July 15, 2010

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...

வாழ்க்கைல நிம்மதி தரக்கூடிய விஷயங்களில் தூக்கமும் ஒன்று. சிலருக்கு தூக்கத்துல கூட நிம்மதி இருக்காது. எதுனா டெரரான கனா வந்து எழுப்பிவிட்டுடும். சிலரோ அவங்க நல்லா தூங்கினாலும் பெரிசா கச்சேரி பண்ணி பக்கத்துல படுத்துருக்கவங்கள தூங்க விடாம பண்ணிடுவாங்க. எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வாய்க்கப்பெற்றவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள். நானும் அந்த வரத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன். ஒரு காலத்தில். ஹும்ம். அது ஒரு அழகிய நிலாக் காலம்.

பள்ளி படிக்கும்போதெல்லாம் இரவு ஏழரைக்கே சாமியாட ஆரம்பித்துவிடுவேன். எட்டும் மணிக்கெல்லாம் தூங்கி விடியற்காலை 5.30 அல்லது 6 மணிக்கு முழிப்பது வழக்கமாகவே இருந்தது. பரீட்சை நேரங்களில் மட்டும் 4.30 மணிக்கு எழுந்து ரிவைஸ் செய்வது வழக்கம். என்றைக்குமே அதிகம் படிச்சதில்லை. ப்ளஸ் டூவில் கணக்கிற்கு மட்டும் ட்யூஷன் போனேன். ட்யூஷன் முடியவே 7.30 ஆகிவிடும். அப்போ படுக்க செல்வது 9 அல்லது 9.30 என ஷிப்ட் ஆனது. காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப்போடு கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட முடியாதபடி பேரிடியாக இருந்தது காலேஜ் டைமிங். 7.30 மணி முதல் 3.30 வரை காலேஜ். 7.30 மணி காலேஜுக்கு 6 மணிக்கு பஸ் வரும். அப்படியென்றால் நான் தினமும் 5 மணிக்கே எழ வேண்டும். சாயந்திரம் 3.30 மணிக்கு காலேஜ் விட்டாலும் வீடு வந்து சேர ஆறு மணிக்கு மேலாகிவிடும். நண்பர்களோடு விளையாட/ஊர்சுற்ற, ரெக்கார்ட், அசைன்மெண்ட் என முடித்து, கொட்டிக்கொண்டு படுக்க எப்படியும் பத்தாகிவிடும். எட்டு மணி நேர தூக்கத்துக்கு ஒரு மணி நேரம் குறைகிறதே என அம்மாவிடம் செமத்தியாக ஃபீல் பண்ணி அதை விட செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொள்வேன். பள்ளி முதற்கொண்டு அம்மா எங்களுடனே எழுந்துவிடுவார். டீ போட்டு கொடுத்து தூங்காமல் படிக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுவும் 2000த்தில் நானும் தம்பியும் முறையே ப்ளஸ் டூ, டெண்த் என இரண்டு பேருமே போர்ட் எக்ஸாம்க்கு அப்பியர் ஆனோம். அதனால் ஒருநாள் என்னுடனும் ஒரு நாள் அவனுடனும் உட்கார்ந்து காவல் காப்பார்கள். ஆ.வி/கு.மு/மங்.மலர் என ஏதாவது ஒன்றை அம்மாவும் புரட்டிக்கொண்டிருப்பார்கள்.

காலேஜ் படிக்கும்போது சனி ஞாயிறுகளில் மற்ற ஐந்து நாட்களுக்கும் சேர்த்து வைத்து தூங்குவேன். காலையில் பத்து வரை தூக்கம். பின்னர் அருமையான டிபன். பதினொன்றை வாக்கில் டீ. எண்ணைய் குளியல். மதியம் சாப்பாடு. ஒரு பெரிய குட்டித்தூக்கம். விளையாட/நண்பர்கள் வீட்டிற்கு/ அரிதாய் அம்மாவிற்கு ஏதேனும் உதவி. நைட் நோ டின்னர். டிவியில் ஏதாவது படம் பார்த்துவிட்டு மறுபடியும் தூக்கம். காலேஜ் முடியும் வரை இந்த ரொட்டீன் தொடர்ந்தது. பின்னர் வேலையில் சேர்ந்து ட்ரெயினிங் பீரியடில் கூட ஒன்னும் பெரிய டிஃபரென்ஸ் தெரியவில்லை. அரட்டை எல்லாம் க்ளாஸிலேயே முடிந்துவிடும்:) அதனால் பத்தரை பதினொன்றுகெல்லாம் தூங்கிவிடுவோம். என்ன காலை மட்டும் கொஞ்சம் அரக்க பரக்க எழுந்து கிளம்பனும். ப்ரொஜெக்ட் அலாகேட் ஆகி இரண்டாவது ஆபிஸ் மாற்றம் வந்த பிறகு தான் எல்லாம் தலைகீழாக ஆரம்பித்தன.

சில சமயங்களில் வீட்டுக்கு வரவே ஒரு மணியாகிவிடும். காலையில் லேட்டாய் போகலாமென்றால் ஆபிஸ் கேப் கிடையாது. MTCயில் நசுங்கி செத்துடுவோம் என்ற பயத்தில் மறுபடியும் காலையில் 8.30 மணிக்கெல்லாம் கேப் பிடிக்க ஓட வேண்டி வரும். வெள்ளிக்கிழமை நைட் ட்ரெய்ன் பிடித்து வீடு போய் சேர்ந்து தூங்க ஆரம்பித்தால் தூங்கிக்கொண்டே இருப்பேன். ஒரு முறை அம்மா நான் எவ்ளோ நேரம் தான் தூங்கறேன்னு பார்க்க காலை எழுப்பாமலேயே விட்டுவிட்டார்கள். அசராமல் தூங்கிக்கொண்டிருந்தவளை மதியம் சாப்பாட்டிற்கு எழுப்பியபோது மணி 2. எந்த விஷயத்திலும் என்னை கண்டிக்காத அப்பா இந்த விஷய்த்தில் மட்டும் லேசாக தட்டுவார். “பொம்பிள பிள்ளை காலைல இவ்ளோ நேரமா தூங்குவா?”. தூக்கத்துக்கு என்ன ஆம்பிளை/பொம்பிளை வேண்டியிருக்கு என்பேன். கல்யாணத்துக்கப்புறம் எப்படி இப்படி தூங்கறேன்னு பார்க்கிறேன் என்பார்.

கல்யாணம் ஆன பின்பு கொஞ்சம் பம்ம ஆரம்பித்தேன். வழக்கமான க.பி பம்மல்கள். சனி ஞாயிறுகளில் பாண்டியோ அல்லது அம்மா வீட்டிற்கோ பயணம் இருக்கும். அதற்கு விடியற்காலை எழுந்து பஸ் பிடிக்க வேண்டும். பின்னர் ஜூனியரை சுமந்திருந்தபோது அசுர தூக்கம் வரும். காலையில் 8.30 வரைக்குமாவது தூங்குவேன். என்னை எழுப்ப ரகு போராடுவார். அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் என அரை மணி நேரம் தூங்குவேன். டாக்டரிடம் ரகு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. “அநியாயத்துக்கு தூங்கறா டாக்டர். Is it normal?". Absolutely yes. அவங்களை தூங்க விட்டுடுங்க என்று டாக்டர் பாலை வார்த்தார்.

ஜூனியர் பிறந்து என் தூக்கத்திற்கு பெரிய ஆப்படித்தான். முதல் ஆறு மாதங்களுக்கு இரவில் ஒரு நிமிடம் கூட தூங்க மாட்டான். ஷிப்ட் போட்டுக்க்கொண்டு நான், அம்மா, அப்பா ஆகியோர் பார்த்துக்கொள்வோம். இரவு 6.30 மணிவாக்கில் விளையாட ஆரம்பித்து, துரை டயர்டாகி மறுநாள் காலை 5.30 அல்லது 6 மணிவாக்கில் தான் தூங்குவார். நைட் 12 வரை நான் பார்த்துக்கொள்வேன். பின்னர் 3 மணி வரை அம்மா. மீண்டும் அவன் தூங்கும் வரை நான். ஆறு மாதத்திற்கு பிறகு அவன் நைட் தூங்க ஆரம்பித்தாலும் டைமிங் பிரச்சனை. 11 மணிக்கு மேல் தான் தூங்கப்போவான். 2 வயது வரை நடு ராத்திரியில் பால் கரைத்துக் கொடுக்க எழுந்திருக்கனும். நிம்மதியான, தொடர்ச்சியான தூக்கமில்லாமல் போனது. எப்படா சனி ஞாயிறு எப்படா வரும் என இருக்கும். இருக்கிறது. வாரநாட்களில் 8.30 வரைக்கும் தூங்கும் ஜூனியர் சனி ஞாயிறுகளில் டாணென்று 6 மணிக்கு எழுந்து விடுவான்:( திரும்பவும் அவனை தூங்க வைப்பதற்குள் என் தூக்கம் பறந்திருக்கும்.

ஜூனியருக்கு ஸ்கூல் வேன் காலை 7.30க்கெல்லாம் வந்துவிடுகிறது. நான் 5.30க்கே எழவேண்டியிருக்கிறது. நைட் படுக்க 12 மணியாகிவிடுகிறது. வளைச்சு வளைச்சு தூங்கினல்ல அனுபவின்னு அப்பா கிண்டல் பண்றார். அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள். ஸ்பெஷலா எனக்காகவாம். அவ்வ்வ்வ்வ். இப்ப எதுக்கு இந்த சோகக் கதைன்னு கேக்கறவங்களுக்கு. என் சோகத்தை வேற எங்க சொல்லுவேன்.

24 comments:

ராமலக்ஷ்மி said...

எல்லோருக்கும் உரித்தான ஆதங்கமே:)!

//என் சோகத்தை வேற எங்க சொல்லுவேன்.//

அதானே.

Anonymous said...

ம்ம்ம்ம். வித்யா. என் சோகத்தையும் நான் பதிவு பண்றேன்.. ஆனா இப்ப எந்த ராஜா எந்த பட்டினம் போனாலும் மதியம் 2 மணி நேரம் செம தூக்கம் தான் :))

Karthick Chidambaram said...

தனி ஒருவனுக்கு தூக்கம் இல்லையனில் இந்த ஜகத்தினை தூங்க வைப்போம்.
என்ன சொல்லறீங்க ?

Vidhoosh said...

என்னத்த சொல்லி.. என்னத்த செய்ய..

Raghu said...

எங்க‌ப்பாவும் இதை சொல்வார் "தூக்க‌ம் க‌ட‌வுள் கொடுத்த‌ வ‌ர‌ம்டா"ன்னு. ப‌டுத்த‌ ரெண்டு நிமிஷ‌த்துலேயே அச‌ந்து தூங்குவார். இந்த‌ 'ஜீன்'ஸ் சும்மா இருக்குமா? என் த‌ம்பியும் ப‌.ரெ.நி.அ.தூங்க‌றான். அடியேன் விதிவில‌க்கு :)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா,இன்னோரு தூக்கம் விரும்பி.

எங்க காலத்தோட இந்த 8 மணிக்குத் தூங்கப் போறது நின்னதுன்னு பார்த்தேன். உங்க வீட்லயுமா:)
வெகு வெகு இன்றியமையாத பதிவு வித்யா:)
சித்திங்கற படத்துல பத்மினி பாடுவாங்க. ''காலமிது காலமிது''ன்னு. அதை மீண்டும் உங்க பதிவில பார்த்தேன் கேட்டேன்.உங்க க்ளப்ல என்னையும் சேர்த்துக்கங்க. இப்ப என்னை எழுந்திருன்னு சொல்ல ஆளு இல்ல. ஆனா தூக்கம் தான் வர மாட்டேங்குது;))

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம் நல்ல தூக்கத்துக்கு எல்லாம் கொடுத்து வச்சிருக்கனும். எங்க நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்லையே. கவர்மெண்ட் ஆபிஸ் தான் க்ரெக்ட் :(

அமுதா கிருஷ்ணா said...

நேற்று தான் தூக்கம் பற்றி ஒரு பதிவு போட்டேன்..இன்னைக்கு நீங்களா? ஆனால் நல்லா தான் தூங்கி இருக்கீங்க..

Vidhya Chandrasekaran said...

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி மயில் (ஹும்ம்ம். மதியம் தூங்கினா நைட் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போய்டுது).

நன்றி கார்த்திக்.
நன்றி விதூஷ்.

Vidhya Chandrasekaran said...

நன்றி ர‌கு.

நன்றி வல்லிசிம்ஹன்(ஆஹா என் மாமியார் கூட இந்தப் பாட்ட உதாரணம் சொன்னாங்க).

நன்றி ஆதவன்(வேலைக்குப் போக ஆரம்பிச்சப்புறம் தான் என் தூக்கமே கெட்டுது. அப்ப போனது. ஹும்ம்).

நன்றி அமுதா கிருஷ்ணா.

soundr said...

அய்யோ, தூங்குறப்ப டிஸ்டர்பன்ஸ்ஸா என்னாதிந்த பதிவு...
அப்பாலிக்கா வந்து படிச்.....கொர்...கொர்...



http://vaarththai.wordpress.com

பா.ராஜாராம் said...

//டாக்டரிடம் ரகு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. “அநியாயத்துக்கு தூங்கறா டாக்டர். Is it normal?"//

//அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள். ஸ்பெஷலா எனக்காகவாம்.//

:-)))

Cable சங்கர் said...

:))

மணிகண்டன் said...

குழந்தைக்கு பாலோட கொஞ்சூண்டு ரம் கலந்து கொடுத்தா நல்லா தூங்குவாங்க :)- ட்ரை பண்ணி இருக்கலாம் !

Vidhya Chandrasekaran said...

நன்றி சௌந்தர்.
நன்றி பா.ரா சார்.
நன்றி கேபிள் சங்கர்.

நன்றி மணிகண்டன் (விளங்கிரும்).

சாந்தி மாரியப்பன் said...

தூக்கமா.. அப்டீன்னா என்னங்க?..

நாகை சிவா said...

எனக்கு தெரிஞ்சு காலையில் 9 மணிக்கு அலாரம் வச்சு எழுந்திருப்பது நீ ஒருத்தன் டா னு எங்க அப்பா சொல்லுவார்.... ஆனா கொடுமை ய பாருங்க எனக்கு இப்போ ஆபிஸ் 8 மணிக்கு... ஒரு நாள் கூட 8 மணிக்கு முன்ன போனது இல்லை என்பது வேற விசயம்.... படுத்த 5 நிமிசத்தில் தூங்கிடுவேன்.... ஆனா நாம் தூங்க போகும் நேரம் 11, 12 க்கு குறையாது இங்கு... ஊரில் 12, 1 க்கு குறையாது :)))

Rajalakshmi Pakkirisamy said...

he he he:)

Anonymous said...

//அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள்.//

:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

"இடுக்கண் வருங்கால் நகுக"ங்கறதை நல்லாவே செய்வீங்க போல... இந்த அவஸ்தைய கூட காமெடியா சொல்லி இருக்கீங்க...

friend.sathish said...

நல்ல கட்டுரை..

சில வருடங்களுக்கு முன்னால் நானும் எப்போ படுத்தாலும் நல்லா தூங்கிடுவேன்
அனால் இப்போ தூங்க நினைத்தாலும் 12 அல்லது 1 மணிக்கு தான் தூக்கமே வருது... :(
காலையில் 7 மணிக்கே பறந்து போகிவிடுகின்றது.. :( இதில் நடுவில் கனவுகளின் தொல்லை வேறு.. :(
மீண்டும் எப்போ ஒரு 8 மணி நேரம் நல்ல தூக்கம் வருமோ??

Vidhya Chandrasekaran said...

நன்றி அமைதிச்சாரல்.
நன்றி சிவா.
நன்றி ராஜி.
நன்றி குமரன்.
நன்றி தங்கமணி.
நன்றி சதீஷ்.

Thamira said...

அப்படியே நாகை சிவாவுக்கு ஒரு ரிப்பீட்டு.!

Thamira said...

ஒருத்தர் சோகத்தைக் கேட்குறதும் சந்தோஷமாத்தான் இருக்குது. கல்யாணத்துக்குப்பிறகு பெண்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். அந்தக் கோவத்துல ஆண்களை மட்டும் சும்மாவா விடுறீங்க.. சுபா 2 வயசு வரைக்கும். லைட்டப்போடுங்க, சீனிய எடுங்க, பாலை காய்ச்சுங்க, துணிய மாத்துங்க ரமா இமிசை பண்ணிடுவாங்க.இப்ப கொஞ்சம் பரவால்லை.

இப்பக்கூட பிளாக்னால 8 மணிக்கு 1 மணி நேரம் குறைஞ்சாலும் சேத்துவச்சு சனிக்கிழமை எக்ஸ்ட்ரா 5 மணி நேரம் தூங்கிடுவேன். ஹிஹி..