July 29, 2010

ரங்கமணிகளுக்கு பத்து கேள்விகள்

நீங்க ஊருக்கு போகும்போதெல்லாம் ப்ரெண்ட்ஸ் கூப்படறாங்கன்னு போய் ஊரசுத்திட்டு, நல்லா மொக்கிட்டு, ஏதாவது ஒரு புதுப்படத்த பார்த்துட்டு வர்றீங்க. இதே எங்க ஊருக்கு வரும்போது நாங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போகும்போது கூட வராட்டியும் பரவால்ல, போரடிக்குதே இனிமே வரவே மாட்டேன்னு புலம்பறீங்களே ஏன்?

நாலுபேருக்கே ஒழுங்கா சமைக்க வராதுன்னு தெரிஞ்சிருந்தும் உங்கம்மா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் நீ வேணா சமையேன்னு சொல்லி மாட்டிவிடறீங்களே அது ஏன்?

நாங்க விருந்தே சமைச்சாலும் கிச்சன க்ளீனா வச்சிருக்கோம். ஒரு டீ போட்டாக்கூட நாலு பாத்திரத்த தீச்சி, கிச்சன ஒரு போர்க்களமாவே மாத்திடறீங்களே ஏன்?

ஸ்கூல்ல குடுத்தனுப்பிச்ச சர்க்குலர ஏன் என்கிட்ட காமிக்கல, லீவ் லெட்டர்ல நான் தான் கையெழுத்து போடுவேன்னு சப்ப மேட்டருக்கெல்லாம் குதிக்கறீங்களே, என்னிக்காவது காலைல புள்ளய கொண்டு போய் வேன் ஏத்திவிட்ருக்கீங்களா?

உங்க ஒன்னு விட்ட மாமாவோட பேத்திக்கு காது குத்துன்னா ரெண்டு நாள் முன்னாடியே கிளம்புற நீங்க, எங்க தாய்மாமன் பொண்ணு கல்யாணத்துக்கு கரெக்டா முகூர்த்த டைமுக்கு வர்றீங்களே அது ஏன்?

உங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சாப்பிட வரும்போது அத செய், இத செய், சேர அங்கபோடு, டீப்பாய இங்க வைன்னு இல்லாத ரவுசு பண்றீங்களே. எங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வரும்போது மட்டும் கரெக்டா அவங்க கிளம்புற டைமுக்கு வந்து “அடடா கிளம்பிட்டீங்களா. ஆபிஸ்ல ஹெவி வொர்க்”ன்னு கூசாம புழுகுறீங்களே அது ஏன்?

உங்க வீட்டு விசேஷத்துக்கு போனா ஏதாவது ஒரு பாட்டிக்கிட்டயோ, தாத்தாகிட்டயோ அறிமுகப்படுத்திட்டு பேசிட்ரு வந்துர்றேன்னு சொல்லி எஸ்ஸாயிட்டு , எங்களை அவங்களோட ஆட்டோகிராப கேக்க வச்சி கொடுமப்படுத்தறீங்களே. ஏன் இந்த மர்டர் வெறி?

நீங்க செலவு பண்ணா அவசியம், நாங்க பண்ணா அநாவசியமா? 35,000 ரூபாய் கொடுத்து போன் வாங்கறது காஸ்ட்லியா தெரியல. 350 ரூபாய்க்கு குர்தா வாங்கின அவசியமான்னு கேக்கறீங்களே. இது எந்த ஊர் நியாயம்?

விருந்தே சமைச்சாலும் எங்கம்மா போடற பழையது மாதிரி வராதுன்னு கமெண்ட் அடிச்சு வெறுப்பேத்தறீங்களே, உங்களுக்கு திருப்திங்கறதே கிடையாதா?

தினமும் பதினொரு மணி பன்னிரெண்டு மணின்னு வர்ற நீங்க, நாங்க ஊருக்கு போனா மட்டும் 8.30/9 மணிக்கே வீட்டுக்கு வந்துடறீங்களே ஏன்?

45 comments:

- யெஸ்.பாலபாரதி said...

அருமை. நான் இப்படி இல்லைன்னு சொல்லிக்கொள்ளலாம்.

அதனால.. மத்தவங்களுக்கு வழிவிட்டு நிக்கிறேன்.

பதில் வரும்ம்ம்ம்.. ஆனா வராதுதுதுது.. :))

நட்புடன் ஜமால் said...

1)போரடிச்சா அப்படித்தானே சொல்லனும்

2)உங்களுக்கு ஒழுங்கா சமைக்க வராதுன்னு நீங்க தெரிஞ்சிக்கத்தான்

3)விருந்தே சாப்பிட்டாலுமுன்னு இருக்கனும், எப்ப சமைச்சீங்க விருந்துக்கு

4)வேன் வாரதுக்குள்ள வேலைக்கு போயிடறோமுல்ல அல்லது புள்ள நீங்க தான் வரனுமுன்னு கூப்பிடலாம்

5) நாங்களும் முன்னாடியே வந்தா உங்களுக்கு உங்க குடும்பத்தோடு கும்மியடிக்க முடியாதுல்ல - அதால தான் லேட்டா வாறோம்

6)சீக்கிரம் வந்தா உங்க ஃபிரண்ட்ஸ சைட் அடிக்கத்தான் வந்தேன் குறை சொல்வீங்களே

7)உங்க கிட்ட கத்துகிட்டது தான்

8) 35,000 வாங்கினாலும் 1 முறை தானே 350ன்னு சொல்லிட்டு சின்ன விசேடம் வந்தாலும் வாங்கிடறீங்களே

9) எங்க சமைச்சது எப்பயாவது சிரிச்சிகிட்டே சாப்பிடதுண்டா

10)நீங்க இல்லாத பொழுது மனசு கேட்காம - நீங்க இருந்த இடத்தையெல்லாம் பாக்கதான் சீக்கிரம் வந்திங்ஸ் :P

-----------------------

:) :) :) :) :) :) :) :) :) :)

Vidhoosh said...

சும்மா நெத்தியடி # :-))ஏற

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நானும் இப்படி இல்லீங்க, சும்மா ஜாலிக்காக போட்டேன், ரொம்ப ஓவரா இருந்தா வெளியிடாதீங்கோ ...

சீனு said...

//தினமும் பதினொரு மணி பன்னிரெண்டு மணின்னு வர்ற நீங்க, நாங்க ஊருக்கு போனா மட்டும் 8.30/9 மணிக்கே வீட்டுக்கு வந்துடறீங்களே ஏன்?//

புரியலையா? :)

தராசு said...

என்னங்க வித்யா,

எதிர்பதிவா, கொஞ்சம் ஆணியிருக்கு, பிடுங்கிட்டு வந்து ஸ்டார்ட் மீஜிக்.

Vijay said...

ஆஹா இதெல்லாம் காயத்ரி படித்தால், ரிபீட்டு ரிபீட்டு என்பாள் :)

தமிழ் அமுதன் said...

///தினமும் பதினொரு மணி பன்னிரெண்டு மணின்னு வர்ற நீங்க, நாங்க ஊருக்கு போனா மட்டும் 8.30/9 மணிக்கே வீட்டுக்கு வந்துடறீங்களே ஏன்?///

என்ன ஒரு அருமையான தருணம் தெரியுமா அது ...!

வீட்டுக்கு வந்து எந்த கேள்வியும்,தொண தொணப்பும் இல்லாம ஃப்ரீயா இருக்கும் அந்த நேரங்கள் அடடா நெனைச்சு பார்க்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு.! அதும் எப்போவாச்சும்தான் அந்த சந்தர்பம் அமையும் அத போயி மிஸ் பண்ணுவோமா நாங்க...!;;)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))
அருமை

Cable சங்கர் said...

NO. comments....

Kumky said...

ஆஹா...

அதெப்படி எல்லா ரங்ஸ்க்கும் பொருந்தரா மாதிரி போட்டு தாளிச்சிட்டீங்களே....

sathishsangkavi.blogspot.com said...

பொறுத்தமான பதில்கள்....

Jey said...

புஸ்ஸ்ஸ். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :)

Chitra said...

தமிழ் நாட்டில், ரங்கமணிகள் இப்படித்தான் செய்கிறார்களா? அவ்வ்வ்வ்.....

pudugaithendral said...

அதெப்படி எல்லா ரங்ஸ்க்கும் பொருந்தரா மாதிரி போட்டு தாளிச்சிட்டீங்களே....//

ரங்கமணிகளுக்கு பத்து கேள்விகள்னுதானே வித்யா தலைப்பு வெச்சிருக்காங்க. அதனால ரங்க்ஸ்கள் எல்லோருக்கும் பொருந்தும் போல இருக்கு. கரெக்டா வித்யா??

அப்புறம் பதிவுக்கு பாராட்டுக்கள். இப்படியே நிறைய்ய பதிவுகள் போட வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கேள்விகள். ஆனா, பதில்தான் வராது.. அவங்க முகத்துல வழியுற அசடை துடைக்கவும் நாம்தான் டவல் எடுத்துக்கொடுக்கணுமாக்கும் :-)))

Vidhya Chandrasekaran said...

நன்றி தல பாலபாரதி.

நன்றி ஜமால் (அத்தனை பதில்களிலும் பெரிய்ய்ய்ய்ய ஓட்டை).

நன்றி விதூஷ்.

மீண்டும் நன்றி ஜமால் (வெளியிடாம. கருத்து சுந்தரம் சாரி கருத்து சுதந்திரத்த மதிக்கனும்ல).

நன்றி சீனு (புரியுது. அப்ப தனியாவே இருங்களேன்).

நன்றி தராசு (ஆங். வந்துட்டாலும்).

நன்றி விஜய்.
நன்றி தமிழ் அமுதன்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி கேபிள் சங்கர்.

Vidhya Chandrasekaran said...

நன்றி கும்க்கி (எல்லாம் ஒ.கு.ஊ.ம தான).

நன்றி சங்கவி (இந்தப் பதிவுக்கான கமெண்ட் தானா இது).

நன்றி ஜெ (உங்களுக்கும்).

நன்றி சித்ரா (அப்ளிகபல் டு ஆல்)

நன்றி கலா அக்கா (எல்லாம் ப்ரொபசர் ஆசிர்வாதம்தான்).

நன்றி அமைதிச்சாரல்.

Anonymous said...

அதே அதே அதேதான் :))))

CS. Mohan Kumar said...

எனக்கு ரெண்டு அல்லது மூணு தான் சூட் ஆகுது. நீங்க எழுதிய சில விஷயம் பெண்கள் கூட செய்றாங்க..

கண்ணகி said...

பத்தோட உட்டுட்டீங்களே....சூபர்ப்...

தராசு said...

//நீங்க ஊருக்கு போகும்போதெல்லாம் ப்ரெண்ட்ஸ் கூப்படறாங்கன்னு போய் ஊரசுத்திட்டு, நல்லா மொக்கிட்டு, ஏதாவது ஒரு புதுப்படத்த பார்த்துட்டு வர்றீங்க. இதே எங்க ஊருக்கு வரும்போது நாங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போகும்போது கூட வராட்டியும் பரவால்ல, போரடிக்குதே இனிமே வரவே மாட்டேன்னு புலம்பறீங்களே ஏன்?//

ஆமா, உங்க வீட்டுக்கு உள்ள நுழைஞ்ச உடனே எதோ நாங்க ஒரு வேற்று கிரக வாசிங்கற மாதிரி ஒதுக்கி வெச்சுட்டு, சொந்தங்களோட அப்பிடியே மூழ்கிப் போயிருவீங்க. ஆனா, நீங்க அவுங்களோட அடிக்கற கூத்தை நாங்க கவ்னிக்கறமான்னு ஓரக்கண்ணால பார்த்து உறுதிப் படுத்திக்கறது எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா???

தராசு said...

//நாலுபேருக்கே ஒழுங்கா சமைக்க வராதுன்னு தெரிஞ்சிருந்தும் உங்கம்மா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் நீ வேணா சமையேன்னு சொல்லி மாட்டிவிடறீங்களே அது ஏன்?//

சூப்பர், உங்களுக்கு சமைக்கத்த் தெரியாதுன்னு ஒத்துக்குங்க. எங்கம்மா கூட சேர்ந்து சமைச்சாவது கொஞ்சம் சமைக்க பழகட்டுமேங்கற நப்பாசைதான், வேறொண்ணுமில்ல.

தராசு said...

//நாங்க விருந்தே சமைச்சாலும் கிச்சன க்ளீனா வச்சிருக்கோம். ஒரு டீ போட்டாக்கூட நாலு பாத்திரத்த தீச்சி, கிச்சன ஒரு போர்க்களமாவே மாத்திடறீங்களே ஏன்?//

இங்க பார்றா, இப்பத்தான சொன்னீங்க, சமைக்கவே தெரியாதுன்னு, அப்புறம் இவுங்க விருந்து சமைக்கறாகளாம் விருந்து. நல்லா குடுக்கறாங்கைய்யா பில்டப்பு.

தராசு said...

//ஸ்கூல்ல குடுத்தனுப்பிச்ச சர்க்குலர ஏன் என்கிட்ட காமிக்கல, லீவ் லெட்டர்ல நான் தான் கையெழுத்து போடுவேன்னு சப்ப மேட்டருக்கெல்லாம் குதிக்கறீங்களே, என்னிக்காவது காலைல புள்ளய கொண்டு போய் வேன் ஏத்திவிட்ருக்கீங்களா?//

வேன் வந்தா புள்ள தானா ஏறிப் போகுது, அதையெதுக்கு நீங்க ஏத்தி விடறீங்க, எங்க புள்ள சிறுத்தை, பாயறதுக்கு ஒன்னும் சொல்லித் தர வேண்டாம்.

தராசு said...

//உங்க ஒன்னு விட்ட மாமாவோட பேத்திக்கு காது குத்துன்னா ரெண்டு நாள் முன்னாடியே கிளம்புற நீங்க, எங்க தாய்மாமன் பொண்ணு கல்யாணத்துக்கு கரெக்டா முகூர்த்த டைமுக்கு வர்றீங்களே அது ஏன்?//

கொஞ்ச முன்னாடி வந்தாலும் இவுரு கையெழுத்து முத்து முத்தா இருக்கும்னு ஒரு பில்டப் குடுத்து மொய் எழுத உக்கார வெச்சுருவீங்களேங்கற பயம்தான்.

தராசு said...

//உங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சாப்பிட வரும்போது அத செய், இத செய், சேர அங்கபோடு, டீப்பாய இங்க வைன்னு இல்லாத ரவுசு பண்றீங்களே. எங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வரும்போது மட்டும் கரெக்டா அவங்க கிளம்புற டைமுக்கு வந்து “அடடா கிளம்பிட்டீங்களா. ஆபிஸ்ல ஹெவி வொர்க்”ன்னு கூசாம புழுகுறீங்களே அது ஏன்?//

உங்க பிரண்ட்ஸ் எல்லாம் கரெக்டா, எங்க ஆபீஸ் ஆடிட் சமய்த்துலயே நம்ம வீட்டுக்கு வந்தா அதுக்கு நாங்களா பொறுப்பு???

தராசு said...

//உங்க வீட்டு விசேஷத்துக்கு போனா ஏதாவது ஒரு பாட்டிக்கிட்டயோ, தாத்தாகிட்டயோ அறிமுகப்படுத்திட்டு பேசிட்ரு வந்துர்றேன்னு சொல்லி எஸ்ஸாயிட்டு , எங்களை அவங்களோட ஆட்டோகிராப கேக்க வச்சி கொடுமப்படுத்தறீங்களே. ஏன் இந்த மர்டர் வெறி?//

வீட்டுலதான் பாவம் வேலை செஞ்சு கஷ்டப் படறீங்களே, விசேஷ வீட்லயாவது கொஞ்சம் ஓய்வா ஒரு இடத்துல உக்கார்ந்திருக்கட்டுமேன்னு ஒரு நல்லெண்ணத்துல செஞ்சா, திருப்பி எங்ககிட்டயே கொஸ்டினா??

தராசு said...

//நீங்க செலவு பண்ணா அவசியம், நாங்க பண்ணா அநாவசியமா? 35,000 ரூபாய் கொடுத்து போன் வாங்கறது காஸ்ட்லியா தெரியல. 350 ரூபாய்க்கு குர்தா வாங்கின அவசியமான்னு கேக்கறீங்களே. இது எந்த ஊர் நியாயம்?//

ஹலோ, 35000 வாழ்கைல ஒரு தரம்தான், இந்த 350 ரூவாய் ஒவ்வொரு வாரமும் ந்டக்கற ஒரு சடங்காவே மாறிப் போச்சே, இத எங்க போய்ச் சொல்ல????

தராசு said...

//விருந்தே சமைச்சாலும் எங்கம்மா போடற பழையது மாதிரி வராதுன்னு கமெண்ட் அடிச்சு வெறுப்பேத்தறீங்களே, உங்களுக்கு திருப்திங்கறதே கிடையாதா?//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸோ, இப்பவே கண்ணக் கட்டுதே, அதான் சமைக்கத் தெரியாதுன்னு நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டீங்களே, அப்புறம் என்ன விருந்த சமைச்சேன், மருந்தை இடிச்சேன்னு....

தராசு said...

//தினமும் பதினொரு மணி பன்னிரெண்டு மணின்னு வர்ற நீங்க, நாங்க ஊருக்கு போனா மட்டும் 8.30/9 மணிக்கே வீட்டுக்கு வந்துடறீங்களே ஏன்?//

மனித மனம் நிம்மதியை நாடுறது இயற்கை தானே, இதையெல்லாம் கேள்வி கேக்கப்படாது.

Ravichandran Somu said...

அருமை:)

நான் எஸ்கேப்................

சுரேகா.. said...

ஆமா..அப்புடியே நடக்குது!! ஏன்னுதான் தெரியலை!! :))

விக்னேஷ்வரி said...

:)

Vidhya Chandrasekaran said...

நன்றி மயில்.
நன்றி மோகன் குமார்.
நன்றி சுரேகா.
நன்றி ரவிச்சந்திரன்.
நன்றி கண்ணகி.

Vidhya Chandrasekaran said...

தராசண்ணே

நீங்க அதயே பண்ணும்போது.
சமைக்கத் தெரியாதுன்னு சொல்லவே இல்ல. நாலு பேருக்கு வராதுன்னு தான் சொன்னோம். quantity problem. not quality.

மேல சொன்ன பதில படிச்சிக்கோங்க.

உங்க பிள்ளதான. ஏறிட்டாலும்.

உங்கள நம்பி யாராவது மொய் பணத்த கொடுப்பாங்களா?

அப்படியே வேல பார்த்து ப்ரொமோஷன் ஹைக்குன்னு வாங்கிட்டாலும்.

உங்க நொல்லெண்ணம் எங்களுக்கு நல்லாவே தெரியும்.

நீங்க வாழ்க்கைல துணியே வாங்கறதில்லயாக்கும். வாராவாரம் யாருங்க வாங்கறது? அதெல்லாம் நீங்க க்ரியேட் பண்ற மாயை.

ஊஉஹும்.

நிம்மதி தேவைன்னா அப்படியே காசி ராமேஸ்வரம்ன்னு சாமியாரப் போக வேண்டியது தானே. பேயுலாத்துற நேரத்துக்கு வந்து என் உசிரெடுக்கறீங்க?

'பரிவை' சே.குமார் said...

ஸ்............. அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே....

பரவாயில்லை...

போகட்டும் விட்டுறலாம்...

எங்களாலயும் சேம் பிளட் வரவைக்க முடியும்.
தூங்குற சிங்கத்தை கிளப்பிவிடுறாதீங்க...

வேணாம்.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ஜெய்லானி said...

ஜமால், அந்த 10 வது பதில் சூப்பர் டச்....சும்மா அசத்திட்டேள் ...

தராசு said...

வித்யா,

ரசித்தேன். டேங்சு.

பா.ராஜாராம் said...

ஹலோ?ஹலோ? சிக்னல் எடுக்கல பாசு.. எடுத்தா பதில் சொல்லாமையா போவேன்?

(ரணகளமாவுல இருக்கு)

:-))

மங்குனி அமைச்சர் said...

இதே மாதிரி தங்கமணிகள் கிட்ட கேட்கனுமின்னா பத்து கேள்வி பத்தாதே ? கேட்கட்டுமா ?(எச்சூச்மி எங்க வீட்டு தங்கமணிக்கு தெரியாம பாத்துகங்க )

Thamira said...

இப்பதான் பாக்குறேன். என்ன எதிர்பதிவு போடணுமா.? ஜாக்கிரதையா இருந்துக்கங்க. ரொம்ப டேமேஜ் பண்ணவேண்டாமேன்னு நினைக்கிறேன். :-))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... இந்த போஸ்ட் இப்படி மிஸ் பண்ணினேன்... வாழ்க வாழ்க... சூப்பர் போஸ்ட்...சூப்பர் கேள்விகள்... ஏன் பத்தோட நிறுத்திடீங்க... நூறு கூட போடலாம்... ஒரு ஒரு கேள்வியின் அருமையோ அருமையோ.... உண்மையோ உண்மை...

Vidhya Chandrasekaran said...

நன்றி குமார்.
நன்றி ஜெய்லானி.
நன்றி தராசு.

நன்றி பா.ரா சார் (ஆங். அப்படியே சொல்லிட்டாலும்).

நன்றி மங்குனி அமைசர்.

நன்றி ஆதி (ஹலோவ் தராசண்ணே போட்டதுக்கு எதிர்பதிவு தான் இது. டேமேஜா. யார் நாங்களா? ஹே ஹே. ரமாக்கான்னு ஒரு குரல் குடுத்தா போதும்).

நன்றி அப்பாவி தங்கமணி.

மார்கண்டேயன் said...

350 அ ஒரு தடவ செஞ்சா தப்பில்ல, 350 அ 350 தடவ வருசத்துல 350 நாளும் செய்யனும்ன்னு முயற்சி பண்றீங்களே அங்க தான் தப்பு,

நல்ல பதிவு, நன்றி,