November 19, 2010

பயணத் தேவைகளுக்கு...

தரை மற்றும் ஆகாய வழிப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு. நீங்கள் விரும்பும் மாடல் கார்/ஜீப்/பைக்குகள் குறைந்த விலைக்கு வாடகைக்குத் தரப்படும். பெட்ரோல் செலவில்லை. ட்ரைவருக்கு சம்பளம் தரத்தேவையில்லை. அதிவேகமான அதே சமயம் மிகப் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.

கார்கள் மட்டுமில்லாமல், தங்களுடைய பொருட்களை மிகக் குறைந்த செலவில் எங்கிருந்து எங்கு வேணுமானாலும் அனுப்பலாம். கண்டெய்னர் லாரிகள், ட்ரக்குகள், ஜேசிபி இயந்திரங்களும் கிடைக்கும்.

ஆடம்பரத்தை விரும்புவர்களுக்கு ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்டர்களும் கிடைக்கும். மேலே சொன்னது போல பைலட்டுக்கு சம்பளம் தேவையில்லை.


























வாகனங்களின் அணிவகுப்பு உங்கள் பார்வைக்கு....




ஒன்னு ரெண்டு வாங்கலாம். வாரத்திற்கு மூனு நாலு வாங்கறான். ஐ மீன் அப்பாவோ/மாமாவோ வாங்கிக் கொடுத்திடறாங்க. வீடு முழுக்க இறைஞ்சி கிடக்கு. இவன தூங்க வச்சிட்டு இதெல்லாத்தையும் ஒழுங்குப்படுத்தி வைக்கவே ஒரு மணிநேரம் பிடிக்குது:(

எந்திரிக்கும்போதே பஸ்ஸு, ஆட்டோ, லாரி, ரெட் கலர் காரு எல்லாம் வாங்கித் தர்றீயா என்ற கண்டிஷனோடு தான் பல் தேய்க்கும் வைபவம் ஆரம்பிக்கும்.

காலையில வேன் ஏறினவுடனே டாட்டா காமிச்சிட்டு, ஃப்ளையிங் கிஸ் கொடுத்திட்டு சார் சொல்றது “அம்மா ரெட் கலர் ஸ்கூட்டர்ல வந்திடு”. ஸ்கூட்டர்ல வந்திடு மட்டும் அப்படியே இருக்கும். டெய்லி ஒரு கலர். அதே மாதிரி கருப்பு கலர் பல்ஸர எங்கப் பார்த்தாலும் “அம்மா அவா தினேஷ் மாமா வண்டிய எடுத்துட்டு போறாங்க. தர சொல்லு” என அழுகை ஆரம்பித்துவிடும். பஸ்ஸையோ காரையோ எடுத்து வைத்துக்கொண்டு ”அம்மா நீ என் பக்கத்துல உக்காச்சிக்கோ. அப்பா டிக்கெட் வாங்கு” என விளையாட ஆரம்பித்துவிடுவான்.

மாமன மாதிரியே மெக்கானிக்கல் எஞ்சினியரா வருவானோ?

இன்னும் நிறைய தூரமிருக்கு. இப்பதான வண்டில ஏறியிருக்கான்:)

17 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அங்கயும் இதே கதையா.. :))

Vidhoosh said...

ஏன்.. இந்த பெரியத்தை மாதிரி ஸ்கூட்டர் ஓட்டுனராக வந்தால்... இல்லை அம்மா மாதிரி பஸ் ஓட்டுனராக வந்தால்... இப்படி எவ்ளவோ கேரியர் ஆப்ஷன்ஸ் இருக்கே...

எல் கே said...

என் பொண்ணு சமத்து. விளையாடிட்டு திருப்பி அலமாரில வச்சிடுவா

பவள சங்கரி said...

நாந்தான் முதலா...... நல்ல சுட்டிக் குழந்தை......மாமாவைவிட பெரிய ஆளா வருவான் வித்யா.....வாழ்த்துக்கள்.

கவிதா | Kavitha said...

நானும் என் பைனோட கார் எல்லாம் போட்டொ எடுத்து போடப்போறேன்.. போட்டிக்கு.. :))

உடைக்காம வச்சி இருக்கான், இப்ப வரைக்கும் வேற யாரையும் தொட விடாம பாத்துக்கறான்.. :)))

Romeoboy said...

பரவால எல்லாம் ஒழுங்கா இருக்கும். என்னோட ஜூனியர் எல்லாத்தையும் தூக்கி போட்டு ஓடச்சிடுவான்...

Thamira said...

உங்க வீட்ல ரெட் கலரா? இங்கே ப்ளூ கலர்.

புளூ கலர் கார், புளூ கலர் சப்பல், புளூ கலர் பேண்டு, புளூ கலர் வாழைப்பழத்துக்குதான் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிகிட்டிருக்கேன்.

Thamira said...

:-))

Anonymous said...

அந்த ஜெட் விமானம் பார்த்தா ஏரோ நாடிகல் என்ஜினியரா வருவான் போல தெரியுது ;)

விஜி said...

:))))))))))

'பரிவை' சே.குமார் said...

எல்லா வீட்லயும் நடக்கிறதுதான்... இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது... உங்க குட்டியாவது சின்னதா வாங்குறான்... எங்க ஆளு இப்பதான் பேச ஆரம்பிக்கிறாரு... அதுக்குள்ள கார் (பெரிய கார்) வேணுமாம்...

ராமலக்ஷ்மி said...

என் மகனும் சின்ன வயதில் இதுபோலதான்:)!

CS. Mohan Kumar said...

So sweet !! Enjoy this period fully.

I used to write my daughter's naughty things in a separate diary. Do not want to share it now in my blog, as she has a chance to read the blog & may not like it.

அமுதா கிருஷ்ணா said...

சோ ஸ்வீட். என் மகன் நகுல் சின்னவயதில் பெரியவனாகி பெரிய கார் வாங்கி அதில் எங்க எல்லோரையும் கூட்டிப்போய் ரயில்வே ட்ராக் பக்கம் நிறுத்தி ட்ரையின், கூட்ஸ் வேடிக்கை காண்பிப்பேன் என்பான்.சரியான ட்ரையின் பைத்தியம். பசங்கனாவே கார், ஸ்கூட்டர், ட்ரையின் என்று தான் பிடிக்கிறது..

Vidhya Chandrasekaran said...

நன்றி முத்துலெட்சுமி.
நன்றி விதூஷ்.

நன்றி LK (இவன் விளையாடறானோ இல்லையோ. எல்லாத்தையும் கடை பரப்பி வைக்கனும்).

நன்றி சங்கரி மேடம்.
நன்றி கவிதா.
நன்றி ரோமியோ.

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதி.
நன்றி பாலாஜி.
நன்றி விஜி.
நன்றி குமார்.
நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி மோகன் குமார் (அதுக்குத்தான் லேபிள் போட்டு வச்சிருக்கேன். Once he grows up will delete all if in case he is not ok with it).

நன்றி அமுதா கிருஷ்ணா.

R.Gopi said...

நல்லா காட்டினீங்க வண்டிங்க அணிவகுப்பை....

இங்கேயும் வாங்க.... வந்து வாயார சிரிச்சுட்டு போங்க....

உடன்பிறப்புகளுக்கு ஒரு உருக்கமான கடிதம் http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post_14.html

மன்மத அம்பு - கப்பலில் காதல்
http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html