July 21, 2010

மதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..

டிஸ்கி : மதராசபட்டிணம் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகையில் டைரக்டர் தமிழ் சினிமாக்களின் இலக்கணங்களை மீறாமல் கொஞ்சம் ரொம்பவே இழுத்துவிட்டார். துரையம்மாள் ட்ரஸ்டை தேடிப் போகும்போதே இந்தக் கதையை இன்ன டைரக்டர் எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என யோசித்துப் பார்த்தேன். வீட்டிற்கு வந்து டெவலப் செய்தது. நகைச்சுவைக்காகவே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.

என் இனிய தமிழ் மக்களே...

பூக்கள் பூக்கும் தருணம் பாடலின் போது ஆர்யா-ஏமி அமர்ந்திருக்கும் போட்டை சுற்றி பத்து படகுகளில் வெள்ளை உடையில் தேவதைகள் (என்ற பெயரில்) சிலர் ஆடுவார்கள். அந்த மணிக்கூண்டில் நடக்கும் சண்டையின்போது ஆர்யா அடிபட்டு மயங்கிவிடுவார். ஏமி தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள வில்லனை மேலிருந்து கீழே தள்ளி கொன்றுவிடுவார். கடமை தவறாத கவர்னர், மகள் என்றும் பாராமல் அவரை அரெஸ்ட் செய்து லண்டன் ஜெயிலில் அடைத்துவிடுவார் (அதான் இந்தியாவுக்கு சுதந்திரம் குடுத்துட்டாங்களே. Moreover ஏமி லண்டன் சிட்டிசனாச்சே. லாஜிக். லாஜிக்). ஆயுள் தண்டனை முடிந்து ஏமி இந்தியாவுக்கு வருவார். அவர் ஏர்போர்டில் இறங்கியதும் இழுத்துக்கொண்டிருக்கும் ஆர்யா இன்னும் ஆஸ்மா ட்ரபிள் வந்தவர் மாதிரி இன்னும் இழுத்து இழுத்து மூச்சுவிடுவார். அப்படியே பாட்டியக் காமிக்கிறோம். நவரசத்தையும் மூஞ்சில காமிப்பாங்க. கண்டிப்பா கண்ணு துடிக்கும். ஆர்யா இருக்கிற இடத்துக்கு வந்து பார்த்து அவர தொடுவாங்க. அத்தனை காலமா கோத்ரேஜ் பீரோல் பூட்டி வச்சிருந்த ஆர்யாவோட உசிர் படக்குன்னு போய்டும் (இதயா டாவடிச்சோம் என்ற அதிர்ச்சி தான் உண்மையான காரணமாயிருக்கும்). ஆர்யாவோட கால்மாட்டுல உக்காந்திருக்கிற பாட்டியோட தலை தொபுக்கட்டீர்ன்னு தொங்கிரும்.

எந்த சாரே...

ஆர்யாவை தண்ணியில் தள்ளி்விட்டுவிட்டு போகும் ஏமிக்கு லண்டனில் வேறொருவோடு கல்யாணமாகிறது. ஏமியின் காதல் கதையை தெரிந்து கொள்ளும் அந்த வெள்ளக்கார துரை ஏமியை அழைத்துக்கொண்டு இந்தியா வருகிறார். படாதபாடுபட்டு ஆர்யாவை கண்டுபிடித்து ஏமியை ஏற்றுக்கொள்ள சொல்கிறார். அதற்கு ஆர்யா “என்னுடைய காதலி உங்கள் மனைவி ஆகலாம். ஆனால் உங்க மனைவி என்னுடையா காதலி ஆக முடியாது துரை. எங்க நீங்க போட்ட அந்த மோதிரத்த கழட்ட சொல்லுங்க பார்ப்போம்”. ஏமி கூலாக மோதிரத்த கழட்டிக்கொடுத்துவிட்டு “நீ சொன்ன டயலாக் எல்லாம் தமிழ்நாட்டு கல்ச்சருக்கு தான் பொருந்தும். ஐ’ம் ஃப்ரம் லண்டன். Not applicable to me".

தங்கச்ச்ச்ச்ச்சீஈஈஈஈஈஈ...

செல்வி பிறந்தவுடனேயே அவர் அம்மா இறந்துவிட, தாய்க்கு தாயாக இருந்து செல்வியை கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார் ஆர்யா (உங்களுக்கு அபாரமான மனதைரியம் இருந்தால் ஆர்யாவை நீக்கிவிட்டு அவரை கற்பனை செய்து கொள்ளவும்). அண்ணனுக்கு பயந்த, அண்ணன் மீது அளவில்லா பாசம் கொண்ட தங்கையாக வலம் வருகிறார் செல்வி. அதே நேரம் அவருக்கு ஒரு (நல்ல) வெள்ளைக்கார துரையுடன் காதல் வளர்கிறது. இது தெரியாமல் அண்ணன் வேறொருவருக்கு தங்கையை கல்யாணம் செய்து தருவதாக வாக்கு கொடுத்துவிடுகிறார். இதுல சைட் ட்ராக்கா அவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏமி. அவர் காலடி மண்ணை விபூதியாக பூசிக்கொள்கிறார். அவருக்காக தோபிகானாவில் வந்து துணி தோய்க்கிறார். கழுதை மேய்க்கிறார். அவரின் பார்வை கூட ஏமி மீது படாது. அப்படிப்பட்ட பண்பாளர் அவர். தங்கையின் காதல் விஷயம் தெரிந்ததும் ஒரு நீண்ண்ண்ண்ண்ட (டயலாக்) போராட்டமே நடக்கிறது வீட்டில். கடைசியில் தங்கையின் ஆசைதான் பெரிது என நினைத்து காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார். ஏமியை இழுத்துக்கொண்டு போகவரும் வில்லனை (பேசியே) கொல்கிறார். இவர் ஏற்கனவே பேசிவைத்திருந்த பையன் வீட்டார் நிச்சயம் பண்ண வர இவர் மறுத்து நிலைமையை விளக்க, அவர்கள் வாக்கு தவறிட்டியே என சொல்ல, அந்த வார்த்தையை கேட்ட அடுத்த நொடி சலவைக்கல் மீது விழுந்து உயிர்விடுகிறார் நம்ம கவரிமான் பரம்பரை ஹீரோ.

லாலாலா லல லாலா...

ஆர்யா-ஏமி காதல் விவகாரம் கவர்னருக்கு தெரிய வருகிறது. ஆர்யாவிடம் கவர்னர் ஸ்டேட்டசை சுட்டிக் காட்டி பெண் தர மறுக்கிறார். வெகுண்டெழும் ஆர்யா வொர்க் பெர்மிட்டில் லண்டன் சென்று தினக்கூலியாக வேலைக்கு சேர்கிறார். ஒரே பாட்டில் பெரிய பணக்காரராகி ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பார்ட்னராக முன்னேறுகிறார். யூகே குடியுரிமைப் பெற்று தாயகம் திரும்பி ஏமியை கரம்பிடிக்கிறார்.

அழுக்க அடிச்சி பாத்திருக்கியா..

சட்டைய சர்ஃப் எக்ஸல்ல தோச்சிருப்ப. ரின் மேட்டிக்ல தோச்சிருப்ப. ஏன் அரசன் சோப்ல கூட தோச்சிருப்ப. ஆனா சலவக்கல்ல தோச்சிருக்கியா. சோப்பே இல்லாம தோச்சிருக்கியா. ஓங்கி அடிச்சா நாலு மூட்டை துணியோட அழுக்கும் அடையாளமில்லாம போய்டும்டா பார்க்கிறியா. பார்க்கிறியா. பார்றா. தொம். தொம். தொம் என ஆர்யா அடிக்க பின்னாடி ட்ராம் ஒன்று வெடித்து பனை மர அளவு பறக்கிறது. ஏமிக்கு புடைவக்கு பதிலாக பாவாடை தாவணி குடுத்து ஊட்டி மலையில் ஒரு டூயட் உண்டு.

ஏமியின் கையெழுத்து...

”I've some unfinished business in India" என சொல்லிவிட்டு ஒரு தோள்பையோடு ஏர்போர்டில் இறங்குகிறார் ஏமி (பாட்டி). விமானத்திலிருந்து இறங்கி இமி்க்ரேஷனைக் கடக்கும்போது “memories coming" பாட்டு. செக்யூரிட்டு கார்டுடனான காதலுக்கு சாட்சியா அவரிடமிருந்து அடித்த மெட்டல் டிடெக்டரை (1947 மாடல்) தொட்டுப் பார்த்துக்கொண்டே வெளியே வருகி்றார். ட்ராமிலேறியவுடன் மீண்டும் அதே பாடல். ட்ராமில் சுட்ட மணியை எடுத்துப் பார்த்துக்கொள்கிறார். இப்போது கண்டக்டராய் இருக்கும் ஆளின் பெயர் துரை என்பதை அறிந்தவுடன் பஸ் கம்பியில் சாய்ந்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுகிறார். ரெஸ்ட் ஆஃப் த ஸ்டோரி ஆர்யாவை தேடுவது.

ரீ-மேக்...

தமிழ்ல ஆர்யா-ஏமி நடிச்சு சூப்பர் ஹிட்டான கதைய மட்டும் எடுத்துகிட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி மாத்தியிருக்கோம். நடிகர் நடிகைகள் எல்லாரும் தமிழ்ப்படத்துல
நடிச்சவங்கதான். காஸ்ட்யூம், வசனங்கள், லொகேஷன் எல்லாம் தமிழ்படத்துல வந்த மாதிரிதான். இல்ல இல்ல. அப்படியே காப்பியெல்லாம் அடிக்கல. ரொம்பக் கஷ்டப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படத்தின் தலைப்பை “மதராசபட்டிணம்லு” என மாத்திருக்கோம். இதுக்காக ஆறு மாசமா உழைச்சோம்.

38 comments:

Karthick Chidambaram said...

செம நக்கல் ... அதுவும் ரீமேக் நக்கல் சூப்பர்.

Vidhoosh said...

கிர்ர்... கொஞ்சம் தலைய சுத்துது.. ரொம்ப சிரிச்சா இப்படி ஆகுது.. # ஏதோ நோயோ..

☀நான் ஆதவன்☀ said...

சான்ஸே இல்ல :))

Chitra said...

அழுக்க அடிச்சி பாத்திருக்கியா..

சட்டைய சர்ஃப் எக்ஸல்ல தோச்சிருப்ப. ரின் மேட்டிக்ல தோச்சிருப்ப. ஏன் அரசன் சோப்ல கூட தோச்சிருப்ப. ஆனா சலவக்கல்ல தோச்சிருக்கியா. சோப்பே இல்லாம தோச்சிருக்கியா. ஓங்கி அடிச்சா நாலு மூட்டை துணியோட அழுக்கும் அடையாளமில்லாம போய்டும்டா பார்க்கிறியா. பார்க்கிறியா. பார்றா. தொம். தொம். தொம் என ஆர்யா அடிக்க பின்னாடி ட்ராம் ஒன்று வெடித்து பனை மர அளவு பறக்கிறது. ஏமிக்கு புடைவக்கு பதிலாக பாவாடை தாவணி குடுத்து ஊட்டி மலையில் ஒரு டூயட் உண்டு.

....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... செம கலக்கல் வித்யா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர். :))))

எம்.எம்.அப்துல்லா said...

//இதுக்காக ஆறு மாசமா உழைச்சோம்.

//


ரொம்ப நாளைக்கு அப்புறம் கண்ணுல தண்ணிவர சிரிச்சுக்கிட்டு இருக்கேன் :)))))

நாகை சிவா said...

:))))

Anonymous said...

நாங்கெல்லாம் தலைல நாலு முடியோட இருக்கோம். அது உங்களுக்கு பிடிக்கலையா :)

Thamira said...

சான்ஸ்லெஸ்.. வரிக்கு வரி தூள் பண்ணியிருக்கீங்க. :-))

டிஆர் போர்ஷன் டயலாக்/பீலிங்க்ஸிலேயே கொல்றது டாப்.

பாக்யராஜ் போர்ஷன்ல வசனம் மறந்துட்டீங்களா, 'சாரே.. எண்ட லவர் உங்க வொய்ஃபாயிட்டு வரும். பட்சே உங்க வொயிஃப் எண்ட காதலியா வராது.'

மோதிரத்தை கழட்டச்சொல்றது சூப்பர். அப்பிடியே ஏமி கையைப்பொத்திக்கிட்டு சுவரோரமா பதுங்கினா இன்னும் சூப்பருல்ல.! :-))

அப்புறம் விக்ரமன் போர்ஷன்ல பெப் கொஞ்சம் கம்மி. ஈஸ்ட் இண்டியா பார்ட்னர்னு சின்னதாக்கிட்டீங்களே. இவர் மெட்ராஸ் கவர்னர்ங்கிறதால, அவர் இந்தியாவுக்கே கவர்னல் ஜெனரலாகி அவர் வரும்போது, இவர் காரைத் தொறக்குற மாதிரி இருக்கணும். ஹிஹி..

Vidhoosh said...

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் - தொடர் பதிவு எழுத அழைப்பு வச்சுருக்கேன். முடிஞ்சா எழுதுங்க. சரியா.

vinu said...

என்ன கொடுமை சார் இது, காமெடி மாதிரி, மொக்கை

unga labelea thaaan same blood ok

Anonymous said...

ஹெஹெஹெ சிரிச்சுட்டே இருக்கேன்..இது ஆர்யாக்கு ஃபார்வார்ட் பண்னப்படும் :)))

பா.ராஜாராம் said...

என்னங்க, இந்தப் போடு போடுறீங்க!

enjoyed! :-))

Vidhya Chandrasekaran said...

நன்றி கார்த்திக்.
நன்றி விதூஷ்.
நன்றி ஆதவன்.
நன்றி சித்ரா.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி அண்ணே.

Vidhya Chandrasekaran said...

நன்றி சிவா.
நன்றி சின்ன அம்மிணி.

நன்றி ஆதி (ஆர்யா தமிழ் இல்லயா. அதான்).

நன்றி வினு.
நன்றி மயில்.
நன்றி பா.ரா சார்.

எல் கே said...

excellent vidhya

செ.சரவணக்குமார் said...

தங்கச்சீசீசீசீசீசீசீ.....

முடியல.. சிரிச்சுட்டேயிருக்கேன்.

அமுதா கிருஷ்ணா said...

ரீமேக் சூப்பர் வித்யா...

மணிநரேன் said...

சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்.:)

Vijay said...

கற்பனை அபாரம். தமிழ் சினிமாவை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க

Cable சங்கர் said...

அடிச்சு ஆடியிருக்கீங்களே..:)))

CS. Mohan Kumar said...

//உங்களுக்கு அபாரமான மனதைரியம் இருந்தால் ஆர்யாவை நீக்கிவிட்டு அவரை கற்பனை செய்து கொள்ளவும்.//
:))
//அவரின் பார்வை கூட ஏமி மீது படாது. அப்படிப்பட்ட பண்பாளர் அவர்//
:)))

//வில்லனை (பேசியே) கொல்கிறார்//
:))
//ட்ராம் ஒன்று வெடித்து பனை மர அளவு பறக்கிறது//
:))

சமீபத்தில் படித்து சிரித்த செம பதிவு இது வித்யா!! வாழ்த்துக்கள்

Raghu said...

என்ன‌ங்க‌ இது நான் போட்ட‌ க‌மெண்ட்டே காணோம்! ப்ளாக‌ராண்ட‌வ‌ர் ம‌றுப‌டியும் விளையாட‌ ஆர‌ம்பிச்சுட்டாரா?!

Thenral said...

Aahaa!Enna oru karpanaithiran????!!!!
Kalakiteenga ponga!!!

தக்குடு said...

telugu remake chanceyyy illa madam...:) LOL

Vidhya Chandrasekaran said...

நன்றி LK.
நன்றி சரவணக்குமார்.
நன்றி அமுதா.
நன்றி மணிநரேன்.
நன்றி விஜய்.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி மோகன் குமார்.

நன்றி ர‌கு (இந்த பின்னூட்டம் மட்டும் தான் வந்தது).

நன்றி தென்றல்.
நன்றி தக்குடுபாண்டி.

"உழவன்" "Uzhavan" said...

படம் இன்னும் பார்க்கல..

நவீன் said...

// ஓங்கி அடிச்சா நாலு மூட்டை துணியோட அழுக்கும் அடையாளமில்லாம போய்டும்டா பார்க்கிறியா. பார்க்கிறியா.... //

அட்டகாசம்... சிரிச்சுட்டே இருக்கேன்,.. :-)

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன்.
நன்றி நவீன்.

முனியாண்டி பெ. said...

It's really nice and funny. I really liked this. If you have time just visit my blog.

http://adisuvadu.blogspot.com/

sakthi said...

கலக்கல் வித்யா.

CS. Mohan Kumar said...

உங்களின் இந்த பதிவை எனது ப்ளாகில் சுட்டியுள்ளேன்; இயலும் போது வாசிக்கவும்

'பரிவை' சே.குமார் said...

செம நக்கல் ... அதுவும் ரீமேக் நக்கல் சூப்பர்.

koodalnagar said...

super :))))))))

koodalnagar said...

Super Madam :)))))))))

அரசூரான் said...

வித்யா... நல்ல காமெடி. உங்கள மதாராசபட்டிணம் பாதிச்சதவிட மத்தவங்களால நெம்ப பாதிக்கப் பட்டு இருக்கீங்கன்னு தெரியுது.

Vidhya Chandrasekaran said...

நன்றி முனியாண்டி.
நன்றி சக்தி.
நன்றி மோகன் குமார்.
நன்றி குமார்.
நன்றி வினோத்.
நன்றி அரசூரான்.