April 7, 2010

Technology has improved so much you know

பாடி பாய்ஸ் டீமின் குமார் சச்சினுடன் சேர்ந்து சிரிக்கிறான்
உலகக்கோப்பையைக் கையில் பிடித்தபடி

முந்தாநாள் வயசுக்கு வந்த கலைசெல்விக்கு
தன் வீணையையும் வெள்ளைத் தாமரையையும்
கடன் கொடுத்திருக்கிறாள் கலைமகள்

இடதுபுறம் திரும்பி நின்று
நேராய் பார்த்து சிரிக்கும்
ராஜாவையும் கமலாவையும்
இடப்பக்கத்திலிருந்து சிவன் பார்வதியும்
வலப்பக்கத்திலிருந்து அம்மாவும்
வலக்கையுயர்த்தி ஆசிர்வதிக்கிறார்கள்
கைகளிலிருந்து கொட்டுகிறது பூக்கள்

வானளந்த வாமணன் உசரத்தில்
நடந்து வரும் அய்யாவின் காலடியில்
வெள்ளை மாளிகை

முடி சிலுப்பி
புருவம் நெரித்து
சிறுத்தை சீறுகிறது
சே குவேராவென

மருந்துக்குக் கூட மரமில்லாத இடத்தை மறைத்தபடி நிற்கிறது
ப்ரெஞ்ச் விண்டோவும் ஜெர்சி பசுக்கள் மேயும்
ஸ்வீடிஷ் புல்வெளியும் கொண்ட வீடு

மீண்டும் தலைப்பு

18 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Paleo God said...

வாஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கலக்கிட்டீங்க.

:)

விக்னேஷ்வரி said...

வழக்கத்திலிருந்து வித்தியாசமான ஒரு சிந்தனை, நாம் சாக்கு சொல்லும் தலைப்போடு. ரொம்ப நல்லாருக்கு வித்யா. சூப்பர்.

Raghu said...

//முடி சிலுப்பி
புருவம் நெரித்து
சிறுத்தை சீறுகிறது
சே குவேராவென//

திருமாவ‌ள‌வ‌னா?...ஹி..ஹி..

//கொலைவெறிக் க‌வுஜைக‌ள்//

உண்மைதான் :)

Chitra said...

மருந்துக்குக் கூட மரமில்லாத இடத்தை மறைத்தபடி நிற்கிறது
ப்ரெஞ்ச் விண்டோவும் ஜெர்சி பசுக்கள் மேயும்
ஸ்வீடிஷ் புல்வெளியும் கொண்ட வீடு

...... எப்படிங்க? வித்யா, வித்யாதான்.
You didn't take the improved technology for granted.

Unknown said...

அவதாராய் மாறிய விஜயெல்லாம் விட்டுட்டிங்க :-)

நல்லா இருக்கு வித்யா

Vidhya Chandrasekaran said...

நன்றி டிவிஆர் சார்.
நன்றி ஷங்கர்.
நன்றி விக்கி.
நன்றி ரகு.
நன்றி சித்ரா.
நன்றி கேவிஆர்.

மணிகண்டன் said...

good..good

pudugaithendral said...

நல்லா இருக்கு

எறும்பு said...

அருமையான கவிதை :)
எத்தனை தடவை படித்தாலும் புரியவே புரியாத ....... இது தேவலாம்

"உழவன்" "Uzhavan" said...

ஒன்னும் புரியல :-(

Vidhya Chandrasekaran said...

நன்றி மணிகண்டன்.
நன்றி கலா அக்கா.

நன்றி எறும்பு (ரைட்டு. இனிமே அடிக்கடி எழுதிடலாம்).

நன்றி உழவன் (கிர்ர்ர்ர்).

Vidhoosh said...

:) yeah! it has.

ராகவேந்திரன் said...

இதற்கு பெயர் தான் பின் நவீனத்துவமோ,
நீங்கள் போன கட்டுரையில் குறிப்பிட்டது போல ஜெமோவின் கட்டுரை போல எனக்கும் கிர்ரடிக்கிறது
என்னமோ போங்க வெயில் காலம் வந்தாலே பிரச்சினை தான் எல்லோருக்கும்
தோழமையுடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
http://thurvasar.blogspot.com

Rajalakshmi Pakkirisamy said...

aiyo :)

Vidhya Chandrasekaran said...

நன்றி விதூஷ்.
நன்றி ராகவேந்திரன்.
நன்றி ராஜி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குங்க .. :)

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2010/04/blog-post_12.html

விருது கொடுத்திருக்கிறேன்.