November 26, 2010

டாக்டர் கேப்டன் வால்க வால்க

நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நடந்தேறிவிட்டது. குருவியே டாக்டர் பட்டம் வாங்கும்போது அது பறக்கும் (அல்லது பறப்பதாக நம்பப்படும்) விண்ணையே ஆளும் எங்கள் விண்ணரசுக்கு டாக்டர் பட்டம் தாமதமாய்த் தான் தரப்பட்டிருக்குறது. Better late than never என்று மனசை தேற்றிக்கொண்டு விலா எடுக்க ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்துக்கொண்டிருக்கின்றது. ஜிப் வெச்ச ஷூ போடும் ஜூப்பர்மேன், டார்ச் வெச்ச தொப்பி போடும் தமில்தலைவன், விருத்தகிரி தரப்போகும் வித்தகன், கரண்டுக்கே ஷாக் கொடுக்கும் ட்ரான்ஸ்பார்மர், புல்லட்டையே புஸ்வாணமாக்கும் பூகம்பம் டாக்டர் கேப்டன் வால்க வால்க..

************

கேப்டனா நடிச்சேன் கேப்டன் பட்டம் கொடுத்தீங்க. டாக்டரா நடிச்சேன். டாக்டர் பட்டம் கொடுத்தீங்க. அடுத்தது முதலமைச்சரா நடிக்கப் போறேன். பார்த்து பண்ணுங்க சாமீங்களா

ஃபோர் பீசஸ். நாட் இனஃப்..Sing in the rain..

கேப்டன் : நீ வேணா பாரேன். எதிர்காலத்துல இந்தக் குழந்தைங்க எதுக்குமே பயப்படாத மாவீரர்களாக வருவாங்க.

அண்ணி : எதை வெச்சு சொல்றீங்க?

கேப்டன் : என்னை இவ்ளோ கிட்டத்துலப் பார்த்தும் அழுகாம தைரியமா இருக்குதுங்களே. அதான்.

ஏய் இந்தாப்பா போட்டோகிராஃபர். என்னை மட்டும் எடு. கீழே உடைஞ்சிகிடக்கும் மெஷினையெல்லாம் எடுக்காதே.

அடுத்த படத்துல நான் BMஆ (PM) நடிக்கிறேன். கதை என்னான்னா, இந்தியாவின் தலைசிறந்த MNC கம்பெனில ஸ்டாஃபுகளா ஊடுருவி இந்தியாவை அழிக்கிற சாஃப்ட்வேர் ஒன்ன இன்ஸ்டால் பண்ற பாகிஸ்தான் தீவிரவாதிய ஒழிக்கிறேன். இந்தியால மொத்தம் முந்நூத்தி சொச்சம் சாஃப்ட்வேர் கம்பெனி இருக்கு....

ஏன்ப்பா இன்னும் கொஞ்சம் பெரிய விசிறி வாங்கிட்டு வந்திருக்கக்கூடாதா? பாரு எங்க ரெண்டு பேருக்கும் காத்தே போத மாட்டேங்குது.

யார்றா அது என்ன கிண்டல் பண்றது? என்கவுண்டர் பண்ணிடுவேன் ஜாக்கிரத.


டிஸ்கி : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்ட பதிவு.

18 comments:

எல் கே said...

காலையில் முழு நீள நகைச்சுவை . நன்றி

பவள சங்கரி said...

வித்யா.......கலக்கிட்டீங்க.....நகைச்சுவையரசி பட்டம் கொடுக்கிறேன்........வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

:-)))))))))

shunmuga said...

ரொம்பனல்லாருக்கு

Chitra said...

யார்றா அது என்ன கிண்டல் பண்றது? என்கவுண்டர் பண்ணிடுவேன் ஜாக்கிரத.


....... அது நான் இல்லைங்கோ...... ஸ்கிரிப்பிலியது, வித்யாதான்! ஸ்ஸ்ஸ்ஸ் ..... நல்லா கிளப்புறாங்க பீதியை!

Unknown said...

மிக நல்லாருக்கு நகைச்சுவை

Anonymous said...

ஹா ஹா செம.. :))

அமுதா கிருஷ்ணா said...

சே என்னப்பா எங்க ஆளை இப்படி வாருரீங்க..

CS. Mohan Kumar said...

//நான் BMஆ (PM) நடிக்கிறேன்//

Heard this in his voice. :))))

Laughed heartily at many places.

தாரணி பிரியா said...

இதை டாக்டர்.கேப்டன். புரட்சிதலைவர் விஜயகாந்த் பார்த்தா முதல் ஆபரேஷன் உங்களுக்குதான் :)

'பரிவை' சே.குமார் said...

காலையிலயே வாய்விட்டு சிரிக்க வச்சிட்டிங்க...
ஏங்க எத்தனையோ குருவிங்க பறக்கம கிடந்தாலும் தூக்கி பேசுறீங்க... கேப்டன் நாட்டுப் பற்றோட இருக்காரு... அவரை இப்படி கலாய்க்கிறீங்களே... அடுத்த படத்துல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டா நடிக்கப் போறாராம் பாத்துக்க்கங்க.... ஆமா....

சிவகுமார் said...

Mudiyala !

விக்னேஷ்வரி said...

:)

மனோ சாமிநாதன் said...

அருமையான நகைச்சுவை வித்யா! கலக்கல் பதிவு!

ஹுஸைனம்மா said...

பதிவை வாசிச்சுகிட்டே, டாக்டர் வி.காந்த் அடுத்த ‘பாகிஸ்தான் ஆபரேஷன்” செய்யும்போது, உங்களைத்தான் அஜிஸ்டெண்டா கூப்பிட்டுப் போகச் சொல்லணும்; என்னா தகிரியமான புள்ளைன்னு நினைச்சுகிட்டிருக்கும்போதே இப்படி ஒரு டிஸ்கி!!

//டிஸ்கி : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்ட பதிவு.//

ஒரு சரவெடி புஸ்வாணமான உணர்வு!! ;-))))))))))

RVS said...

//என்கவுண்டர் பண்ணிடுவேன் ஜாக்கிரத//
டெர்ரரா இருக்கே.. நல்ல காமெடி. ;-)

FunScribbler said...

அந்த laptopகூட ஒரு படம் இருக்கே...ஐயோ...laptopவுக்கு சுத்தி போடனும்!!!

Thamira said...

கேப்டனை கலாய்க்கிறதுல முன்னணியில நீங்கதான் இருக்கீங்க. ஜாக்கிரதை ஆட்சியைப் புடிச்சுடப்போறாரு. :-)))))))))))))))))))))