July 28, 2010

தோசையம்மா தோசை...

தோச்சைம்மா தோச்சைம்மா
அம்மா சுட்ட தோசை
அர்ச்சி மாஆவு உள்ந்து மாஆவு
அர்ச்சு சுட்ட தோச்சை
அப்பாக்கு நாலு
பாப்பாக்கு ஒன்னு
தின்ன தின்ன ஆச்சை
இன்னும் கேட்டா பூச்சை.

முடிக்கும்போது டப்பென்று எதிரிலிருப்பவருக்கு அடி விழும். ஜூனியரின் ரைம்ஸ் லிஸ்டில் அம்மா சேர்த்தது.

சிம்பிள் & ஈஸி டிபன் லிஸ்டில் தோசயை சேர்க்கலாம். ஒரே மாவை வைத்துக்கொண்டு நாலைந்து ஐட்டம் தேத்திடலாம். இந்த தோசையை அடிப்படையாய் வைத்து பத்து பக்கத்துக்கு ஒரு மெனு கொண்ட ஹோட்டல் தான் Dosa Calling. மெனுவில் கற்பனை குதிரை றெக்கை கட்டி பறக்கிறது.

தமிழகத்தில் ஆரம்பிக்கிற மெனு, அப்படியே மைசூர் மசாலா தோசை, ஆந்திரா பெசரெட்டு, பக்கத்துல சிங்கப்பூர், சைனா என ஓரியண்டல் வகை, அப்படியே பான்கேக்ஸ் என ஒரு இண்டர்நேஷனல ட்ரிப் அடிக்கிறது.

தோசை வகைகள், ஊத்தப்ப வகைகள், அடை வகைகள், அப்புறம் இண்டர்நேஷனல் தோசை வகைகள் (Just the stuffing is different), அப்புறம் ஐஸ்க்ரீம் தோசை (Pancakes topped with ice-creams) எனப் போகிறது மெனு. முக்கால்வாசி தோசைகள் ஸ்டஃப்டு வெரைட்டீஸ். நாங்கள் மைசூர் மசாலா தோசை (உருளையுடன் மிளகாய் பேஸ்ட் மிக்ஸ் பண்ணி வித்யாசமான டேஸ்டில் இருந்தது), செட் தோசை, செஸ்வான் தோசை, ஓரியண்டல் ஸ்டஃப்டு தோசை ஆகியவை ஆர்டர் செய்தோம். எல்லாமே நன்றாக இருந்தது. சாம்பார் ரொம்ப நன்றாக இருந்தது. சட்னி வகைகள் ஆவரேஜ் தான். செட் தோசைக்கு வடைகறி இல்லை. ஜூனியருக்கு ப்ராப்ளமாய் தெரியவில்லை:) ஐஸ்க்ரீம் தோசைல பான்கேக் கொஞ்சம் ஹார்டாய் இருந்தது. டேஸ்ட் வாஸ் குட்.

டிபன் மட்டுமில்லாமல் சவுத் இண்டியன் லஞ்சும் உண்டு. தாலி மீலாக கிடைக்கிறது போலும். ட்ரை செய்யவில்லை. அதனால் எப்படியிருக்கும் என்ற ஐடியா இல்லை. மெனுவில் பாயாசம் ஆஃப் தி டே என இருந்தது. ஆர்வமாய் கேட்டாய் லஞ்சுக்கு மட்டும்தான் என்றார்கள். மெனுவிலும் போட்டுத் தொலையாலாமே. வீணா ஆசை காட்டிட்டு:(

உணவகம் ஒக்கே. ஆனால் சின்னசின்னதாய் நிறைய குறைகள். அநியாயத்துக்கு கும்பல்.வெயிட்டிங்க் டைம் மினிமம் இருவது நிமிடங்கள். ஏசி எபெக்டே இல்லை/போடவில்லையா தெரியவில்லை. கொஞ்சம் ஓபன் கிச்சனாய் இருப்பதால் வெக்கையாக இருக்கிறது. சர்வ் செய்பவர்களுக்கு ட்ரெய்னிங் போதவில்லை. ஆர்டர் மாற்றி தருவது, டிலே, சர்விங் பிரச்சனை என நிறைய குளறுபடிகள்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Dosa Calling
உணவு - சவுத் இண்டியன் - Veg only
இடம் - அடையார் வெங்கடரத்தினம் நகர் (கஸ்தூரிபாய் நகர் அடுத்து). லாரன்ஸ் மேயோ ஷோரூம் கீழே. அதில்லாமல் கீழ்பாக்கத்திலும் ஒரு கிளை இருக்கிறது.
டப்பு - ஆவரேஜ். 25 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது தோசை விலை.


பரிந்துரை - தோசை விரும்பிகள் கண்டிப்பாக முயற்சிக்கலாம். Food is not impressive as the menu:(

18 comments:

Vijay said...

விபரம் கொடுத்ததற்கு நன்றி. ஒரு முறை விசிட் அடிக்கலாம் போலிருக்கே.
நீங்க சென்னையில் இருக்கும் அனைத்து உணவகங்கள் பற்றி ஒரு dossier / இணையதளம் ஆரம்பிக்கலாம் போலிருக்கே. சென்னைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் / புதிதாகச் சென்னைக்கு வருபவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

'பரிவை' சே.குமார் said...

athusari...

ennathaan irunthalum vettil sudum ilanthosaikku idakuma?

மங்குனி அமைச்சர் said...

அட ஏற்கனவே என் வீட்டுக்காரம்மா டெயிலி தோசை போட்டு உயிரை வாங்குது மேடம்

அமுதா கிருஷ்ணா said...

ஏமாத்து வேலை.தோசையில் எதையோ தூவியோ அல்லது கலந்தோ தருவதற்கு அநியாய விலை...

செ.சரவணக்குமார் said...

சுவையான பகிர்வு வித்யா. எப்போதாவது விடுமுறை நாளில் தமிழ் மக்கள் நடத்தும் உணவகங்களுக்குச் சென்றால் தான் தோசையைக் கண்ணில் பார்க்க முடியும். உங்கள் பதிவு இன்று அங்கு போகவைத்துவிடும் போலிருக்கிறது.

Vidhoosh said...

:)) "தோஷா" காலிங்
தோசையை போய் கடேல சாப்ட்டு ... என்னவோ போங்க.

Thamira said...

அந்தப்பக்கம் போனால் பார்க்கலாம். :-)

பா.ராஜாராம் said...

//அர்ச்சி மாஆவு உள்ந்து மாஆவு
அர்ச்சு சுட்ட தோச்சை//

:-))

vidhyamss said...

I have tried once. The manchurian Dosa was very very good and as you said the service got to be better and they should look for a bigger place.

அன்புடன் நான் said...

என்னது ஐஸ்கிரீம் தோசையா?

நல்லாயிருக்குங்க பகிர்வு.

அபி அப்பா said...

சுத்தம்! எனக்கு தோசைன்னா கொஞ்சம் அலர்ஜி! ஆனா ரவாதோசை பிடிக்கும். பஸ்ல இந்த பதிவு பார்த்துட்டு இங்க வந்தேன். இப்ப படிக்கும் போது ஆசை வருது லைட்டா:-))

VELU.G said...

தோசையில் இத்தனை விஷயங்களா?

Chitra said...

The ice-cream does not look impressive either.... yew!

சாந்தி மாரியப்பன் said...

தோசா பாட்டு செமடேஸ்ட்..

CS. Mohan Kumar said...

Very good review.

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜய் (ஹுக்கும்).

நன்றி குமார்(கண்டிப்பா வராது. தோசை மட்டுமல்ல எல்லா உணவுக்கும்).

நன்றி மங்குனி அமைசர்.
நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி சரவணக்குமார்.

நன்றி விதூஷ் (இட்லிக்கு இது எவ்ளவோ தேவல).

நன்றி ஆதி.
நன்றி பா.ரா சார்.

Vidhya Chandrasekaran said...

நன்றி Srividhya Sudhakaran.
நன்றி கருணாகரசு.
நன்றி அபி அப்பா.
நன்றி வேலு.

நன்றி சித்ரா (ஐஸ்க்ரீம் பரவாயில்லை. பான்கேக் வேஸ்ட்).

நன்றி அமைதிச்சாரல்.
நன்றி மோகன் குமார்.

Vigneswari Khanna said...

தோசை சாப்பிட நாக்கு அலையற நேரத்துல இப்படி ஒரு பதிவா... ஹூம்.