February 19, 2009

Main Street - Residency Towers

காதலர் தினத்தன்று சேலத்திலிருக்க வேண்டிய நான் புரோகிராம் கேன்சல் ஆனதால் தாம்பரத்திலேயே இருக்கவேண்டியதாய் போயிற்று. தோழியின் கல்யாணத்துக்கு போகமுடியவில்லை என்ற சோகத்தை மறக்க (காரணம் வேணும்ல)தி.நகரில் இருக்கும் ரெசிடெண்ஸி டவர்ஸில் பஃபே செல்வதென முடிவானது. மூணு பேருக்கு டேபிள் புக் செய்திருந்தோம். கடைசி நேரத்தில் என் தம்பி ஜகா வாங்கிட்டான். 12.30 மணிக்கு ஆரம்பித்த பஃபேக்கு 1 மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பஃபே ஹால் வித்தியாசமான் ஃபீல் கொடுத்தது. கொஞ்சம் hi-fi ரங்கநாதன் தெரு சந்திப்புக்கு சென்றால் எப்படி இருக்கும்? அந்த feel இருந்தது. லண்டனில் இருக்கும் main street இப்படித்தான் இருக்குமாம். யார் கண்டா? சரி over to the spread.

பச்சை கலரில் வாயில் பெயர் நுழையாத சைனீஸ் சூப் ஒன்று டேபிளுக்கு வந்தது. It was too creamy. வாயில் வைக்க வழங்கவில்லை. வெஜிடபிள் கிராக்கெட்ஸ் என்ற starter ரொம்ப நல்லாருந்தது. Salads were awesome.

Mexican corn salad, tofu என்றழைக்கப்படும் சோயா பாலிலிருந்து செய்த பனீரும் பேரீச்சம்பழமும் கலந்த iron salad, பழங்களுடன் cream கலந்த eve's salad, korean cabbage kimchi என எல்லாமே தூள்.

அன்றைய counter ஸ்பெஷல் - சென்னா சமோசா. சுமாராகத்தான் இருந்தது. (நாங்கள் ராணிப்பேட்டையிலிருந்தபோது தள்ளுவண்டியில் சாட் விற்பார்கள். அங்கே 12 ரூபாய்க்கு சென்னா சமோசா சூப்பரா இருக்கும். இதை உள்ளே தள்ளிவிட்டு ஒரு மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜூஸ் குடித்தால் டின்னர் முடிஞ்சிடும்).

முக்கால்வாசி main course ஐட்டங்கள் சுமாராகத் தான் இருந்தன. வழக்கம்போல naan டேபிளில் சர்வ் செய்யப்பட்டது. Taj mahal pulao, Cleopatra fingers, Broccoli and bamboo shoot stir fry, Paneer and mutter ki bhurji, Subji takyari.
நள தமயந்தி மசாலா, Subji takyari இரண்டும் தான் நன்றாக இருந்தன. மற்றவை எல்லாமே ரொம்ப சுமார் தான். இன்னொரு பெரிய குறையாக (எங்களுக்கு) தெரிந்த விஷயம் உணவு சூடாக இல்லாதது. ரொம்பவே ஆறிபோயிருந்தது. (இத்தனைக்கும் நாங்கள் சென்றது 12.30-2 slot. The first slot). ஓரளவுக்கு warm-ஆக இருந்திருக்கலாம். இந்த பிரச்சனை காரணமாக, Diana Pasta, Onion paradise noodles, Nutri baingan ki tarkari போன்ற உணவுகளின் டேஸ்ட் எடுபடாமல் போனது.

For those who have a sweet tooth here comes the feast. 75% desserts டக்கரா இருந்தது.


Caramel custard, Custard Pudding, பால் பாயாசம் மூன்றும் அட்டகாசம். சுட சுட குளோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிட்டிருக்கிறீர்களா? I call that heaven (வெண்ணிலா ஐஸ்க்ரீமோடு சூடான கேரட் அல்வா makes good combination too). வெண்ணிலா, ஸ்டராபெர்ரி ஐஸ்க்ரீம் ஏழெட்டு topping options உடன். கேமராவில் பாட்டரி டவுன். அதனால் நிறைய படங்கள் எடுக்க முடியவில்லை:(


பரிந்துரை
- பஃபே உணவுகளிம் பெரிய disadvantage என்னன்னா ருசியில் ஒரு consistency இருக்காது. நாங்க போகும்போது சுமாராக இருந்த spread இன்னொரு நாள் சூப்பரா இருக்கும் (இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் போனபோது நன்றாக இருந்தது). ஆனால் ரிலாக்சாக அமர்ந்து, அமைதியாக சாப்பிடனும்னா தயவு செஞ்சு weekend-ல போகாதீங்க. வாரஇறுதியில் பலாபழத்தை ஈ மொய்ப்பது போல அப்படி ஒரு கூட்டம். அதே மாதிரி சம்பளம் வாங்கின உடனே போங்க. இல்லன்னா யாரையாவது ட்ரீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லுங்க:)


மேலதிக தகவலகள்
உணவகம் - Main Street - Residency Towers (Only Buffet)
இடம் - பாண்டி பஜார், காசி ஆர்கேட் பக்கத்தில்
டப்பு - 1000 ரூபாய் (இருவருக்கு. Inclusive of taxes). இது weekend விலை. வேலைநாட்களில் கொஞ்சம் குறைவாக இருக்கும். May be 990 bucks:)
தொலைப்பேசி - 28156363
பொறுமையா இவ்ளோ நேரம் படிச்சவங்களுக்கு இந்த படம் போனஸ்:)

29 comments:

கார்க்கிபவா said...

எனக்கு பிடித்த இடம். ஆனால் இதை விட குறைவான் விலையில் ராதா பார்க் இன்னில் நல்ல உனவு கிடைக்கிறது என்பது என் கருத்து.. தயவு செய்து சவேரா பியானோ பக்கம் மட்டும் போகாமல் இருப்பது வயுத்துக்கும் பர்ஸூக்கும் நல்லது

Vidhya Chandrasekaran said...

ராதா பார்க் இன் கேள்விபட்டிருக்கேன். இனிமே தான் போகனும். சவேரா பக்கமே தலைகாட்ட மாட்டேன்னு ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே சபதம் எடுத்துட்டே. It sucks big time:)

நட்புடன் ஜமால் said...

அட மீண்டும் சாப்பாடா

நட்புடன் ஜமால் said...

ஆசையாதான் இருக்கு

ஆனால் இங்க கிடைக்குமா தெரியாது.

அருண் said...

Residency Towers மேல இருக்கும் உணவகம் ரொம்ப நல்லா இருக்கும். ஈவினிங் போய் உட்கார்ந்தா, எழுந்து வர மனசே வராது. காலை டிபனும் நல்லா இருக்கும். டின்னர் பில், 3500 (2 தலை).

Vidhya Chandrasekaran said...

வாங்க ஜமால். அதுக்கென்ன நீங்க இங்க வரும்போது சாப்பிடலாம்:)

அருண் நீங்க சொல்றது "The Crown" restaurant. அவ்வளவு காசுக்கு சாப்பாடு வொர்த் இல்லைன்னு நினைக்கிறேன். ஆனா perfect place for dating/romantic dinner:)

தமிழ் அமுதன் said...

பசி நேரத்துல இத பார்க்கவோ, படிக்கவோ வேணாம்னு
முன்னாடியே சொல்லி இருக்கலாம்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

=எனக்கு நீங்க கடைசில போட்டோ ஜீனியர் போட்டோ விருந்து தான் புடிச்சிருக்கு.

முரளிகண்ணன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ். கல்யாண விருந்துக்குப் பதிலா இங்கயா?

Cable சங்கர் said...

வித்யா.. எனக்கும் பிடித்த இடம் கூட ராதா பார்க் இன் தான்... நல்ல சுவையுடன், நிறைய அயிட்டங்கள்

அதற்கு அப்புறம் பஞ்சாபி தாபா இன் செனடாப் ரோடு..

தேவன் மாயம் said...

என்னப்பா
சாப்பாடு மணம் தூக்குதே!

Vidhya Chandrasekaran said...

ஹி ஹி ஜீவன் அடுத்த தடவை டிஸ்கி போட்டுடறேன்.

நன்றி அமித்து அம்மா.

ஆமாம் முரளிக்கண்ணன்.

தேவன் மாயம் said...

ச்சை கலரில் வாயில் பெயர் நுழையாத சைனீஸ் சூப் ஒன்று டேபிளுக்கு வந்தது. ///

சிக்கன் கிளியர் , வெஜி கிளியர் தான் பெஸ்ட்..

Vidhya Chandrasekaran said...

வாங்க கேபிள் சங்கர். ஆனா ரியல் ரோட்டோர தாபாக்களின் சுவை அங்கில்லை என்பதென் அபிப்ராயம்.

வாங்க தேவன்மயம்:)

Vidhya Chandrasekaran said...

ஆமாம் தேவன்மயம். பஃபே போன்ற சமாச்சரங்களுக்கு கிளியர் சூப் தான் பெஸ்ட்:)

தேவன் மாயம் said...

அதே மாதிரி சம்பளம் வாங்கின உடனே போங்க. இல்லன்னா யாரையாவது ட்ரீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லுங்க:)//
ரெண்டாவது சொன்னதுதான் பெஸ்ட்..

தேவன் மாயம் said...

கவிதை பிடிக்குமா உங்களுக்கு?
http://abidheva.blogspot.com/2009/02/10.html
சும்மா கேப்பில விளம்பரந்தான்

நாகை சிவா said...

Residency போனது இல்லை. நோட் பண்ணிக்குறேன்.

Rain Tree, Ambica Emperor, Park Sherton, Harrington Tower (4 Res irruku)இதுக்கு எல்லாம் கொஞ்சம் நம்பி போகலாம்.

Rain Tree க்கும் Park Sherton க்கும் கொஞ்சம் Vallet பலமாகவே வேட்டு வைக்கும் :)

Vidhya Chandrasekaran said...

வாங்க சிவா. 1.5 வருஷத்துக்கு முன்னாடி Rain Treeல ட்ரீட்டுக்கு போயிருக்கேன். Main course and desserts super:) மத்த இடங்கள இனிமே தான் ட்ரை பண்ணனும்.

Vijay said...

mmmm yummy :-)

500 ரூபாய் ஸ்வல்ப ஜாஸ்தியாகிதே :-)

சந்தனமுல்லை said...

இந்த ரெசிடென்ஸி ஆம்பியன்ஸ்..ரோட்டோர பெஞ்சுல உட்கார்ந்து சாப்பிடற மாதிரியான அனுபவத்துக்கு ஓக்கே! நீங்க சொல்றதுபோல கன்ஸிஸ்டென்ஸி ஒல்ட் ரெசிடென்சியோட கம்பேர் செய்யும்போது ஒக்கே தான்! பொதுவா டீம் லஞ்ச்-ன்னா டீஃபால்டா இந்த ஆப்ஷனும் இருக்கும்! அதனாலயே குடும்பத்தோட போறதுன்னா இங்கே அவாய்ட் செஞ்சுடறது!! raddison kebab factory என்னோட ஆல் டைம் ஃபேவரிட்!! :-)

Vidhya Chandrasekaran said...

வாங்க விஜய். ஆமாம் 500 ரூபாய்க்கு சோறு வொர்த் இல்ல:(

முல்லை ஒரு தடவை raddison போயிருக்கேன். Loong back. Kebab factory போனதில்ல:)

எம்.எம்.அப்துல்லா said...

அடப்பாவி...அதேநாள் சரியா 2 மணிக்கு நான் அங்க இருந்தேன். உன்னைய எனக்குத் தெரியாது. ஆனால் மாப்பிள்ளையத் தெரியுமே!!! எப்படி மிஸ் பண்ணுனேன்????

:(((((

Vidhya Chandrasekaran said...

அடடா அப்துல்லா அண்ணே நாங்க 1.45 எஸ் ஆகிட்டோம். ஆனா எனக்கு உங்களை தெரியுமே:)

Truth said...

சாப்டதுக்கு முன்னடி, பின்னாடி உங்க வெயிட் எவ்ளோன்னு கவனிச்சீங்களா? :-)

கொஞ்சம் இத பாருங்க...
http://memynotepad.blogspot.com/2009/01/blog-post.html

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

narsim said...

பதிவு..சுவை...

Vidhya Chandrasekaran said...

Hey Truth i'll adjust the calories for the rest of the day accordingly:)

Thanku Narsim:)

Arun Kumar said...

//டப்பு - 1000 ரூபாய் (இருவருக்கு. Inclusive of taxes). இது weekend விலை. வேலைநாட்களில் கொஞ்சம் குறைவாக இருக்கும். May be 990 bucks:)//

:))) இந்த recession நேரத்திலும் வார வாரம் ஹோட்டல்களுக்கு திக் விஜயம் செய்து வாழ் வைக்கும் உங்களுக்கு மவுண்ட் ரோட்டில் பெரிய கட் அவுட் வைக்க re commend பண்றேன்.

சன் ஞாயிறு மதுரைக்கு போய் இருந்தேன்.. ஒரிஜினல் சவுத் இண்டியன் உணவுண்ணா மதுரையை அடிச்சுக்க முடியாது...