிலை பல்கலைக்க(ல)ழகம். அதாங்க deemed university. ஆய்வகங்களைப் பொறுத்த மட்டும் பாவம் பண்ண டிபார்ட்மெண்ட்ஸ் மூணு இருக்கு. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில். இந்த மூணு டிபார்ட்மெண்ட் தவிர மத்த டிபார்ட்மெண்ட் பசங்கெல்லாம் நல்லா ஏசி ரூம்ல உக்காந்து பெரிய ஆராய்ச்சி பண்ற மாதிரி "Hello World"ன்னு பிரிண்ட் பண்ற புரோகிராம் அடிப்பானுங்க:( ரொம்பவே பாவப்பட்ட ஜென்மங்க சிவில் டிபார்ட்மெண்ட் பசங்க தான். பாலு மகேந்திரா கேமரா கணக்கா ஒரு ஸ்டேண்ட வச்சிகிட்டு உச்சி வெயில்ல நேர்த்தி கடன் தீர்க்கற மாதிரி நடுரோட்டில நிந்துகிட்டிருப்பானுங்க. நான் நாலு வருஷம் பெஞ்ச தேச்சது EEE டிபார்ட்மெண்ட்ல.


பொதுவா லெக்சரர்ஸ் விட லேப் அட்டெண்டர்ஸ்க்கு தான் மரியாதை ஜாஸ்தியா கிடைக்கும். அவரு தான் பூசாரி மாதிரி. அவர் மனசு வைச்சாதான் internal marks என்ற வரம் விரிவுரையாளர் என்ற கடவுள் மூலமாய் கிடைக்கப் பெறும். Practicalsல அவங்க தயவில்லாம ஒன்னும் பண்ண முடியாது. ஆனா முக்கால்வாசி பேர் ரொம்ப பிரெண்டிலியா பழகுவாங்க. கேண்டீன்ல சாப்பிடும்போது பார்த்தா கூப்பிட்டு கூட உக்கார வைச்சு டீ வாங்கித் தருவாங்க:) சில பேர் நேரெதிர். எப்பவுமே கடுகடுன்னு தான் இருப்பாங்க. விரிவுரையாளர்களை விட இவங்களுக்கு subject knowledge ரொம்ப ஜாஸ்தி. இவங்க எல்லோருக்கும் (atleast 80%) இருக்கும் ஒரே பிரச்சனை ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியாததுதான். Infact சில விரிவுரையாளர்களை விட இவங்க நல்லாவே ஆங்கிலம் பேசுவாங்க. எங்க காலேஜ்ல 40% ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்தவங்க. அதனால எல்லா staffம் இங்கீலிஷ்ல தான் பேசனும். இல்லன்னா பசங்க கலாட்டா பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.

சில நேரங்களில் விரிவுரையாளர்கள்/லேப் அசிஸ்டெண்டுகளின் பேச்சு சரி காமெடியா இருக்கும். மார்க்குக்கு பயந்து கம்முன்னு இருப்போம். உதாரணத்துக்கு,

#முதல் வருஷத்துல எல்லா டிபார்ட்மெண்ட் பசங்களும் workshop கட்டாயம். இரும்பு அறுத்து L joint, V joint பண்ணனும். அதுக்காக இரும்ப ஃபைல் (filing) பண்ணிட்டிருந்தபோது ஒரு பையன் வேகமா தேச்சிட்டிருந்தத பார்த்த lab incharge சொன்னார் "Dont do filefilefilefilefile. Do file file file". அவர் சொல்ல வந்த மேட்டர் வேகமா பண்ணாத. மெதுவா பண்ணு. அந்த வருஷம் முழுக்க இத சொல்லி சொல்லி சிரிப்போம்.

#இரண்டாம் ஆண்டு டிபார்ட்மெண்டில் terror என சீனியர்களால் அடையாளம் காணப்பட்ட lecturers எங்களுக்கு காமெடியன்களாகத்தான் தெரிந்தார்கள். அதில் Loveking என்ற ஒருவர் பண்ணும் லூட்டிக்கு அளவேயில்லை. (Electrical) Machines lab incharge அவர். அவருக்கு "ச" வராது. முதல் நாள் lab instructions என அவர் எங்களிடம் கூறியது "Nobody should shit on the lab". குழப்பத்திலிருந்த எங்களுக்கு பிறகுதான் புரிந்தது he actually meant "Nobody should sit on the lab". நாலு வருஷம் படிப்பு முடிந்தும் கூட இப்போது நண்பர்கள் சந்தித்த போதும் இதை நினைவுகூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தோம். கிளாஸ் நடத்திக்கிட்டே இருக்கும்போது தீடிர்னு ஜன்னல் வழியா காறித்துப்புவார்???!!. அதே மாதிரி கிளாஸ்க்கு வந்ததும் board நல்லா க்ளீன் பண்ணுவார். அத துடைச்சிவச்சிருந்தாலும் மனுசன் உடமாட்டார். அவர் தேய்க்கறதுல டஸ்டர்க்கு ரத்தமே வந்துடும்:)

# அடுத்தது cowgoya மேடம். இவங்க எங்களுக்கு எந்த சப்ஜெக்ட்டும் எடுத்ததில்ல (நல்லவேளை தப்பிச்சோம்). மேடம் மெட்ராஸ் பாஷைல வூடு கட்டுவாங்க. எதாவது தவறு செய்துவிட்டால் அய்ய என்று ஆரம்பித்து இவர் கொடுக்கும் அர்ச்சனை தாங்கமுடியாது. Practical exam தாமதமாக ஆரம்பித்ததால் viva டிலே ஆகிவிட்டது. சாப்பிட்டு வந்துவிடலாம் என நினைத்தபோது யாரும் எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. சரியான பசியோடு மேடம் முன்னாடி போய் உட்கார்ந்தேன். டேபிள் மேல ஒரு கவர் முழுக்க சமோசாக்கள் (எங்க கேண்டீன் சமோசா டாப்பா இருக்கும்). சமோசாவை வாயிலே அதக்கிக்கொண்டு "watish omfa?" என்றார்.
"Pardon me. I dont get u?"
"Dummy omfa?'
"Maam"
(டீ குடிச்சிட்டு)"U girl. U have no ears wat? Tell me om's law."
இப்படியா சமோசாவால செவிட்டு பட்டம் வாங்கி எப்படியோ கப் வாங்காம பாஸ் ஆயாச்சு.

இன்னும் சுவாரசியமான விஷயங்கள் நிறைய நடந்தது. அதெல்லாம் அப்பாலிக்கா சொல்றேன். வர்ட்டா.

28 comments:

நட்புடன் ஜமால் said...

வாட் இஸ் திஸ்

நட்புடன் ஜமால் said...

பதிவுலகத்திற்க்கும் மொக்கைப் பதிவுகளுக்கும் (அதாவது நான் எழுதறது மாதிரியான பதிவுகளுக்கு) உள்ள உறவு போன்றது பொறியியல் படிப்புக்கும் ஆய்வகத்துக்கும் உள்ள ரிலேஷன்ஷிப்.\\

ஆஹா ஆஹா

pudugaithendral said...

நேற்று காலேஜ் பத்தின படம் ஏதும் பாத்தீங்களா?

கொசுவத்தி சூப்பரா சுத்தியிருக்கீங்க.

நட்புடன் ஜமால் said...

\\இன்னும் சுவாரசியமான விஷயங்கள் நிறைய நடந்தது. அதெல்லாம் அப்பாலிக்கா சொல்றேன். வர்ட்டா.\\

சீக்கிரம் போடுங்க

நட்புடன் ஜமால் said...

\\புதுகைத் தென்றல் said...

நேற்று காலேஜ் பத்தின படம் ஏதும் பாத்தீங்களா?

கொசுவத்தி சூப்பரா சுத்தியிருக்கீங்க.\\

கொசு கடிச்சிருக்கும்.

முரளிகண்ணன் said...

\\Dont do filefilefilefilefile. Do file file file".\\

great

:-))))))))))

Vidhya Chandrasekaran said...

நன்றி ஜமால் அண்ணாத்தே.

தென்றலக்கா இந்த பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. இப்போ தான் publish பண்றேன்:)

நன்றி முரளிக்கண்ணன்.

Unknown said...

//"Nobody should shit on the lab"//

அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும்போது இப்படி அநியாயத்திற்கு சிரிக்க வைக்காதிங்க. நீங்க எழுதினத படிக்கிறப்போ ஒரு பத்து வருஷம் பின்னோக்கி போய்ட்டு வந்த மாதிரி இருக்கு.

//இன்னும் சுவாரசியமான விஷயங்கள் நிறைய நடந்தது//

அதையும் அப்பப்போ தட்டிவிடுங்க.

சந்தனமுல்லை said...

lolz!

Arun Kumar said...

சூப்பராக இருந்துச்சு..
ஆபிஸ்ல சத்தம் போட்டு சிரித்து பக்கத்து கேபின்ல இருக்கிற ஆளுங்க எல்லாம் ஒரு மாதிரியா பார்க்குறாங்க

om's Law பதில் ரொம்ப அருமை.
எல்லா engineering காலேஜ்லெயும் இப்படி தான் மொக்கை ஆளுங்க இருப்பாங்க போல..

எங்க காலேஜில் ஒரு முறை எங்க HODயை பார்க்க யாரோ ஒருத்தரு வந்து இருந்தாரு..

அவரும் ரொம்ப நேரமா HOD ரூமுக்கு வெளியேவே நின்னுகிட்டே இருந்தாரு..

HOD அவருக்கிட்ட “ why are you outstanding , come inside ன்னு உள்ளே கூப்படாங்க..
ஏன்னா பண்றது இத போல ஆளுங்க கிட்ட பாடம் படிச்சு நானும் Engineerதான் என்று எவரும் இல்லாத போது யாரும் கேட்காத போது மனசுக்குள்ள சத்தம் போட்டு சொல்லி கொள்ள வேண்டியது தான்

தாரணி பிரியா said...

இதை படிக்கும்போது கரெக்டா எங்க காலேஜ் லேப் டெக்னீஷியன் ஒருத்தங்க வந்தாங்க. படிச்சுட்டு சிரிச்சுட்டே உங்களுக்கு

//விரிவுரையாளர்களை விட இவங்களுக்கு subject knowledge ரொம்ப ஜாஸ்தி.//

இந்த வரிகளுக்காக ஒரு தேங்க்ஸ் சொல்ல சொன்னாங்க.

அப்புறம் இங்கிலீஷ் நோ கமெண்ட்ஸ். ஏன்னா என் இங்கிலீஷ் பிரிட்டிஷ்காரனுக்கே புரியாது. அத்தனை தெளிவா பேசுவேன் :)

subject knowledge இந்த மேட்டரை வெச்சுகிட்டுதான் நானும் எங்க காலேஜ்ல 21/2 வருசமா வேலை செஞ்சு சீட்டை தேச்சுகிட்டு இருக்கேன்

தாரணி பிரியா said...

எங்க காலேஜ்ல இருக்கிற லேப் டெக்னீஷியன் எல்லாருமே ஸ்டூடண்ஸ்கிட்ட ப்ரெண்ட்லியாதான் இருக்காங்க :)

Vijay said...

ஹை வித்யா,
ரொம்ப ரசித்தேன். காலேஜ் லைஃப் தான் எவ்வளவு ஸ்வாரஸ்யமாது?

\\நான் நாலு வருஷம் பெஞ்ச தேச்சது EEE டிபார்ட்மெண்ட்ல.\\
Same Blood :-)

\\விரிவுரையாளர்களை விட இவங்களுக்கு subject knowledge ரொம்ப ஜாஸ்தி.\\
In fact, எலக்ட்ரானிக்ஸ் லெக்சருக்கு 10kohm ரெசிஸ்டர், 100 kohm ரெசிஸ்டருக்கும் வித்தியாசம் தெரியாது. எங்க காலேஜ் லேப் அட்டெண்டரை கவனித்தால் லேபில் நாங்க உடைத்த / எரித்த பொருட்களுக்கான ஃபைன் நிறைய விழாது. பிராஜெக்ட் செய்யும் போது ஒரு மஷினில் ஒரு ஷாஃப்டை செருகி, அதை கடைசி வரையில் எடுக்கவே முடியலை. இன்னிக்கும் எங்க காலேஜ் போனா, மஷின்ஸ் லேப்பில் நாங்க செருகின ஷாஃப்ட் நீண்டு கொண்டு இருக்கும். நல்ல வேளை, அட்டெண்டர் தயவினால் தப்பித்தோம். இல்லைன்னா, புது மஷினே வாங்கிக் கொடுத்திருக்கணும் :-)

மறுபடியும் காலேஜ் தினங்களுக்கு கூட்டிட்டு போயிட்டீங்க. You have rekindled all those nostalgic feelings of my college days.

/Vijay

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

சிரிப் ஸிரப்

கார்க்கிபவா said...

ஸப்பா... முடியல..

ஆனால், ஆசிரியர்களை நக்கலடிக்கும் போக்கை கண்டிக்கிறேன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி KVR.

வாங்க முல்லை.

வாங்க அருண். எங்க HOD அதுக்கும் மேல. அதெல்லாம் அடுத்த பதிவில் சொல்றேன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி தாரணி பிரியா.எங்க டிபார்ட்மெண்ட்ல ஒருத்தர தவிர மத்தவங்க எல்லாம் ரொம்ப பிரெண்ட்லி:)

நன்றி விஜய். தீபாவளி கொண்டாடுனதெல்லாம் அப்புறம் சொல்றேன்.

நன்றி அமித்து அம்மா.

ஏன் கார்க்கி. ரொம்ப மொக்கையாயிடுச்சா?

எம்.எம்.அப்துல்லா said...

உங்களுக்காவது பரவாயில்லை. அட்டெண்டர்ச்தான் இப்படி. நான் படிச்ச காலேஜ்ல சேர்மனே அப்படி :)


அவருக்கு 4 பெண் குழந்தைகள். 2 பேர் திருமணம் ஆனவர்கள். 2 பேருக்கு திருமணம் ஆகவில்லை.அதை இப்படிச் சொன்னார்...

மீ ஃபோர் டாட்டர். டூ மேரிடு. ரிமைனிங் ஐ ஹேவ் டூ டாட்டர்ஸ், டில் நவ் போத் ஆர் கேர்ள்ஸ்.


(இப்ப தெரியுதா நான் ஏன் இப்படி இருக்கேன்னு?)

:))

Truth said...

ஹ ஹ...
இது இல்லா காலேஜுலும் நடக்கிறது தான். ஆனா, தமிழ் கிசு கிசு எழுதும் போது பேரை மாத்தி எழுதுவாங்களே, அது மாதிரி எழுதியிருக்கிறது டாப் :-)
love king புரிஞ்சிடிச்சு.
cowgoya இது என்னான்னு தெரியலயே... cow - கோ/மாடு/பசு. go - போ/செல். ya - ??

இன்னும் கொஞ்சம் க்ளூ தறீன்ங்களா?

Vidhya Chandrasekaran said...

அப்துல்லா அண்ணாத்தே நீங்க சத்யபாமால படிச்சீங்களா:))

நன்றி Truth. cow அப்படியே தமிழ்ல எழுதூங்க:))

Truth said...

ஹ ஹ ஹ... ஒகே ஒகே.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

☀நான் ஆதவன்☀ said...

//"Dont do filefilefilefilefile. Do file file file". அவர் சொல்ல வந்த மேட்டர் வேகமா பண்ணாத. மெதுவா பண்ணு. அந்த வருஷம் முழுக்க இத சொல்லி சொல்லி சிரிப்போம்.//

அதென்ன அந்த வருஷம் மட்டும். இந்த காமெடி நல்லா தானே இருக்கு எப்பவுமே நினைச்சு சிரிக்கலாம்

☀நான் ஆதவன்☀ said...

என்ன கொடுமை இது... எவ்வளவு யோசிச்சாலும் "கௌ சல் யா"ங்கிற ஆன்ஸர் மட்டும் தெரியல...தயவு செய்து சொல்லிடுங்க

Vidhya Chandrasekaran said...

வாங்க ஆதவன். என்னங்க நீங்க இப்படி பப்ளிக்கா எல்லோருக்கும் தெரியற மாதிரி போட்டு உடைச்சிட்டீங்களே:))

narsim said...

//பல்கலைக்க(ல)ழகம். அதாங்க deemed university//

கலக்கலான சொல்லாடல்கள்..

Vidhya Chandrasekaran said...

நன்றி நர்சிம்:)

Bala said...

// நான் நாலு வருஷம் பெஞ்ச தேச்சது EEE டிபார்ட்மெண்ட்ல. //
சூப்பர். நானும் அதே டிபார்மெண்ட்ல தான் படிச்சேன்.
//"watish omfa?" //
ஓம் ஸ் லா சொன்னீங்களா இல்லையா.....
மூனு வருசத்திற்கு முன்னாடி எழுதியிருந்தாலும் நான் இப்போதான் படிக்கிறேன். Nice.