June 17, 2009

கையேந்தி பவன்கள் - ஒரு மினி ஆராய்ச்சிக்??!! கட்டுரை

நான்கு சக்கர தள்ளுவண்டியில் ரோட்டோரங்களில் உணவு விற்கும்... ஹலோ இப்படியெல்லாம் கையேந்தி பவன்க்கு (கை.ப) விளக்கம் குடுத்தா நீங்க டென்ஸனாயிடுவீங்க தானே. நான் அதெல்லாம் பண்ணப் போறதில்ல. போன மாதம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது கை.ப பற்றிய பேச்சு வந்தது. சில பேர் கை.பவில் சாப்பிட்டாலே வயிற்றுப் பிரச்சனைகள் வருமென்ற ரேஞ்சில் பேசிக்கொண்டிருந்தார்கள். கை.பகளின் தீவிர ரசிகையான என்னை இந்த வார்த்தைகள் ரொம்பவே காயப்படுத்திவிட்டன. கை.பக்களை எப்படி அணுகவேண்டுமென்பதையும், நட்சத்திர ஹோட்டல்களை விட அவை பெஸ்ட் என நான் எண்ண என்னக் காரணம் என்பதையும் யோசித்ததின் விளைவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரை (நிஜமாவே ஆராய்ச்சி பண்றவங்க மன்னிச்சுக்கோங்கப்பா)

நிறைய பேருக்கு பானிபூரி கடைகள், பக்கோடா விற்கும் கடைகள் எல்லாமே கையேந்தி பவன் என்ற நினைப்பு. அது தவறு. அவை எல்லாம் ஸ்ட்ரீட் புட்களில் (street food) பாஸ்ட் புட் (fast food) கேட்டகிரியில் வரும். அண்ணா நகரிலுள்ள கார்த்திக் டிபன் செண்டர், தி.நகரிலுள்ள பிரில்லியண்ட் டுட்டோரியல் அருகிலிருக்கும் சப்தகிரி எல்லாம் கை.பக்களுக்கு ஒரு படி மேல். அவை அட்வான்ஸ்டு வெர்ஷன்ஸ்:) டிபிக்கல் கை.பக்கள் மாலை ஆறு ஆறரை மணிவாக்கில் ஆரம்பித்து நள்ளிரவு வரை செயல்படும். உணவுகள் ரொம்ப சல்லிசான விலைக்கு கிடைக்கும். ஏ.சிக்கான கரண்ட் பில், வெயிட்டர் சம்பளமென எதுவும் உங்கள் தலையில் விடியாது:)

பொதுவாக கை.பக்களில் கிடைக்கும் உணவுகள் என்னன்னு பார்த்தா
இட்லி
தோசை (பொடி, ஊத்தப்பம், முட்டை)
ஆம்லெட்
ஹாஃப் பாயில்
பரோட்டா (பிளெயின்/கொத்து)
அசைவ உணவுகள் (சிக்கன்/மட்டன் பிரியாணி)
இவற்றிற்கு தொட்டுக்க சாம்பார்/சிவப்பு சட்னி/தேங்காய் சட்னி/குருமா/சால்னா.

நான் வெறும் சைவ கை.பக்களை மட்டுமே ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ளேன் (என்னைப் பொறுத்தவரை முட்டையும் சைவம் தான். ஹி ஹி).

#கை.பக்களில் சாப்பிடால் வயிற்று பிரச்சனை வராது. ஆனால் தயவு செய்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் நீரை குடிக்க வேண்டாம். Corporation water is the culprit. அப்ப அதே தண்ணில தான் சமைக்கிறாங்கன்னு கேப்பீங்கதானே. சமைக்கும் போது தண்ணி கொதிநிலைக்கு உட்படுத்தப்படுவதால் உணவுகளில் பிரச்சனை இல்லை. கை.பக்களில் சாப்பிடுவதற்கு முன் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் வாங்கிக்கொள்வது உத்தமம்.

#அடுத்ததாக கை.பக்கள் அமைந்திருக்கும் இடம். சாக்கடைப் பக்கத்திலோ, புழுதிப் பறக்கும் சாலைகளிலிருப்பதை தவிர்ப்பதும் நலம். ஓரளவுக்கு சுத்தமான, கொஞ்சமே கொஞ்சம் ரோட்டிலிருந்து உள்வாங்கியிருக்கும் கை.பக்கள் நலம் பயக்கும்.

மேற்கூரிய இரண்டு விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு கை.பக்களின் அட்வாண்டேஜ்களைப் பார்ப்போம்.

#உணவகங்களில் பரிமாறப்படும் உணவு பிரெஷ்ஷானதா என்பதில் சந்தேகமே. அதாவது உணவுகளின் மூலப் பொருட்கள் (இட்லி/தோசை மாவு, Base gravies) ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பதப்படுத்தி வைத்திருப்பார்கள். நீங்கள் சாப்பிடும் பனீர் தோசையோ, க்ரீன் பீஸ் மசாலா தோசையோ நேற்றைய மிச்சமான கிரேவியை உட்டாலக்கடிப் பண்ணி செய்ததாக இருக்கும். ஆனால் கை.பக்களில் பிரிட்ஜ் வசதி கிடையாது. கவனித்திருப்பீர்களேயானால் வண்டியில் இருக்கும் உணவு பொருட்கள் தீரும் வரை கல்லா கட்ட மாட்டார்கள். அந்த வகையில் கிடைக்கும் அயிட்டங்கள் பிரெஷ் எனக் கொள்ளலாம்.

#பெரிய பெரிய ஹோட்டல்களின் கிச்சனைப் பார்த்தீங்கன்னா இன்னொரு தடவை அங்கே போக யோசிப்பீங்க. அங்கிருக்கும் சுத்தங்களை ஒப்பிடும்போது 70% கை.பக்கள் படு ஹைஜீனிக். தட்டின் மேல் வாழை இலையோ/மைக்கா பேப்பரோ போட்டு பரிமாறுவார்கள். (வாழை இலையே பெஸ்ட்.)

#நம் டேஸ்டுக்கு ஏற்றார் போல் உணவு கிடைக்கும்.
"அண்ணா பெப்பர் தூக்கலா, ஒரு கல் உப்பு ஜாஸ்தியா போட்டு ஒரு டபுள் ஆம்லெட்."
"பாஸ் எண்ணைய் கம்மியா விட்டு கொஞ்சாம் முறுகலா ஒரு தோசை"
"அக்கா ஊத்தப்பத்துல கொஞ்சம் வெங்காயம் போடறீங்களா?"
"சார் இந்தப் பரோட்டாவ மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் கல்லுல போட்டுத் தாங்களேன்."
"கொத்துப் பரோட்டால முட்டை போடாம சால்னா மட்டும் போட்டுப் பண்ணித்தாங்களேன்"

மேற்கூறிய எந்தவொரு டயலாக்கையும் ஏதாவதொரு உணவகத்தில் சொல்லிப் பாருங்கள். ஊரப் பார்க்கப் போ என விரட்டிவிடுவார்கள்.

#முக்கியமான விஷயம். பர்ஸ் பத்திரமாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் ஒருத்தருக்கும் 25 அல்லது 30 ரூபாய் தாண்டாது. 2 இட்லி,ஒரு தோசை, ஒரு ஹாஃப் பாயில் எல்லாம் சேர்த்தால் கூட 20 ரூபாய் தாண்டாது. வயிறு நிறைய சாப்பிடலாம்.

#எந்த நேரத்திலும் உணவு கிடைக்கும். 9 மணிக்கெல்லாம் இட்லி ஓவர் என சொல்லும் சரவணபவன் போலில்லாமல் 12 மணிக்குக் கூட (அதிர்ஷடமிருக்கும் பட்சத்தில்) சுட சுட இட்லி கிடைக்கும்.

#ரெகுலர் கஸ்டமருக்கு பெரிய ஹோட்டல்களில் தரப்படும் மரியாதை கை.பக்களில் எப்போதுமே கிடைக்கும். உடனுக்குடன் கேட்டவை கிடைக்கும். சட்னி, சாம்பார் முதற்கொண்டு. கொலைப் பசியோடு இருக்கும்போது ஆர்டர் பண்ண அயிட்டம் வரும் வரைக்கும் பக்கத்து டேபிள்காரரின் வாயைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவஸ்தையிருக்காது.
அடுத்த கப் சாம்பாருக்கு அரை மணிநேரம் வெயிட் பண்ண வேண்டிருக்காது.

மினி கட்டுரைங்கறதால இத்தோடு நிறுத்திக்கிறேன் (இதுக்கு மேல ஒன்னியும் இல்லங்கறது வேற விஷயம்).

டிஸ்கி : கட்டுரை முழுக்க முழுக்க ஆராய்ச்சியாளரின் சொந்தக் கருத்தும்/அனுபவமுமே. மாற்றுக் கருத்து தெரிவிக்கும் போட்டிக் கட்டுரையாளர்களுக்கு அடுத்த ரெஸ்டாரெண்டில் ஆகும் பில்லை செட்டில் செய்யும் தண்டனை வழங்கப்படுமென்பதை மிக மிக மிகப் பணிவம்புடன் தெரிவித்துக் கொல்கிறேன்:)

41 comments:

rapp said...

இன்னிய தேதிக்கு சாப்ட வர்றவங்களை மனுஷங்களா நடத்துறது இவங்கதான். கையேந்தி பவன்ல நல்லா சாப்பிட்டு, சும்மானாச்சுக்கும் சீன் போடற கூட்டம்தான் இந்த வயித்துப் பிரச்சினை வதந்தியை கெளப்பி விடுறது:):):)

அ.மு.செய்யது said...

நீங்க எழுதிய பதிவுகள்லயே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

ஏன்னா கையேந்தி பவனுக்கும் எங்களைப் போன்ற வடசென்னை வாசிகளுக்கும் அப்படியொரு பிணைப்பு.

அப்புறம் எப்பன்னா வியாசர்பாடி பக்கம் வந்தீங்கன்னா பாருங்க‌, சென்னையில எங்கயுமே கிடைக்காத பர்மீஸ் புட்இங்க இருக்க கையேந்தி பவன்களில் கிடைக்கும்.

இது குறித்தான விளக்கங்களை இங்கே பாருங்க...

அக்னி பார்வை said...

வசதி என்னன்னு பார்த்திங்கன்ன, நாமே நமக்கு எப்ப்டி வேணும்னு சொல்லிக்கலாம், அப்புறம் நிலா இருந்தா தினம் தினம் நிலாச் சோறுத்தான்

☀நான் ஆதவன்☀ said...

//மாற்றுக் கருத்து தெரிவிக்கும் போட்டிக் கட்டுரையாளர்களுக்கு அடுத்த ரெஸ்டாரெண்டில் ஆகும் பில்லை செட்டில் செய்யும் தண்டனை வழங்கப்படுமென்பதை மிக மிக மிகப் பணிவம்புடன் தெரிவித்துக் கொல்கிறேன்:)//

நீங்க சொன்ன கருத்தெல்லாம் ரொம்ப ரொம்ப கரெக்ட் வித்யா. மாற்று கருத்தே இல்லை

சந்தனமுல்லை said...

ஆகா..சூப்பர் போஸ்ட் வித்யா! கை.ப-க்களின் டேஸ்டே தனி! ஹாஸ்டலில் இருந்த நாட்களில் எங்களுக்கு ஆதரவு கொடுத்ததே கை.ப-க்கள்தான்! :-)


//யோசித்ததின் விளைவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரை (நிஜமாவே ஆராய்ச்சி பண்றவங்க மன்னிச்சுக்கோங்கப்பா//

LOL!

Anonymous said...

காய்ச்சல் சமயத்தில் இந்த கையேந்தி பவன் இட்லி ரொம்ப்பா நல்ல irukkum

Arun Kumar said...

சூப்பர்.. சென்னை கை ஏந்தி பவன் களை அடிச்சுக்க முடியாது.
ஜீவி கழுகார் ஆந்தையார் போல தேடி தேடி சாப்பிட்டு இருக்கீங்க வாழ்க வளமுடன்

Kathir said...

நல்ல ஆராய்ச்சிங்க.....
அப்படியே சிக்கன், மட்டன் இதையெல்லாம் கூட சைவமா நினைச்சு ஆராய்ச்சிய தொடர்ந்து செஞ்சு பதிவு போட்டா இன்னும் சந்தோஷப்படுவோம்.....

:)))

ஆயில்யன் said...

வெளியூர் பயணங்களின் போது முதலிலேயே முடிவெடுத்துவிடுவது அங்கு இரவுநேர கையேந்தி பவன்களை கண்டுபிடித்து தின்னுதீர்க்கவேண்டும் என்ற எண்ணம்தான் இரவு நேர சூடான இட்லிக்கு ஈக்குவல் என்னா இருக்கு போங்க :)))))

ப்ரியமுடன் வசந்த் said...

கையேந்தி பவனில்லைன்னா இன்னைக்கு பேச்சலர் லைஃப் இல்லை

Truth said...

//தெரிவித்துக் கொல்கிறேன்

கொல்லப் போறீங்களா? கொல்லுங்க கொல்லுங்க :-) உண்மையில் இது spelling mistake ஆன்னு தெரியல. ஆனா meaning correct-a தான் வருது.

நான் 'சமைப்பது எப்படி'ன்னு ஒடு பதிவு போடனும்ன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். சுமார் 2.5 வருடங்களா சமைச்சிக்கிட்டு இருக்கிறேன், தனியா. எலிஜிபிள் தானே பதிவு போட? :-)

Vidhya Chandrasekaran said...

நன்றி ராப்.
நன்றி செய்யது (பர்மா பஜார்ல ஒரு தடவை மொய்ங்கா மட்டும் சாப்பிட்டிருக்கேன். ஆனா ஆட்டுக் கால் சூப் இல்லாம சாப்பிடதால சுமாரா தான் இருந்தது)
நன்றி அக்னிபார்வை.
நன்றி ஆதவன்.
நன்றி முல்லை.
நன்றி மயில்.
நன்றி அருண்.
நன்றி கதிர்.
நன்றி ஆயில்யன்.
நன்றி வசந்த்.
நன்றி ட்ரூத் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை)

தராசு said...

இப்பல்லாம், கை.பவன்களிலும் கேன்ல இருக்கற மினரல் வாடர் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க வித்யா.

பனகல் பார்க் பக்கத்தில் இருந்த கடைகளை தூகிட்டங்களேன்னு வருத்தமா இருக்கு. அந்தக் கடைங்க இருந்த வரைக்கும், ஷாப்பிங் போனமா, குடும்பத்தோட போய் சாப்டமான்னு இருந்தோம்.

கார்க்கிபவா said...

சூப்பருங்கோ... அருமையான ஆராய்ச்சி..

கையேந்தி பவன் இடலியை அடிச்சிக்கவே முடியாது..

Dhiyana said...

கையேந்தி பவன்களில் பரோட்டா நல்லாயிருக்கும். அவங்க மாவைத் தூக்கிப் போட்டு மடிப்பதே தனி ஸ்டைல்.

Vidhya Chandrasekaran said...

நன்றி தராசு.
நன்றி கார்க்கி.
நன்றி தீஷு.

எம்.எம்.அப்துல்லா said...

இது கட்டுரை.

:)

எம்.எம்.அப்துல்லா said...

//(பர்மா பஜார்ல ஒரு தடவை மொய்ங்கா மட்டும் சாப்பிட்டிருக்கேன். ஆனா ஆட்டுக் கால் சூப் இல்லாம சாப்பிடதால சுமாரா தான் இருந்தது)

//

அதுக்கு ஆல்ட்டர்நேட்டிவா வாழைத்தண்டு சூப்பு இருக்கும். டேஸ்ட் ஆட்டுக்கால் சூப்பைவிட ச்சும்மா பிச்சுக்கிட்டு போகும்.

pudugaithendral said...

இதுதான் மினி கட்டுரையா வித்யா???கொழும்புவில் நாங்கள் இருந்த வீட்டுக்கு அருகே இருந்த ஒரு கடையில் கொத்து பரோட்டா, இடியாப்பம் சொதி எல்லாம் சூப்பரா இருக்கும். அந்த ஞாபகம் வந்திருச்சு.

ஆராய்ச்சிகட்டுரை சூப்பர்.

Deepa said...

சூப்பர்! எனக்கு உடனே ஒரு கை.பவனுக்குப் போய் சாப்பிடனும் போல இருக்கு!

எத்தனை அட்வாண்டேஜஸ் லிஸ்ட் பண்ணி இருக்கீங்க. நிஜம்மாவே சீரியஸான ஆராய்ச்சிக் கட்டுரை தான். ஏதாவது பத்திரிகைக்கும் அனுப்பலாம். பாராட்டுக்கள் வித்யா.

S.A. நவாஸுதீன் said...

கை.ப. பற்றி நல்ல ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை. சென்னைவாசிகளின் ஏகோபித்த பாராட்டு கிட்டும். வாழ்த்துக்கள் வித்யா. நமக்கு இந்த கை.ப. அனுபவமே இல்லைங்கோ.

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
//(பர்மா பஜார்ல ஒரு தடவை மொய்ங்கா மட்டும் சாப்பிட்டிருக்கேன். ஆனா ஆட்டுக் கால் சூப் இல்லாம சாப்பிடதால சுமாரா தான் இருந்தது)

//

அதுக்கு ஆல்ட்டர்நேட்டிவா வாழைத்தண்டு சூப்பு இருக்கும். டேஸ்ட் ஆட்டுக்கால் சூப்பைவிட ச்சும்மா பிச்சுக்கிட்டு போகும்.
//

அத்தோ மொய்ங்கோக்கு இந்த வாழைத்துண்டு சூப் தான் மெயின்.ஆட்டுக்கால் சூப் எல்லாம் ஆல்டர்னேடிவ் தான்.

மேலும் இந்த‌ வாழைத்தண்டு சூப் இல் ப‌ச்சை மீன் வ‌டித்த‌ த‌ண்ணீரையும்
அஜ்ன‌மோடோ உட‌ன் சேர்ந்து க‌ல‌ந்திருப்பார்க‌ள்.இந்த‌ விஷ‌யம் ப‌ல‌பேருக்கு தெரியாது.

S.A. நவாஸுதீன் said...

ச்சும்மா பிச்சுக்கிட்டு போகும்.

????????????????????

Vidhya Chandrasekaran said...

நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி தென்றலக்கா.
நன்றி தீபா.
நன்றி நவாஸுதீஙன்.

மீள் வருகைக்கு நன்றி செய்யது. மீன் தண்ணீர் கலந்திருக்கு என்று தெரிந்து தான் அதைக் கலக்காமல் சாப்பிட்டேன். அந்தக் காம்பினேஷனில் சாப்பிட்டு சூப்பராக இருந்தது என்று அண்ணாக்கள் (8 பேர் போனோம்) சொன்னாங்க:)

விக்னேஷ்வரி said...

Great Points of your research. ஆனா போட்டோஸ் மிஸ்ஸிங்.

Thamira said...

பிரமாதமான ஆராய்ச்சிக்கட்டுரை.! உண்மையில் சுற்றுப்புறங்கள் சரியாக இருந்தால் கையேந்திபவன்தான் இன்றைக்கு சாப்பிட பெஸ்ட் சாய்ஸ்.!

மணிஜி said...

நல்லா சாப்டாச்சு..ஆனா இப்ப கைல காசு இல்லியே..அக்கவுண்ட்ல வச்சுக்கங்க..(ஆமாம் நீங்க என் பதிவுகள் படிச்சிருக்கீங்களா)

Vidhya Chandrasekaran said...

நன்றி விக்னேஷ்வரி.
நன்றி ஆதி.
நன்றி தண்டோரா.

ஆகாய நதி said...

Oh My God! I missed a lot :(

Appa doesn't like k.b's... So i am following his way :)

Good post Vidhu!

அது ஒரு கனாக் காலம் said...

செமை டேஸ்ட்டியான பதிவு .... டெல்லியில் தீடீரென இது போன்றி கை . ப வை மூடிய சுப்ரீம் கோர்ட்டை , நிறய பெரிய மனிதர்களும் / பொது மக்களும் டிவி இல் வாங்கு வாங்குன்னு ...விளாசிட்டாங்க. அப்பரம் என்ன ஆச்சுன்னு தெரியாது .

இங்கு துபாயில் ...இது போன்று தெருவில்/ கடைக்கு வெளியில் கிடைக்கும் ஒரே சாதனம், ஷவர்மா ...பாக்சிங் பஞ்ச் பாக் போல ஒன்னு இருக்கும், அதுல இருந்து சுரண்டி சுரண்டி ..அதை எடுத்து . ஒரு பண்ல வச்சு , அதோட கொஞ்சம் கைகரியும் சேர்த்து, மயோனீஸ் , சாஸ் எல்லாம் போட்டு ...எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள் ...( நான் சாப்பிட்டதில்லை ....என்ன அது சிக்கென் ..நான் முட்டை கூட சாபிடுவது கிடையாது ) !!!!!!

இங்க சமீபத்தில நல்ல பெரிய உணவகத்தில் இருந்து பார்சேல் வாங்கி சாப்பிட ஒரு குடும்பம், தன இரண்டு குழந்தைகள இழந்தது அதை படிக்க
http://trichisundar.blogspot.com/2009/06/blog-post_17.html

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆகாயநதி.
நன்றி அது ஒரு கனாக்காலம்.

வெண்பூ said...

நல்ல கவரேஜ் வித்யா.. நன்றி..

கே.என்.சிவராமன் said...

'டங்க்' கவரேஜ் :-) நைஸ்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Vidhya Chandrasekaran said...

நன்றி வெண்பூ.
நன்றி பைத்திய்க்காரன் சார்.

Mukhilvannan said...

விஷயத்தெளிவுடன் கூடிய ரஞ்சகமான பதிவு.
என்னைப் போன்ற பாமரர்களுக்கு என்றே ஒரி மினி-அகராதி போட்டால் நல்லது. “சால்னா” “ஹாஃப்பாயில்” போன்ற வார்த்தைகள் நாங்கள் கேள்விப்படாதவை. அவ்வளவு மடி நாங்கள்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

சகாதேவன் said...

கை பவன்களுக்கு
கை கொடுத்த தெய்வம் நீங்கள்
சகாதேவன்

Vidhya Chandrasekaran said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி.
நன்றி சகாதேவன்.

"உழவன்" "Uzhavan" said...

ஆஹா.. அருமையா அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். லீ மெரிடியன் பக்கத்துல இருக்கிற கை.பவனில் இபோதும் சாப்பிடும் வழக்கம் எனக்கு உண்டு.

R.Gopi said...

ரொம்ப அனுபவிச்சுதான் எழுதி இருக்கீங்க........

நீங்க ஒரே சமயத்துல எவ்ளோ இட்லி சாப்பிடுவீங்க...... (வீட்டுல / கையேந்தி பவன்ல)

அப்புறம் அந்த பில் மேட்டர்.... ஞாபகம் இருக்கட்டும்......

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன்.
நன்றி கோபி.

பவள சங்கரி said...

அட கையேந்தி பவனும் தப்பலையா வித்யாவின் பார்வையில்.......உண்மைதான் வித்யா நம்ம வீட்டு அடுப்படியில உட்கார்ந்து அம்மாகிட்ட கேட்கற மாதிரி வேற எங்க போய் கேட்க முடியும் கையேந்தி பவனைத் தவிர......இப்பல்லாம் தண்ணீர் கூட நல்ல கேன் தண்ணீர் பயன் படுத்தி சுத்தமா செய்யறதால சாப்பிட முடியுது......அடுத்த முறை சென்னை வரும்போது கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன்......