February 3, 2009

ஸ்லம்டாக் மில்லினியர்

நான் கடைசியாகப் பார்த்த ஹிந்தி படம் ஜானே து யா ஜானே னா. தியேட்டரில் ஹிந்தி/ஆங்கிலப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. ஞாயிற்றுக்கிழமை உறவினர் வீட்டு விசேஷத்தை முடித்துவிட்டு மாயாஜால் போனோம். கண்டிப்பா டிக்கெட் கிடைக்காது என்று நினைத்ததிற்க்கு மாறாக நடந்தது. மீடியாக்களின் தயவால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதென் கருத்து. ஒரு தடவை பார்க்கலாம். கரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 10 மில்லியன் ஜெயிக்கிறார் ஜமால். ஒரு கேள்வி பாக்கியிருக்கும் நிலையில் ஜமாலை போலீஸ் கைது செய்கிறார்கள். அவன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டு நிகழ்ச்சியில் அவன் கோல்மால் செய்து பதில் சொல்கிறான் என்று. கேள்விக்கான பதில்கள் தனக்கு எப்படி தெரியும் என்பதை ஜமால் விளக்குவதே கதை. இதில் காதல் கதை ஒன்றும் உண்டு. தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு குறையாமல் போகுது படம்.
சிறு வயது ஜமாலாக வரும் சிறுவனும், சிறுமி லத்திகா, சிறுவயது சலீம் மூவரின் நடிப்பும் கிளாஸ். இர்பான் கானுக்கு தீனி பத்தவில்லை. தேவ் படேல், இர்பான் கான், செளரப் ஷுக்லாவும் பேசிக்கொள்ளும் சீன்கள் சூப்பர். அதே மாதிரி தாஜ்மஹாலில் ஜமால் கைடாக அடிக்கும் லூட்டிகள் ROTFL வகை. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஒகே ரகம் தான். சுக்விந்தர் சிங்கின் குரலில் ஜெய் ஹோ பாட்டு இன்னும் கொஞ்ச நாளுக்கு டான்ஸ் பீவரில் இருக்கும். படம் ஒகே.போன வாரம் Fashion மற்றும் Dostana படங்களை டிவிடியில் பார்த்தேன். Fashion படத்தின் பெரிய ஆச்சரியமாக கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே நடித்திருந்தார்கள். இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் (அதுவும் ஹிந்தி சினிமாவில்) காட்டுவதை மட்டுமே செய்வார்கள். இந்தப் படத்தில் நடித்துக் காட்டியிருக்கிறார்கள். தாம் தூமில் கங்கணா சப்பி போட்ட மாங்கொட்டை போல் ரொம்ப கேவலமா இருப்பார். இந்தப் படத்தில் கனகச்சிதம். போதைக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் அவர் எடுக்கும் முடிவு:( அதே போல் பிரியங்கா சோப்ராவும் நன்றாக செய்திருக்கிறார். வெற்றியின் போதை கண்களை மறைக்கும்போது அவர் நடந்துகொள்ளும் விதம் சூப்பர்ப்.Dostana. இந்தப் படம் நல்லாருக்குன்னு சொன்னவன் சென்னை வரட்டும்ன்னு வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். Typical Yash movie. மனுசன் துட்டு நிறைய வச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம படமா எடுத்து தள்றார். வீடு தேடும் இரு இளைஞர்கள் (அபிஷேக், ஜான் ஆப்ரஹாம்) தாங்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என பொய் சொல்லி பிரியங்கா சோப்ராவிடம் பொய் சொல்லி அவருடன் தங்குகிறார்கள். ரெண்டு பேருக்கும் பிரியங்காவின் மீது காதல். பிரியங்காவிற்க்கு தன் பாஸ் பாபி தியோலின் மீது காதல். கடைசியில் யார் யாருடன் சேர்கிறார்கள் என்பதே மிச்சக்கதை. நிறைய இடத்தில் சிரிப்பை வரவைக்கின்ற காட்சிகள். ஆனால் அபிஷேக்கும் ஜானும் ஸ்கோர் பண்ண வேண்டிய இடங்களில் கோட்டை விடுகிறார்கள். கண்ணமூடிட்டு பார்க்கலாம்:)

11 comments:

narsim said...

//ஞாயிற்றுக்கிழமை உறவினர் வீட்டு விசேஷத்தை முடித்துவிட்டு மாயாஜால் போனோம்//

அங்கு தானே நானும் அன்னிக்கு.. ஜஸ்ட் எஸ்கேப் ஆகிட்டீங்கனு நினைக்கிறேன்

narsim said...

//தாம் தூமில் கங்கணா சப்பி போட்ட மாங்கொட்டை போல் ரொம்ப கேவலமா இருப்பார்//

பொறாமை? கூல்

narsim said...

படம் நல்லாத்தாங்க இருந்துச்சு

Vidhya Chandrasekaran said...

வாங்க நர்சிம். நாங்க 2 மணிக்காட்சிக்கு சென்றோம். நீங்க? படம் நல்லாதாங்க இருந்தது. ஆனா மீடியாவின் hype காரணமாக நான் ரொம்ம்ம்பவே எதிர்பார்த்துட்டேன். அப்புறம் கங்கணா மேட்டர் :x

நட்புடன் ஜமால் said...

\\சிறு வயது ஜமாலாக\\

நான் நடிக்கலையே ...

கார்க்கிபவா said...

ஆனா தோஸ்தானாவில் என் ஆளு சூப்பரா இருப்பா. பிரியங்காதாங்க.. அட நம்புங்க

pudugaithendral said...

3 படமும் இன்னமும் பார்க்கவில்லை.

பார்க்கணும்.பாத்துட்டு சொல்றேன்.

Vidhya Chandrasekaran said...

ஜமால் நான் பதிவெழுதும்போது உங்கள வம்புக்கிழுக்கலாம்னு தான் நினைச்சேன். அப்புறம் வேணாம்னு விட்டுட்டேன்.
*******

கார்க்கி நிஜமாவே பிரியங்கா சூப்பரா தான் இருக்கா. ஆனா தோஸ்தானாவில் பாபி தியோல ஜோடியாப் போட்டு சொதப்பிட்டாங்க:(
***********

சீக்கிரமே பாருங்க தென்றல் சிஸ்டர்.

நட்புடன் ஜமால் said...

\\வித்யா said...

ஜமால் நான் பதிவெழுதும்போது உங்கள வம்புக்கிழுக்கலாம்னு தான் நினைச்சேன். அப்புறம் வேணாம்னு விட்டுட்டேன்.\\

அப்படியெல்லாம் விடப்படாது.

நம்ம வால் கோச்சிக்கும்.

வேலையே இல்லாம ரெஸ்ட் எடுக்குறோம் ஏதாவது வேல கொடுக்கனும்.

முரளிகண்ணன் said...

மூன்றில் பேஷன் தான் டாப் என்று சொல்ல வருகிறீர்களா?

Vidhya Chandrasekaran said...

இல்லை முரளி.ஸ்லம்டாக் தான் டாப்.