November 23, 2010

Harry Potter and the Deathly Hallows - Part I

டம்பிள்டோரின்(Dumbledore) மறைவைத் தொடர்ந்து ஹாரி பாட்டரும் அவன் நண்பர்களும் வால்டிமோர்ட்டை(Voldemort) அழிக்க புறப்பட்டிருக்கும் கதையின் முதல் பாகம். டெத் ஈட்டர்ஸின் (Death Eaters) ஆதிக்கம் அதிகரிப்பதைத் தொடர்ந்து ஹாரியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முடிவு செய்கிறார்கள். மேட் ஐ (Mad Eye) தலைமையில் சிலரை ஹாரி போலவே மாற்றி அனைவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். உண்மையான ஹாரி யார் எனத் தெரியாமல் டெத் ஈட்டர்ஸ் குழம்புவதைக் கொண்டு ஹாரி தப்பிக்கிறான். இந்தப் போராட்டத்தில் மேட் ஐ இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் மேஜிக் மினிஸ்ட்ரியிலிருந்து வருபவர் டம்பிள்டோர் ஹாரி, ரான் மற்றும் ஹெர்மாயினிக்காக சில பொருட்களை விட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிட்டு அவற்றை அவர்களிடம் ஒப்படைக்கிறார். வால்டிமார்ட்டை அழிக்க மீதமிருக்கும் Horcruxes (ஏற்கனவே இரண்டு அழிக்கப்பட்டுவிட்டன. ஒன்று டாம் ரிட்டிலின் டைரி. மற்றொன்று வால்டிமார்ட்டின் முன்னோரின் மோதிரம்) அழிக்கப்படவேண்டுமென்பதால் மூவரும் அவற்றைத் தேடி பயணிக்க முடிவு செய்கின்றனர். மீண்டும் டெத் ஈட்டர்ஸின் தாக்குதலில் இருந்து தப்பி மூவரும் நகரத்திற்கு வருகின்றனர். வந்த இடத்தில் உண்மையான ஸ்லிதரின் லாக்கெட் யார் வசமிருக்கிறது என்பதை அறிந்து கொள்கின்றனர். இதில் டாபி (Dobby - the elf) ஹாரிக்கு உதவுகின்றது. இதற்கிடையில் மினிஸ்ட்ரியில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. வால்டிமார்ட்டின் கை ஓங்குகிறது.

பாலி ஜூஸின் உதவியால் மூவரும் மினிஸ்ட்ரி ஸ்டாஃப்களை போல் உருமாறி ஸ்லிதரின் லாக்கெட்டை கவர்ந்துகொண்டு தப்பிக்கின்றனர். அந்த லாக்கெட்டினால் ரானுக்கும் ஹாரி பாட்டருக்கும் சண்டை வருகிறது. ரான் கோபித்துக்கொண்டு சென்றுவிட லாக்கெட்டை அழிப்பதற்கு தேவையான க்ரிஃப்பிண்டோர் வாளைத் தேடி ஹெர்மாயினியும் ஹாரியும் பயணிக்கிறார்கள். ஹாரி வாளைக் கண்டெடுக்கும் வேளையில் ரானும் வந்து சேர்ந்துக்கொள்ள ஸ்லிதரின் லாக்கெட்டை அழிக்கிறார்கள். மீதமிருக்கும் horcruxesன் இருப்பிடம் தெரியாத வேளையில் டம்பிள்டோரின் நண்பன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் லவ்குட்டின் (Lovegood)மூலம் டெத்லி ஹாலோஸ் (Deathly Hallows) என்ற புனிதப் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். அங்கேயும் டெத் ஈட்டர்ஸ் இவர்களை துரத்துவதால் அங்கிருந்து தப்பிக்கும்போது ஸ்னாட்ட்சர்ஸிடம் (Snatchers)மாட்டிக்கொள்கிறார்கள். வால்டிமார்ட்டின் சப்போர்டர்களான மெக்ஃபாய் அண்ட் கோவிடம் இருந்து தப்பிக்க டாபி உதவுகிறது. அந்தப் போராட்டத்தில் டாபி இறந்துவிடுகிறது. டெத்லி ஹாலோஸில் ஒன்றான elder wand டம்பிள்டோர் வசமிருப்பதை அறிந்துக்கொள்ளும் வால்டிமார்ட் டம்பிள்டோரின் கல்லறையை உடைத்து அதைக் கவர்கிறான்.

ஹாரி மற்ற horcruxesகுளை கண்டுபிடித்தானா? வால்டிமோர்ட்டை அழித்தானா என்பது இரண்டாம் பாகத்தில் வருமென நினைக்கிறேன். நான் ஹாரி பாட்டர் நாவல்களைப் படித்ததில்லை. ஆனால் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இந்தப் படத்தில் நகாசு வேலை கம்மிதானென்றாலும் விறுவிறுப்பும் நகைச்சுவையுமாக செல்கிறது படம். ரான் வீஸ்லி பேசும் டயலாக்குள் சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக மினிஸ்ட்ரியில் உருமாறி நுழையும்போதும், அங்கிருந்து கிளம்பும்போதும், ஹெர்மாயினியின் கோபத்தை போக்க முயலும்போதும் நல்ல நகைச்சுவை. ஹாரி - மந்திரவாதிகளுக்கு ஏன் வயசாகிறது? சிறு வயது ஹாரியே பார்க்க நன்றாக இருக்கிறான் (கழுதக் கூட குட்டில நல்லாயிருக்கும்??!!!). தனக்காக பிறர் உயிர்விடுவதை நினைத்து வருந்தும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. எம்மா வாட்சனின் அழகு படத்திற்குப் படம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஹாரியை விட்டுப் போக முடியாமல், ரானையும் தடுக்க முடியாமல் அவஸ்தை படும் காட்சிகள் அருமை.

சத்யம் தியேட்டரில் சென்ற சனிக்கிழமை சென்றிருந்தோம். வந்திருந்த மொத்தக் கூட்டத்தில் முக்கால்வாசி பீட்டர் பாண்டி கூட்டமாகத்தான் இருந்தது. அதுவும் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இரு பெண்கள் டூ மச். என்னவோ ஹாரியைப் பார்த்ததும் ஜென்ம சாபல்யம் அடைந்ததைப் போன்ற பில்டப். குலவை போட்டு தீ மிதிக்காதது ஒன்றுதான் குறை. வில்லன் வர்றான் ஓடு ஒடு என்ற அம்மாக்கள் எம்ஜிஆர் படம் பார்த்து உணர்ச்சிவசப்படுவதுபோல் கத்திக்கொண்டிருந்தார்கள்.

“Oh my god those f***ing snatchers r going to get them"

"Oh Dobby is going to die. Faster. faster" என படம் முழுவதும் அரற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாமல் கொஞ்சம் கதை சொல்லாம சும்மாருக்கீங்களா என்றேன். அதற்கு “Sorry. we got excited u know" என்றதுகள். ஹுக்க்கும்.

வீட்டுக்கு வந்ததும் அப்பா கால் செய்தார்.

“என்ன படம்?”

“ஹாரி பாட்டர்ப்பா”

“ஹூம். வெள்ளைக்காரன் நல்லா காதுக் குத்தி வுட்ருப்பான். வாயப் பொளந்து பார்த்திருப்பீங்களே. என்ன கதை?”

சொன்னேன். உடனே “அட நம்ம அம்புலி மாமா ஸ்டைல் கதை. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி, ஏழு பொருட்கள் இருக்கிற மந்திரவாதியோட உயிரை அழிக்கறது. இதுவே நம்மாளுங்க எடுத்தா கிண்டல் பண்ணுவீங்க. வெள்ளைக்காரன் சொன்னா என்னா க்ராபிக்ஸ்ப் பாருன்னு பாராட்டுவீங்க.”

“அப்படி இல்லப்பா. நம்மூர்ல க்ராபிக்ஸ்ங்கற பேர்ல கொல்லுவாங்கப்பா. இங்க வில்லன் தேளா/பாம்பா மாறவோ, ஆயிரக்கணக்குல சூலம் வரவோ, வில்லனோட மூக்கோ நாக்கோ பெருசாவறதுக்கோதான்பா க்ராபிக்ஸ் யூஸ் பண்றாங்க.”

“அங்க மூக்கே இல்லாத வில்லன க்ராபிக்ஸ்ல காட்றாங்க. எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைங்கதான். சரி குழந்தை என்ன பண்றான்? பத்திரமா பார்த்துக்கோ.”

டொக்.

ஙே!!!

15 comments:

எல் கே said...

உங்கள் தந்தை சொன்னது உண்மைதான்.

விஜி said...

:))))))))

Chitra said...

சத்யம் தியேட்டரில் சென்ற சனிக்கிழமை சென்றிருந்தோம். வந்திருந்த மொத்தக் கூட்டத்தில் முக்கால்வாசி பீட்டர் பாண்டி கூட்டமாகத்தான் இருந்தது.


...... :-)))

CS. Mohan Kumar said...

கதை சுத்தமா புரியலை. அதுக்கு பிறகு எழுதியது தான் புரிந்தது. இதுக்கு தான் விஜய் மற்றும் சன்னில் தமிழில் டப் பண்ணி போடும் போது பாக்கணும்.அப்படி பாக்கும் போது படமும் புரியும். சில இடங்கள் அவர்கள் பேசும்/ பாடும் விதம் செம காமெடியா இருக்கும்

Unknown said...

கதை படிச்சதில்லையா நீங்க?

☀நான் ஆதவன்☀ said...

:))))

அந்த மூன்று சகோதரர்கள் கதையை பத்தி சொல்லயே? எனக்கு அந்த கதையில கொஞ்சம் புரியல.

படம் எதிர்பார்த்த அளவு இந்த தடவை இல்லைன்னாலும் அடுத்த பார்ட்டோட எதிர்ப்பார்பை எக்குதப்பா கூட்டியிருக்கு.வெயிட்டிங் ஃபார் பைனல் பார்ட் :)

'பரிவை' சே.குமார் said...

அப்பாவின் கூற்றுக்கே ஆதரவு.

விக்னேஷ்வரி said...

அங்கங்கே அடைப்புக்குள் ஆங்கில வார்த்தைகள் குடுத்ததால் கதை புரிய முடிகிறது. இல்லைன்னா தமிழ்ல ஆங்கிலப் பெயர் வாசிக்கவே நேரம் போய்டுது.

பாவம் நீங்க. பல இம்சைகளுக்கு நடுவுல உக்காந்து படம் பார்த்திருக்கீங்க. பொறுமைசாலின்னு பட்டம் குடுக்கலாமா..

பவள சங்கரி said...

Appa is correct.

செ.சரவணக்குமார் said...

அப்பா அசத்தீட்டாங்க.. நல்ல பதிவு மேடம்.

Veena Devi said...

well said appa :-)

Vidhya Chandrasekaran said...

நன்றி LK.
நன்றி விஜி.
நன்றி சித்ரா.

நன்றி மோகன் குமார் (ஷாங்காய் நுன் - ஜாக்கி சான் படத்தில் தண்ணின்னு ஒரு பாட்டு வரும். செம்ம).

நன்றி முகிலன் (இல்லீங்களே. ஏதாவது தெய்வ குத்தமாயிடுமா:))).

நன்றி ஆதவன் (எனக்கென்னவோ இந்த டெத்லி ஹாலோஸ் கொண்டு தான் வால்டிமோர்ட்டை அழிக்க முடியும் என்றுத் தோன்றுகிறது. Voldemort steals the elder wand from dumbledor's coffin. Elder wand was the one mentioned in the tale of three brothers).

Vidhya Chandrasekaran said...

நன்றி குமார்.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி சங்கரி மேடம்.
நன்றி சரவணக்குமார்.
நன்ரி மித்ரா அம்மா.

☀நான் ஆதவன்☀ said...

//Voldemort steals the elder wand from dumbledor's coffin. Elder wand was the one mentioned in the tale of three brothers). //

அந்த elder wand வச்சிருக்கவங்களை யார் கொல்றாங்களோ அவங்ளுக்கு தான் wand உபயோகப்படுத்த முடியும். dumbledor கொன்னது Severus Snape. ஸோ அவனுக்கு தான் அந்த wand Severus Snape க்கு மட்டும் தான் இப்போதைக்கு உபயோகப்படும். அடுத்த பார்ட்ல இதை தெளிவா எதிர்பார்க்கலாம்னு நினைக்கிறேன்.

Thamira said...

நானும் இத்தொடர் படங்களின் ரசிகன்தான். குறிப்பாக முதல் இரண்டு படங்களில் சிறுமியாக இருந்த 'எம்மா வாட்சனி'ன் அழகும், பேச்சும் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

வாயைச் சுழித்துக்கொண்டு 'ஸோர்ஸ்ரஸ் ஸ்டோன்' என்று அவர் உச்சரிப்பதே அவ்வளவு அழகாக இருக்கும்.

*****

உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள் ரொம்பவே சுவாரசியமானவை. நிறைய எழுதுங்கள்.