February 29, 2012

Scribblings 29-02-2012

வாகனங்களில் போலீஸ், டாக்டர் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதில் ஒரு அர்த்தமிருக்கு. குறிப்பாக டாக்டர் என உணர்த்தும் ஸ்டிக்கர்கள், நிறைய இடங்களில் அவசரத்துக்கு உதவியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். சமீபகாலமாக வக்கீல் என உணர்த்தும் ஸ்டிக்கர்களை கார்களில் நிறையப் பார்க்கிறேன். எதற்கு எனத் தெரியவில்லை. ஒருவேளை ”வண்டில மோதின, மவனே, கோர்ட்டு கேஸுன்னு இழுத்து விட்றுவேன்”னு பயமுறுத்த இருக்குமோ? மோகன்குமார் நீங்களும் அப்படி ஒட்டியிருக்கீங்களா? இதப் பார்த்துட்டு ரங்ஸ் சொன்னார் “பேசாம நானும் வண்டில சாஃப்ட்வேர் எஞ்சினியர்ன்னு ஸ்டிக்கர் ஒட்டட்டுமா?”. நான் சொன்னேன் “ஹுக்கும். ஒவ்வொரு தெருமுக்குலயும் மாம்ஸுங்க வசூல் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த ஸ்டிக்கர் பார்த்தா டபுளா கப்பம் கட்ட வேண்டியிருக்கும். பரவால்லையா?”. ஆப்போசிட் சைட் கப்சிப். வழக்கம்போல:)))
*************

சமீபத்தில் இரண்டு சாஃப்ட் ட்ரிங்ஸ் விளம்பரங்களின் இசை பெரிதும் கவர்ந்தது. ஒன்று கோகோ கோலா. கோரஸாக கேட்கும் குழந்தைகளின் குரல் கொள்ளை அழகு. கான்செப்டும் ஓக்கே. பார்த்துக்கொண்டிருக்கும்போது உறவினர் ஒருத்தர் அடித்த கமெண்ட் “அப்படியே ஒரு பாட்டில் கோக் பண்ண, எவ்வளவு லிட்டர் தண்ணீர் நாசமாப்போகுதுன்னும் சொல்லிருக்கலாம்” - அதானே. இன்னொரு விளம்பரம் செவன் அப்பின் I feel up. தமிழ் ட்ரான்ஸ்லேஷன் கொடுமையாக இருந்தாலும், பீட்ஸ் நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்த இரண்டு வரிகள் ”ரேஸில் ரிவர்ஸிற்கு பயனில்லை. சோகத்தை மேகத்தில் துடைக்கிறேன்”. நீங்களும் பாருங்க.


***********

கடந்த பத்து நாட்களாக தொண்டை வலி, வறட்டு இருமல் உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறது. நண்பர்கள், ப்ளஸ்ஸர்கள் என அனைவரும் சொல்லிய அத்தனை கை வைத்தியத்தையும் செய்து பார்த்து சரியாகவில்லை. வழக்கம்போல ஹாஸ்பிட்டலில் தஞ்சமடைந்தால், அந்த டாக்டர் வலியே பரவாயில்லையென்ற அளவுக்கு மொக்கை போட்டார். சாம்பிளுக்கு

When was ur last LMP?

அப்படின்னா?

LMPன்னா தெரியாதா? (கேவலமான லுக் விட்டுகிட்டே)

தெரியாது.

என்ன படிச்சிருக்கீங்க?

டாக்டருக்கு படிக்கல (செம்ம கடுப்புல சொன்னேன்)

வாட்?

நத்திங். Does that really matter now?

ஓக்கே. LMPன்னா Last Menstrual Period. புரிஞ்சுதா.

நல்லா. என் GK இம்ப்ரூவ் பண்ணதுக்கு நன்றி.

(இப்ப டாக்டர் டென்ஷனாயிட்டாங்க.)

ஊசி ஒன்னு போட்டுகறீங்களா?

வேண்டாம். மாத்திரையே போதும்.

ஏன் விஷ ஊசி போட்டுடவேன்னு பயமா? ஹா ஹா ஹா ஹா.

அவ்வ்வ்வ். தேடிப்போய் சிக்கறேன் போலிருக்கு:(
*************

ஜூனியரை ரெகுலர் செக்கப்பிற்காக அழைத்துக்கொண்டு போயிருந்தேன். ஒன்றரை வருடமாக அவன் வெயிட் 14.5 - 16கிலோவிலே இருக்கிறது. ஏறுவதும் இல்லை. இறங்குவதுமில்லை. எனக்கு அதைப்பற்றி பெரிய கவலை இல்லையென்றாலும், பார்ப்பவர்கள் எல்லாம் புள்ள ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கான்ங்கற கேள்வியக் கேட்டுகிட்டே இருக்காங்க. அதுவும் என் பக்கத்துல நிக்கும்போது கேக்கவே வேணாம்:)) வீட்டிலும் பெரியவர்கள் பீடியாஸ்யூர் போன்ற ஊட்டச்சத்து பானங்களை கொடுக்க சொல்லி வற்புறுத்திகிட்டிருக்காங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. இம்முறை டாக்டரிடம் வெயிட் பற்றி கேட்டபோது அவர் சொன்னது சுவாரசியமாய் இருந்தது.

2 வயது வரை தான் எடை அதிகரிக்க வேண்டும்.
2-32 வயது வரை அறிவு வளர வேண்டும்.
32-64 வயது வரை செல்வம் வளர வேண்டும்.
64 வயதிற்கு மேல் ஞானம் வளர வேண்டும் என்றார். அறிவு வளர வேண்டிய வயதில் எடை கூடினால் அறிவு வளராது என்றார். அவன் வயசுக்கு நார்மலான வெயிட் தான் இருக்கான். பால் குடிக்கலைன்னா கூட கவலைப்படாதீங்க. நீங்க சாப்பிடற உணவையே கொடுங்க. விளையாட்டு. கூடவே நீச்சல் பயிற்றுவிக்க சொன்னார். நீச்சல் கற்றுக்கொண்டால், உடல் உறுதியாகும். அப்புறம் என்னைப் பார்க்க வர வேண்டியிருக்காது என்று சிரித்துக்கொண்டே விடைகொடுத்தார்.
*******************

தோனி படம் பார்த்தோம். படம் நன்றாக இருக்கிறது 3 இடியட்ஸ்/நண்பன் படங்களின் கான்செப்ட் தான். பிடிக்காததை படிக்காதே/செய்யாதே. பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருந்தாலும் சில காட்சிகள் சீரியல்/ட்ராமா மாதிரி இருந்தது. குறிப்பாக எப்பப்பார்த்தாலும் ஹெல்மெட் மாட்டிகிட்டே சுத்துவது கடுப்பாக இருந்தது. ஒரு சில சீன்களை தவிர்த்து படம் நீ வொர்க். நிறைய சீன்களுக்கு தியேட்டரில் கைதட்டல்களும், விசிலும் தூள் பறந்தன. குறிப்பாக ஆசிரியை ஒருவரிடம் பிரகாஷ்ராஜ் “நீங்க மட்டும் ஒரு சப்ஜெக்ட்ட தான் தெரிஞ்சு வச்சிருப்பீங்க. பசங்க மட்டும் இத்தனை பாடம் படிக்கனுமா?” எனக் கேட்டபோது எழுந்த கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாயிற்று. நீயா நானாவில் கல்வி சுகமா சுமையா என்ற விவாதம் நடப்பது போல் படத்தில் காமித்தார்கள். நெஜமாவே நீயா நானால இப்படியெல்லாம் உருப்படியான விவாதமெல்லாம் நடத்தறாங்களா என்ன? என்னமோ போடா மாதவா:)

17 comments:

Romeoboy said...

காருல ஓட்டுறது எல்லாம் ஓல்ட் பேஷன் .. டிவிஎஸ் எச்கல் வண்டியில TNEB, secretariat ,செ.மா ஓட்டுறது தான் லேட்டஸ்ட் டிரெண்ட :)

Ŝ₤Ω..™ said...

ஆமா வித்யா.. இந்த ஸ்டிக்கர் ஒட்டறதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாம போய்ட்டு இருக்கு.. Indian Bank, State Bank, “அ”, அரசியல் தலைவர் படங்கள் இதெல்லாம் ஒட்டி என்ன சொல்லவறாங்கன்னே புரிய மாட்டேங்குது..

Ŝ₤Ω..™ said...

ஆமா வித்யா.. வர வர ஸ்டிக்கர் ஒட்டறதுக்கு விவஸ்தையே இல்லாம போய்ட்டு இருக்கு.. Indian Bank, State Bank, “அ”, TNEB இதெல்லாம் எதுக்கு ஒட்டறாங்க?? எல்லாத்துக்கும் மேல, அரசியல் தலைவருங்க படம் எல்லாம் ஒட்டி வச்சிகுறாங்க.. என்ன சொல்ல வராங்கன்னே புரிய மாட்டேங்குது...

ப.கந்தசாமி said...

நல்ல மொக்கை?????????!!!!!!!!!!!!!

பவள சங்கரி said...

அன்பின் வித்யா,

வழக்கம்போல கலக்கிட்டீங்க..... 4 பதிவு போட வேண்டிய விசயத்தை ஒரே பதிவா நறுக்குனு போட்டிருக்கீங்க.... வாழ்த்துகள்.

Unknown said...

//நெஜமாவே நீயா நானால இப்படியெல்லாம் உருப்படியான விவாதமெல்லாம் நடத்தறாங்களா என்ன? //

காலைல டிஃபனுக்கு எது பெஸ்ட்? இட்லியா தோசையான்னுல்ல விவாதம் நடக்குது ;-)

ஹுஸைனம்மா said...

வண்டியில் ஸ்டிக்கர் - என்னை மாதிரி ஹவுஸ்பாஸ் எல்லாம் என்னன்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கீறது, “சொர்ணாக்கா சிஷ்யை”ன்னா? :-))))

//வக்கீல் என உணர்த்தும் ஸ்டிக்கர்களை//

மொபைல் கோர்ட் மாதிரி, ’சம்பவம்’ நடந்த இடத்துலயே கேஸைப் பிடிக்கிறதுக்கா இருக்குமோ? :-)))))))

//மோகன்குமார் நீங்களும் அப்படி ஒட்டியிருக்கீங்களா?//
அவரோட வீட்டம்மா, மொபைலைத் தொலச்சப்போ, அவங்க வீட்டுக்காரர் ஒரு வக்கீல்னு சொன்னதும் கிடைச்சிடுச்சாம்!! :-))))

LMP - இங்க தலவலி, பல்வலின்னாக்கூட அதைக் கேட்டு எழுதிக்குறாங்க. மெடிக்கல் ஹிஸ்டரிங்கீற பேர்ல நம்ம பரம்பரையையே துழாவி எடுத்துடுறாங்க!! :-))))

ஒரு 15 வருஷம் முன்னாடி சென்னையில் ஒரு பிரபல ஆஸ்பத்திரில, அப்பத்தேன் டாக்குட்டர் பட்டம் வாங்குன ஒரு ஜூனியர் டாக்டர் “Flatulence இருக்கா”ன்னு கேட்டதும், நான் பேந்த பேந்த முழிச்சதும்... கூட நின்ன எங்கப்பாதான் ‘மொழிபெயர்த்தார்’!! :-)))))

ஹுஸைனம்மா said...

என் பெரியவனுக்கும் இதே போல எடை பிரசனை இருந்தப்போ, டாக்டரிடம் கேட்டப்போ, ‘பிறக்கும்போது 3கி இருக்கிற குழந்தை, ஒரு வருஷத்துல 10கி ஆகுது. இப்படியே ஒவ்வொரு வருஷமும் 7-8கி கூடணும்னு உன்னை மாதிரியே ஒவ்வொரு அம்மாவும் நினைச்சா, பூமி தாங்குமா?’ன்னார்.

இன்னொரு டாக்டர்ட்ட, பூஸ்ட், காம்ப்ளான் கொடுத்தா வெயிட் கூடுமான்னு கேட்டேன். ‘உன்கிட்ட காசு நிறையா இருந்தா தாராளமா வாங்கிக் குடு. அதுக்கப்புறம் சளி, இருமல்னு எனக்கும் ஃபீஸ் தரணும். அதுக்கும் சேத்து வச்சுக்கோ’ன்னார். :-))))))))

CS. Mohan Kumar said...

//மோகன்குமார் நீங்களும் அப்படி ஒட்டியிருக்கீங்களா? //

முழு பதிவையும் நான் படிப்பேன்னு நினைச்சீங்க பாருங்க. I like it !

கம்மிங் டு தி பாயின்ட், (சோடா பிளீஸ் ) வக்கீல் என்று ஸ்டிக்கர் ஓட்டினால், போலிஸ் பிடிப்பதில்லை. அது போலிசுக்காக மட்டுமே ஒட்டப்படும் ஸ்டிக்கர். மற்றவர்களுக்கு அல்ல.

நான் (தற்போது) அப்படி ஸ்டிக்கர் ஒட்டலை !
***
//2-32 வயது வரை அறிவு வளர வேண்டும்.// உங்களை பாத்து இப்படி சொல்லிட்டாரே :))
**
தோனி பத்தி நானும் எழுதனும்னு வெயிட்டிங். ஹெல்மெட் போட்டது எனக்கு பிடிச்சுது. ( Tastes differ) ; ஆனா ஒரிஜினலில் ஹீரோ எங்கெங்கே ஹெல்மெட் போட்டாரோ அதே இடங்களில் நம்ம ஆளும் போட்டுருப்பார் :))

CS. Mohan Kumar said...

//என்னை மாதிரி ஹவுஸ்பாஸ் எல்லாம் என்னன்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கீறது, “சொர்ணாக்கா சிஷ்யை”ன்னா?//

ரெண்டு உண்மையை ஒப்பு கொண்டதுக்கு நன்றி ஹுசைனம்மா (நீங்க தான் ஹவுஸ் பாஸ் + சொர்ணாக்கா )
**
//அவரோட வீட்டம்மா, மொபைலைத் தொலச்சப்போ, அவங்க வீட்டுக்காரர் ஒரு வக்கீல்னு சொன்னதும் கிடைச்சிடுச்சாம்!! :-))))

அடேங்கப்பா ! :))

Raghu said...

//நெஜமாவே நீயா நானால இப்படியெல்லாம் உருப்படியான விவாதமெல்லாம் நடத்தறாங்களா என்ன?//

மீசைய வெச்சு ஒரு ஷோ பண்ணியிருந்தாங்க பாருங்க....போங்கடா டேய்’ன்னு கத்தணும் போல இருந்தது.

Mukhilvannan said...

இன்னொரு ஸ்டிக்கர் அடிக்கடி இப்பொழுது தென்படுகிறதே! ஊடகம் Press என்று கொட்டை எழுத்துக்களில் ஒட்டப்பட்டு நிறைய வாகனங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

Vidhya Chandrasekaran said...

நன்றி அருண்மொழித்தேவன்.
நன்றி சென்.

நன்றி பழனி.கந்தசாமி (சந்தேகமே வேண்டாம்).

நன்றி சங்கரி மேடம்.

Vidhya Chandrasekaran said...

நன்றி KVR (ஓ அந்தளவுக்கு ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்க ஆரம்பிச்சிட்டுதா).

நன்றி ஹுஸைனம்மா (ஹி ஹி. நம்ம சொர்ணாக்கா சிஷ்யைன்னு ஸ்டிக்கர் ஒட்டியா சொல்லனும்:)Flatulence - அப்படின்னா?

நன்றி மோகன் குமார் (அவ்வ்வ். அப்ப நெசமாலுமே போஸ்ட்டெல்லாம் படிக்கறதில்லையா?)

நன்றி ர‌கு.(இந்த ப்ரோக்ராம பார்க்கிறதே இல்ல. எரிச்சல் தான் வருது:(

நன்றி முகில்வண்ணன். அதையும் சொல்லிருக்கேனே.

CS. Mohan Kumar said...

//மோகன் குமார் (அவ்வ்வ். அப்ப நெசமாலுமே போஸ்ட்டெல்லாம் படிக்கறதில்லையா?)//

கதம்பமா ஒரு பதிவு இருந்தால், நாலைந்து விஷயத்தில் நமக்கு பிடிச்ச ரெண்டு, மூணு விஷயம் மட்டும் தானே முழுசா படிப்போம்? அதிகம் ஆர்வம் இல்லாத விஷயம் எனில், அடுத்தது போயிடுவோம் இல்லியா? அதான் அப்படி சொன்னேன். நீங்கள் எழுதுவதே மூணு விஷயம் என்பதால் (அதுவும் சுவாரஸ்யம் என்பதால்) முழுக்க தான் பெரும்பாலும் படிக்கிறேன்

Bala said...

// ஆப்போசிட் சைட் கப்சிப். வழக்கம்போல:))) //

:)

// பார்ப்பவர்கள் எல்லாம் புள்ள ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கான்ங்கற கேள்வியக் கேட்டுகிட்டே இருக்காங்க. அதுவும் என் பக்கத்துல நிக்கும்போது கேக்கவே வேணாம்:)) //

அவங்க என்னமோ அக்கறையில சொல்லறதா நினைக்கிறாங்க. ஆனா கேட்கறவங்களுக்கு எப்படி இருக்கும்னு யோசிக்கறதில்லை.


// ஹுஸைனம்மா
என் பெரியவனுக்கும் இதே போல எடை பிரசனை இருந்தப்போ, டாக்டரிடம் கேட்டப்போ, ‘பிறக்கும்போது 3கி இருக்கிற குழந்தை, ஒரு வருஷத்துல 10கி ஆகுது. இப்படியே ஒவ்வொரு வருஷமும் 7-8கி கூடணும்னு உன்னை மாதிரியே ஒவ்வொரு அம்மாவும் நினைச்சா, பூமி தாங்குமா?’ன்னார்.

இன்னொரு டாக்டர்ட்ட, பூஸ்ட், காம்ப்ளான் கொடுத்தா வெயிட் கூடுமான்னு கேட்டேன். ‘உன்கிட்ட காசு நிறையா இருந்தா தாராளமா வாங்கிக் குடு. அதுக்கப்புறம் சளி, இருமல்னு எனக்கும் ஃபீஸ் தரணும். அதுக்கும் சேத்து வச்சுக்கோ’ன்னார். :-))))))))
//
ரொம்ப சரியா சொன்னீங்க ஹூஸைனம்மா. நீங்க பார்த்த டாக்டர்ங்க நல்ல அட்வைஸ் சொல்லியிருக்காங்க.

Bala said...

// ஆப்போசிட் சைட் கப்சிப். வழக்கம்போல:))) //

:)

// பார்ப்பவர்கள் எல்லாம் புள்ள ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கான்ங்கற கேள்வியக் கேட்டுகிட்டே இருக்காங்க. அதுவும் என் பக்கத்துல நிக்கும்போது கேக்கவே வேணாம்:)) //

அவங்க என்னமோ அக்கறையில சொல்லறதா நினைக்கிறாங்க. ஆனா கேட்கறவங்களுக்கு எப்படி இருக்கும்னு யோசிக்கறதில்லை.


// ஹுஸைனம்மா
என் பெரியவனுக்கும் இதே போல எடை பிரசனை இருந்தப்போ, டாக்டரிடம் கேட்டப்போ, ‘பிறக்கும்போது 3கி இருக்கிற குழந்தை, ஒரு வருஷத்துல 10கி ஆகுது. இப்படியே ஒவ்வொரு வருஷமும் 7-8கி கூடணும்னு உன்னை மாதிரியே ஒவ்வொரு அம்மாவும் நினைச்சா, பூமி தாங்குமா?’ன்னார்.

இன்னொரு டாக்டர்ட்ட, பூஸ்ட், காம்ப்ளான் கொடுத்தா வெயிட் கூடுமான்னு கேட்டேன். ‘உன்கிட்ட காசு நிறையா இருந்தா தாராளமா வாங்கிக் குடு. அதுக்கப்புறம் சளி, இருமல்னு எனக்கும் ஃபீஸ் தரணும். அதுக்கும் சேத்து வச்சுக்கோ’ன்னார். :-))))))))
//
ரொம்ப சரியா சொன்னீங்க ஹூஸைனம்மா. நீங்க பார்த்த டாக்டர்ங்க நல்ல அட்வைஸ் சொல்லியிருக்காங்க.